Friday, January 10, 2020

பெல் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது கண்டிக்கத்தக்கது தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

பெல் நிறு வனப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித் திருப்பது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலை யத்தில் செய்தியாளர்களிடம்  அவர் கூறியது: இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசு சட்டத்தை இயற்றி மக்களிடம் ஆதரவு கேட்டுச் செல்கிறது. அந்த அளவிற்கு குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு அனைத்து தரப்பு மக்க ளிடையே எதிர்ப்பு நிலவுகிறது. மேலும் அரசியல் கட்சியைச் சாராதவர்கள் இச்சட்டத்தை எதித்துஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந் நிலையில் பாஜக தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக உள்ளது. அதிமுக, பாமக இணைந்து ஆதரவு தந்த தால் தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளது.
இச்சட்டம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப் பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்து மேயானால், மக்கள் வரவேற் பார்கள். இந்த சட்டம் தமிழ கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் வருகிறது. நெல்லை கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். பாஜக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு செயல்படுவது, அரசின் பலவீனத்தைக் காட்டு கிறது. புதன்கிழமை தொழிற் சங்கங்கள்போராட்டங்கள் நடத்திய வேளையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற் பனை செய்ய மத்திய அமைச்சர வைக் கூட்டம் அனுமதி யளித்தது கண்டிக்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்பது நாடகம். அலங்காநல்லூர், பால மேடு பகுதியில் நடைபெற வுள்ள ஏர் தழுவுதல் போட்டி களை அனைத்து சமுதாயத்தி னரையும் இணைத்து நடத்த வேண்டும். இது ஜனநாயக நடைமுறை என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...