Saturday, December 21, 2019

உன்னாவ் சிறுமி பாலியல் வன்முறை வழக்கு பாஜக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 2017 ஆம் ஆண்டில் பங்கர்மா தொகுதி யில் பாஜக சார்பில் 4 தடவை  சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார் என்பவர் தன்னை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த புகாரைத் தொடர்ந்து குல்தீப் சிங் செங்காரும், அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் என்பவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உறவினர்களுடன் கடந்த ஜூலை மாதம் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில் உறவினர்கள் 2 பேர் பலியாகினர். அந்த சிறுமியும் வழக்குரைஞரும் படுகாய மடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப் பட்டது. இந்த விபத்து தொடர் பாக குல்தீப் சிங் செங்கார்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால், வேறுவழி இல்லாமல், குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது.
உச்சநீதிமன்றத்தின்  உத்தர வுப்படி இந்த  வழக்கு விசா ரணை லக்னோ நீதிமன்றத்தி லிருந்து டில்லியில் உள்ள மாவட்ட நீதி மன்றத்திற்கு  மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து  ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வழக்கின் விசா ரணை நாள்தோறும் நடை பெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை டில்லி  மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் டிசம்பர்  10 அன்று நடைபெற்றது. டிசம்பர்  16 அன்று   நீதிபதி தர்மேஷ் சர்மா அளித்த தீர்ப்பில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்ற வாளி என்று அறிவித்தார். அவரது கூட் டாளி சாஸ்திரி சிங் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தண்டனை விவரங் களை டிசம்பர் 20 அன்று  நீதிபதி அறிவித்தார். சிறுமியை பாலியல் வன்முறை செய்த குற்றவாளியான சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கா ருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து டில்லி மாவட்ட  நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தர விட்டார்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...