(26-12-2019 அன்றைய "இந்து" ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது)
தேசிய குடியுரிமைப் பதிவேடு ஒன்றைத்
தயாரிப்பது என்ற தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஓரளவுக்கு மென்மையானதாக
ஆக்கிக் கொண்டது என்பது பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர்
அமித்ஷாவும் வெளியிட்ட அறிவிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. என்றாலும்,
தேசிய குடியுரிமைப் பதிவேடு பற்றி மக்களிடையே பரவலாகப் பரவியிருக்கும்
அச்சங் களுக்கும், கவலைகளுக்கும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலே காரணம்
என்று பிரதமர் தெரிவித் திருக்கும் கருத்து பேராபத்து கொண்டது என்ப
துடன், எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத தும் ஆகும். அரசினால்
தேசிய குடியுரிமைப் பதிவேடு பற்றி எந்த விதமான விவாதமும்
மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் கூறி இருப்பது அறிவார்ந்த ஓர்
அறிவிப்பாக இருக்கக் கூடும் என்றாலும், அது மக்களின் அச்சத்தைப்
போக்குவதற்கு உறுதியளிப்பதாக நிச்சயமாக இல்லை. நாடு தழுவிய தேசிய
குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பதைப் பற்றி நாடாளுமன்றத்திலும் உள்துறை
அமைச்சர் ஷா பேசியதுடன் ,பல மூத்த அரசு அதிகாரிகளாலும் திரும்பத் திரும்ப
அறி விக்கப் பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப் பட்ட
குடியுரிமை திருத்த சட்டத்துடன், இந்த தேசிய குடியுரிமை பதிவேட்டுத்
திட்டமும் சேர்த்து நடைமுறைப் படுத்தப்பட்டால், ஆவண ஆதாரங்கள் இல்லாத,
ஏழை சமூக மக்கள் தங்களது குடியுரிமையை இழக்கச் செய்யவும்
துன்புறுத்தப்படவும் நேரும் என்ற கவலை எவர் ஒருவரது கற்பனையில் இருந்து
தோன்றியதில்லை. அது போன்ற ஒரு தொடர்பு ஆளும் ஆட்சி யாளர்களால்
உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
குடியுரிமை திருத்த சட்டம்- தேசிய
குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றின் இணைப்புக்குப் பின்ன ணியில் உள்ள
அரசியல் சிந்தனை, ஊடுருவியர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரிடையே மோடி
ஏற்படுத்திக் காட்டிய வேறுபாடுதான். மதத்தின் அடிப்படையில் அவர்களைப்
பிரித்துக் காண முடியும் என்பது போல அது இருக்கிறது. 2014 மக்களவைத்
தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த வாதம் முன் வைக்கப்பட்டது.
தேசிய குடியுரிமைப் பதிவேடு பற்றி
பொய்யான தகவல்களை அளித்து வருவதாக எதிர்க் கட்சிகள் மீது குற்றம் சாட்டிய
அதே பேச்சில் மேற்கண்ட வாதத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியிருப்பது
பெரும் கவலை அளிக்கக் கூடிய பெரிய அவலமாகும்.
தேசிய குடியுரிமைப் பதிவேடு பற்றி
தங்களது கடுமையான நிலைப்பாட்டைப் பற்றி மறு பரிசீலனை செய்வதாக இருந்தால்,
அரசு வெளிப் படையாக அதனைத் தெரிவிக்க வேண்டும். குறைந்த அளவில், அரசைப்
பற்றி விமர்சிப்ப வர்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டும். இது வரை
விளக்கம் என்று அரசால் தெரிவிக்கப் பட்டுள்ளவை அனைத்தும், பிரச்சினையை
மேலும் மேலும் குழப்பம் அடையச் செய்பவையாக மட்டுமே உள்ளன.
உண்மையைக் கூறுவதானால், தனது நிலைப்
பாட்டைப் பற்றி அரசு தீவிரமான மறுபரிசீலனை ஒன்று மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியுள்ள மிகத் தீவிரமான பிரச்சினைகள்
பலவற்றில் நமது நாட்டின் சீரழிந்த பொருளாதார நிலையும் ஒன்று, பிரதமராகப்
பதவியேற்ற பிறகு 2014 ஆம் ஆண்டில் மோடி நிகழ்த்திய அவரது முதல்
சுதந்திர நாள் உரையில், மத-ஜாதி சண்டைகளுக்கு அடுத்த 10 ஆண்டு
காலத்துக்கு இடம் அளிக்கக் கூடாது என்று பேசினார். அது மட்டுமன்றி,
நாடாளு மன்ற பெரும் பான்மையின் அடிப்படையில் அல்லாமல், கருத் தொற்றுமை
அடிப்படையில் நாட்டின் ஆட்சியை நடத்திச் செல்வேன் என்றும் அவர் உறுதி
அளித் திருந்தார். அந்த உறுதிமொழியை நடைமுறைப் படுத்தும் வகையிலும், தனது
தவறான கொள்கை முன்னுரிமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காயங்களை
ஆற்றும் வகையிலும் பணியாற்ற வேண்டிய நேரம் இதுதான். ஆட்சி மற்றும் கட்சி
யின் அதிகாரப் படி வரிசையில் உள்ளவர்கள் மக்களின் மாறுபட்ட
கண்ணோட்டங்கள் பற்றியும், அரசியல் எதிர்கட்சிகள் பற்றியும் கொண்டுள்ள
சகிப்புத் தன்மை இன்மை பேரச்சம் அளிக்கும் வழியில் வெளியிடப்பட்டு
வருகின்றது.
தேசிய குடியுரிமைப் பதிவேடு, குடியுரிமை
திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது
வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட எதிர்க் கட்சிக்காரர்களை பழி
தீர்த்துக்கொள்ளப் போவதாக உத்தரப் பிரதேசமுதல்வர் யோகி ஆதித்தியானந்த்
சபதம் செய்திருக்கிறார். போராட் டத்தின் போது, காவல் துறையினர் ஒரு முறை
கூட துப்பாக்கியால் சுடவில்லை என்று கூறும்போது, எவ்வாறு பல போராளிகள்
துப்பாக்கிக் குண்டு களுக்கு உயிரிழந்தார்கள் என்பதற்கு உத்தரப் பிரதேச
மாநில காவல் துறை மன நிறைவு அளிக்கும் விளக்கம் எதனையும் அளிக்கவில்லை.
தேசிய குடியுரிமைப் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை
எதிர்ப்ப வர்களை எல்லாம் துடைத்து எறிந்துவிடுவோம் என்று ஒரு பா.ஜ.க.
சட்டமன்ற உறுப்பினர் அச்சுறுத்தியுள்ளார்.
எதிர் கட்சிகளை பிரதமரே குறை
கூறியதற்குப் பிறகும், மேலும் பல பா.ஜ.க. பொறுப்பாளர்கள்,தேசிய
குடியுரிமைப் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக
அச்சுறுத்தும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்
கின்றனர்.
தனது பேச்சின்படி தனது சொல்லைக்
காப்பாற்ற இயன்ற ஒரு மனிதர் தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில்,
தனது ஆணையே கட்சியிலும், ஆட்சியிலும் செல்லத் தக்கது என்பதை பிரதமர்
மோடி மெய்ப்பிக்க வேண்டும்.?
நன்றி: 'தி இந்து' 26-12-2019
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment