Tuesday, December 10, 2019

மூத்தோர் தடகளம்: தங்கம் வென்ற மூதாட்டி


மலேசி யாவில் நடந்த மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். தஞ்சாவூர் பட்டுக் கோட்டை அடுத்த அணைக் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி 72.  ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை. கணவர் இறந்து விட்டார்.
இரண்டு மகள்கள் உள் ளனர்.திலகவதி பட்டுக் கோட்டை அரசு பெண் கள் மேல்நிலை பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி யாற்றி 2006இல் ஓய்வு பெற்றார்.
விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாக தேசிய அளவிலான பல்வேறு போட் டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். மலேசியாவில் மூத்தோருக் கான 21ஆவது ஆசிய தடகளப் போட்டி டிச. 2 முதல் 7ஆம் தேதி வரை நடந்தது.  இதில் பங்கேற்ற திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்த யத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.
திலகவதி கூறுகையில்,' படிக்கும் போதே 1965இல் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென் றுள்ளேன்.  தொடர்ந்து விளை யாட்டின் மீது ஆர்வம் இருந் ததால் பணி ஓய்வு பெற்றும் மூத்தோருக்கான போட்டிகளில் பங்கேற்று வரு கிறேன்'' என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...