அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு
வைத்து, பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா,
ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு
நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.
அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக் கப்பட்ட
இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப் படியாக
குறைக்க வேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதித்த
பொருளாதாரத் தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப் பெற வேண்டும்.
ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப் பந்தத்தில்
இருந்து விலகுவதாக அமெ ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு
அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார்.
இதன்காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா
இடையே மோதல் வெடித் தது. அதனை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தின்
நிபந்தனைகளை புறக் கணிப்பதாக ஈரான் படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி
அணுசக்தி ஒப்பந்தத்தின் 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஈராக்
தலைநகர் பாக்தாத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் அருகே அமெரிக்க
ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தள பதி காசிம் சுலைமானி
கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையி லான மோதல் வலுவடைந்து போர்
பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந் தத்தை
முழுமையாக ரத்து செய்துவிட்ட தாக ஈரான் அறிவித்துள்ளது. தலைநகர் டெக்ரானில்
நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment