Wednesday, January 8, 2020

பழந்தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு மாற்றலாமா? பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மைசூருவில் உள்ள பழைமையான தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறைக்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கோமதிபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிமாறன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கருநாடக மாநிலம் மைசூருவில், மத்திய தொல்லியல் துறையின் மண்டல அலுவலகம் உள்ளது. இதன் கல்வெட் டுத் துறையால், நாட்டின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழமையான கல்வெட் டுகள், பனை ஓலை, செப்பேடுகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்படுகின்றன. தமிழர்களின் அரசியல், சமுதாயம் மற் றும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக உறுதி செய்வதற்கான பல ஆதாரங்கள் அங்கு உள்ளன. கல்வெட்டுத் துறை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற் றப்பட்ட போது, பல கல்வெட்டுகளும், படிமங்களும் சேதமாகின. பெரும்பா லான கல்வெட்டுகள் போதிய பராமரிப் பின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளன.
தமிழகத்திலுள்ள கழுகுமலை கோயில், திருச்சி பெட்டவாய்த்தலை, விழுப்புரம் மண்டகப்பட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்களில் உள்ள பழைமையான தமிழ் கல்வெட் டுகளும் போதிய பராமரிப்பின்றி சேத மடையும் நிலையில் உள்ளன. கல்வெட் டுத்துறை இயக்குநர் பணியிடமும் காலி யாக உள்ளது. 5 பேர் மட்டுமே நாடு முழுவதும் கல்வெட்டியல் ஆராய்ச்சியில் உள்ளனர். போதுமான நிதி ஒதுக்காத தால், ஆய்வுப் பணிகள் பாதிக்கிறது. எனவே, மைசூரு கல்வெட்டுத் துறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக தமிழ் கல் வெட்டுகள், தொல்லியல் ஆவணங்களை உடனடியாக சென்னை தொல்லியல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மாற் றவும், கல்வெட்டு மற்றும் ஆவணங்களை படிமம் எடுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தவும், தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.
இதேபோல், தஞ்சை நீலகண்டன் தாக்கல் செய்த மனுவில், ‘‘தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தொல்லியல் துறை முன்னனுமதியின்றி தஞ்சை பிர கதீஸ்வரர் கோயில் பகுதியில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், பழமை யான தொல்லியல் சின்னங்கள், கல் வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட் டவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொல்லியல் துறையின் முன் அனுமதியின்றி பாதுகாப்பின்றி எந்தப் பணிகளையும் பிரகதீஸ்வரர் கோயில் பகுதியில் மேற்கொள்ளக் கூடாது’’ என உத்தரவிடுமாறு கூறியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
மத்திய தொல்லியல் துறை தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் கள் தரப்பு மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘ இந்தியாவில் இதுவரை கிடைத்த ஒரு லட்சம் கல் வெட்டுகளில் சுமார் 66 ஆயிரம் கல் வெட்டுகள் தமிழில் உள்ளன. 1800 லிருந்து சேகரிக்கப்பட்ட மசிப்படிகள் பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளன. இவற்றை ஆவணப்படுத்தி மின்னாக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...