Monday, December 23, 2019

விவசாயிகள் மீது மேலும் பேரிடி

நாடு முழு வதும் விவசாயிகள், விவசாயத் துக்கு தேவையான பணத் தைப் பெற வங்கிகளில் தங்களது நகைகளை வைத்து கடன் பெறுவது வழக்கம். இதற்கு 11 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலை யில், 4சதவிகிதம் வட்டி மானி யமாக அளிக்கப்பட்டு வந் தது. தற்போது, இந்த 4 சத விகித மானிய வட்டியை மத் தியஅரசு ரத்து செய்து உள் ளது. இது விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.
இனிமேல், 7% வட்டியில் விவசாய நகைக்கடன்களை வழங்கக் கூடாது என வங்கிக ளுக்கு மத்திய அரசு அறிவு றுத்தி உள்ளது. தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் நகைகளை வைத்து விவசாய கடன் பெறும்போது வட்டி 7 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில்,  கடந்த 2015ஆம் ஆண்டு 11 சதவிகித மாக மத்தியஅரசு உயர்த்தி யது.
இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வட்டியில் 4 சத விகிதம் மானியமாக வழங்கப் படும் என்றும் 7 சதவிகித வட்டியே வசூலிக்கப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்து. இந்த நிலையில், விவ சாயிகளுக்கான மானிய வட் டியில், விவசாயிகளாக இல் லாதவர்களும் விவசாய நகைக் கடன் பெற்று வருவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், மத் தியஅரசு வழங்கி வந்த 4 சதவிகித மானியத்தை ரத்து செய்துள்ளது. இனி மேல், 7 % வட்டியில் விவசாய நகைக் கடன் வழங்கக்கூடாது  என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கடந்த  அக்டோ பர் 1ஆம் தேதி  முதல் வழங் கப்பட்ட விவசாய நகை கடன் வட்டியை உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இது விவசாயிகளி டையே பரபரப்பையும், அதிர்ச் சியையும்  ஏற்படுத்தி உள்ளது

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...