Wednesday, January 8, 2020

இந்து ரக்ஷா தள்மீது என்ன நடவடிக்கை?

புதுடில்லி ஜவகர்லால் நேரு  பல்கலைக்கழகத்தில் 5.1.2020 அன்று முகமூடி அணிந்த நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்து அமைப்புகள் காரணம் என்று கூறிவந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பாக செயல்படும் இந்து ரக்ஷா தள் என்ற இந்து பாதுகாப்பு படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்திரி கூறிய போது, “தேசத்தின் நலனுக்காக மோடி அவர்களும், அமித்ஷாவும் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். அவர்களின் உழைப்பை மாணவர்கள் என்ற பெயரில் உள்ள தீவிரவாதிகள் வீணடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஆகவே இவர்களுக்குப் பாடம் புகட்ட நாங்களே தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தோம். மாணவர்கள் என்ற தீவிரவாதிகளின் தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம், இது துவக் கமே! இனி தேசத்திற்கு எதிராக போராடும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் மாணவர் தீவிரவாதிகள் மீது எங்கள் தாக்குதல் தொடரும்" என்று தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார். இதனை அடுத்து  அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்கள் புகார் அளித்திருந்தனர். தற்போது தாக்குதல் நடந்த இடங்களை டில்லி குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தும் நிலையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பிங்கி சவுத்திரியிடம் விசாரணை நடத்த டில்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாம்.
இந்து ரக்ஷா தள் அமைப்பின் கூட்டாளிகள் 2017இல் தசரா தினத்தன்று காசியாபாத்தில் இந்துத் தேசத்தின் பாதுகாப்பிற்காக சூளுரைப்போம் என்று கூறி துப்பாக்கிச் சூடு நடத்தி சாஸ்த்ரா பூஜை நடத்தியபோது  இந்துத்துவ அமைப்பின் இத்தகைய துணை அமைப்புகள் தலைமையின் மீது பழி விழாமல் இருக்க நாட்டில் நடக்கும் கொடூரங்களை தங்களுக்குள்ளேயே பகிர்ந்துகொள்கின்றன.
2013 ஆகஸ்ட் 20இல் மூடநம்பிக்கைக்கு எதிரான சமூகச் செயற்பாட்டாளரும், பகுத்தறிவுவாதியுமான நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே, 2015 நவம்பர் 20இல் கொலை செய்யப்படுகிறார்.
தபோல்கர், பன்சாரே, கல்வியாளர் கல்புர்கி, ஊடகவியலாளர் கவுரிலங்கேஷ் என இவர்கள் எல்லாம் ஏன் கொலை செய்யப்பட்டனர்?  மதச்சார்பற்ற குடியரசை ஒரு குறுகிய இந்து தேசமாக மாற்ற நடக்கும் முயற்சிகளான  இவை மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் இவற்றை எல்லாம் நம்பும் எல்லோருக்கும் இப்படி ஒரு  சக்திகள் அதிகாரத்துக்கு வருவது என்பது மிகப் பெரும் ஆபத்தே!
குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் பசு ஆதரவா ளர்கள் தாழ்த்தப்பட்டவர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்குகிறார்கள். அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலாவின் தற் கொலை மூலம் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் குரலை நசுக்கி, அவர்களைக் கொடியவர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகளை பாரதீய ஜனதாவின் மாணவர் அணியான அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் செய்துவருகிறது. ஜே.என்.யூ. போன்ற பல பல்கலைக்கழக வளாகங்களில் இந்த மாணவர் அமைப்பு மாணவர்களை தேசபக்தர்கள், தேசத்துரோகிகள் என்று இரு அணிகளாகப் பிரிக்க முயல்கிறது.
மும்பையில் 2008இல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இறந்தவர்களில்  ஹேமந்த் கர்கரேவும் ஒருவர். இவர் மகாராட்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர். இந்து தீவிரவாதிகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் இடை யேயான தொடர்பு, இந்து தீவிரவாத அமைப்பான  அபினவ் பாரத் நடத்தியதாகச் சொல்லப்படும் 2006 மெலகான் குண்டு வெடிப்புகளை ஆய்வுசெய்வது என்று செயல்பட்டு வந்தார் கர்கரே.  இது குறித்த முழு ஆவ ணங்களையும் சேகரித்து பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், ராணுவ மேஜர் புரோகித் போன்றவர்களைக் கைதுசெய்தார். ஆனால் திடீரென தீவிரவாத தாக்குதலில் இவர் மரணமடைந்தார். இந்து தீவிரவாத அமைப்பின் உண்மையை வெளிக் கொண்டு வரும் நேரத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். அவரது கொலைக்கு ஒரே சாட்சியாக இருந்த முகமது கசாப்பும் தூக்கிலிடப்பட்டார்.
மேலே கூறிய அனைத்து நடவடிக்கைகளிலும், சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் போன்ற நிழல் இந்துத்துவ இயக்கங்களின் கைவரிசை உள்ளது. இந்த நிழல் இந்துத்துவ இயக்கத்தில் ஒன்றுதான் இந்து ரக்ஷா தள்.  இந்தத் தாக்குதலின் பின்னால் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உள்ளது என்ற உண்மை வெளிவந்த பிறகு, உடனே "அவர்கள் அல்ல, நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம்" என்று இந்த அமைப்பு முன்வந்துள்ளது. இது திரைப்படங்களில் முக்கிய குற்றவாளியைத் தப்பவைக்க அடியாள் ஒருவர் தானே குற்றவாளியாக மாறி காவல்துறையிடம் சரணடைவது போன்றது ஆகும்.
சங்பரிவார்கள் பல பெயர்களில் முகமூடியாகத் திரிவார்கள் (ஜேஎன்யூ பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக்கூட முகமூடி அணிந்துதான் செய் துள்ளனர் என்பதைக் கவனிக்கவும்) பெயர்கள்தான் வெவ் வேறானவையே தவிர எல்லாமே ஹிந்து வெறித்தனம் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகளே.
சரி, இந்து ரக்ஷா தள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மீது நியாயமான, நாணயமான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா? இதைத் தான் நாடு எதிர்பார்க்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...