உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் லஜ்பத்
நகர் பேரணியின் போது குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக ஒரு
பதாகையை வைத்திருந்த இரண்டு பெண்கள் தங்களது வாடகை வீட்டிலி ருந்து
வெளியேற்றப்பட் டுள்ளனர்,
ஒரு அறிக்கையில், பெண் களில் ஒருவரான
சூர்யா ராஜப்பன் எழுதினார்: ஷாவின் சார்பு பேரணியை நாங்கள் அறிந்தபோது,
நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசிய லமைப்பு மற்றும் ஜனநாயக உரிமையைப்
பயன்படுத் தினோம்.
அமித்ஷா தலைமையிலான பேரணி எங்கள் பாதை
வழியாகச் செல்வதைப் போலவே, நானும் எனது சக குடியிருப்பு வாசியும் பால்
கனியில் இருந்து ஒரு பதா கையைக் காண்பித்தோம். பதா கையில் இழிவான சொற்கள்
அல்லது சொற்றொடர்களோ இல்லை என்பதை நாங்கள் உறுதிசெய்து கொண்டோம்.
"எங்கள் எதிர்ப்பைக் கவனித்தபோது,
பேரணியின் உறுப்பினர்கள் கோபமும் ஆத் திரமும் அடையத்தொடங் கினர், எங்கள்
குடியிருப்பின் கீழே உள்ள தெருவில் சுமார் 150 பேர் கொண்ட ஒரு கும்பல்
சேர்ந்த்து. எதிர்ப்பு பதாகை கிழிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு
குழு எங்கள் குடியிருப்புக்கு செல் லும் படிக்கட்டுகளில் ஏறி நின்று
கொண்டு, நாங்கள் அவர்களை உள்ளே அனுமதிக் காவிட்டால் கதவை உடைப் போம் என்று
மிரட்டினார்கள்.
இதுபோன்ற ஒரு மோசமான எதிர்வினையை
எதிர்பார்க்காத நாங்கள் உயி ருக்கு பயந்து, எங்களைப் பாது காத்துக் கொள்ள
வீட்டிற்குள் சென்று பூட்டிக் கொண்டோம். அவர்கள் வீட்டுக் கதவை பல மாக
இடித்தார்கள். காவல் துறை வந்து தலையிடும் வரை அங்கு நின்று கூச்சலிட்டனர்,
என்று அவர் எழுதினார்.
பல மணி நேரம் நாங்கள் உள்ளே
சிக்கியிருந்தோம். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்தார்
காவல் துறையினருடன் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர். நாங்கள்
காவல்துறையின் பாது காப்போடு வெளியேறினோம்."
இதற்கிடையே அப்பெண் களை வீட்டை விட்டு
வெளி யேறுமாறு வீட்டு உரிமையாளர் உத்தரவிட்டிருக்கிறார். அவரைத் தொடர்பு
கொண்டு அவர்களை வெளியேற்றுவ தற்கான காரணங்களைக் கேட்ட போது, அவர்களது செயல்
அனைவருக்கும் நெருக் கடி தருவதாக இருந்தது என வும், அவர்களை அங்கு குடிய
மர்த்தியிருக்கவே கூடாது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment