Wednesday, January 8, 2020

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திருத்தத்துக்கு விளக்கம் கேட்கும் பொதுநல வழக் கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீடு சலுகைகள் பெறாத உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தால், தமிழ கத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 6 சதவிகித இட ஒதுக்கீட்டில் பாதிப்புகள் இருக்குமா என்ற விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்ற வழக் குரைஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று (7.1.2019) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு கல்வி - வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு வழங்க அந்தந்த மாநில அரசு களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடி யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதை மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ்வரும் துறைகளில் மட்மே செயல்படுத்தியுள்ளது என்றும் பதில் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...