ஆந்திர மாநிலம், சித்துர் மாவட்டத்தில்
உள்ள, வரதய்யா பாளையத்தில், கல்கி சாமியார் ஆசிரமம் உள்ளது. இதன் கிளைகள்
மற்றும் அலுவலகங்கள், ஆந்திரா, தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும்
உள்ளன. இந்த ஆசிரமத்தின் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரில், அக்., 10ஆம்
தேதி, ஆசிரமங்கள், அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சோதனையின் முடிவில், கல்கி சாமியார், 800
கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு
தொடர்பாக, கல்கி சாமியார் விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள்
பிரீத்தா உள்ளிட்டோரிடமும், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய்
மதிப்பிலான சொத்துக்களை, வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:கல்கி ஆசிரமம் சார்பில், 'ஒன்னெஸ் பல்கலை' செயல்படுகிறது, இதில்
பணியாற்றும் பேராசிரியர்களின் பெயரில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா
மாநிலங்களில், பல நுறு ஏக்கர் நிலத்தை, சாமியார் வாங்கி குவித்துள்ளார்.
யார் யார் பெயரில், இந்த சொத்துக்கள்
வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இவற்றில், பல
கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தற்போது முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment