Monday, December 23, 2019

தொலைத் தொடர்புத் துறையும் 7.06 சதவிகிதம் வீழ்ச்சி! மாநிலங்களவையில் மத்திய அரசே ஒப்புதல்!

இந்திய தொலைத் தொடர்புத்துறை வருவாய், 7.06 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசே மாநிலங்களவையில் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய அரசு, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அமல்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், புதிய தொலைத் தொடர்பு கொள்கை மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு? என மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, தொலைத்தொடர்பு சேவைத் துறையின் 2018_2019ஆம் ஆண்டுக்கான வருவாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடி ரூபாய் இது 2017-2018இல் 1 லட்சத்து 55 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது 7.06 சதவிகிதம் வருவாய் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2017-2018ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனாளர் மூலம் சராசரியாக 12,485 ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இது 2018_19 நிதியாண்டில் 7,139 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...