Friday, January 10, 2020

தாழ்த்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு நீட்டிப்பு: ஆங்கிலோ இந்தியன் நியமனம் நீக்கம்

 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டித்தும், ஆங்கிலோ இந்தியன் நியமனத்தை நீக்கம் செய்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கான தனி தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத் தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்பேரவையில் மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது. இப்படி, ஒவ்வொரு முறை 10 ஆண்டுகள், 10 ஆண்டுகளாக நீட்டித்து கொண்டே வரப்படுகிறது.
இதற்கு ஒரே அடியாக 25 ஆண்டுகள் நீட்டித்திருக்கலாம். அதே நேரத்தில் ஆங்கிலோ இந்தியன் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
சிறுபான்மையாக உள்ள ஆங்கிலோ இந் தியன் மக்களுக்கு 70 ஆண்டுகளாக சட்டப் பேரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் களது பிரதிநிதித்துவத்தை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...