Monday, February 10, 2020

என்ன கொடுமையடா! அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

  புதுடில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தூதரகத்தில் பணிபுரியும் பணிப்பெண் ணின் மகளான அச்சிறுமி, ஊழியர்களின் குடியிருப்புக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அண்டை வீட்டுக் காரரால், அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என்று டில்லி காவல்துறை துணை ஆணையர் ஈஷ் சிங்கால் சி.என்.என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமைக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 25 வயது நிரம்பிய அந்த நபரை தயக்கம் சிறிதுமின்றி அந்த சிறுமியால் அடையாளம் காட்ட முடிந்ததால் இதில் சந்தேகத்திற்கு இடமேதுமில்லையென சிங்கால் மேலும் கூறினார்.
இது குறித்து சிஎன்என் இடம் அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் கூறும்போது தூதரக வளாகத்தில் ஒரு குழந்தை  பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட்து அறிந்து அமெரிக்கத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளானது என்றும்  தூத ரகம் துரித நடவடிக்கை எடுத்து காவல் துறைக்கு புகார் அளிக்கவும், பாதிக்கப் பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் செய்தது எனவும் கூறினார்.
இதன் மீதான விசாரணை தொடங்கி யுள்ளது. இன்னும் நீதிமன்ற விசாரணைக் கான நாள் குறிப்பிடப்படவில்லை.
2012 இல் டில்லியில் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை உலக அளவில் கண்டனத்தைப் பெற்று கவனகுவிப்பைப் பெற்றதும், இந்தியாவின் தலைநகரில் அந்த பெண்ணைப் பற்றிய நினைவுகள் அகலாத நிலையிலும்  சட்டம் இயற்று பவர்கள் தொடர்ச்சியாக பல கடுமையான சட்டத் திருத்தங்களைச் செய்தனர்.
சட்டத் திருத்தத்தில், நீடித்த சிறைத் தண்டனையும், 12 வயதுக்குக் குறைவான வர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டனை எனவும் உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...