Thursday, December 12, 2019

ராயல் சொசைட்டியின் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ் ணன் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள் ளார் வேதியல் அறிஞர் வெங் கட்ராமன் ராமகிருஷ்ணன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தில் மூலக்கூறு உயிரியலுக் கான ஆய்வகத்தில் உள்ளார், ஆனால், வாரத்தின் ஒரு பகுதியை லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் தலைமையகத்தில் செலவிடு கிறார். சமீபத்தில் அவர் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப் போது அவர் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில்,“நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இந்தியாவை மிகவும் விரும்பு கிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத்தன்மையுள்ள இலட் சியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நான் எப் போதும் நினைக்கிறேன், இந்தியா வெற்றிபெற வேண் டும் என்றும் நான் விரும்பு கிறேன்.'' ”இந்திய இளைஞர் கள் மிகவும் ஆர்வமுள்ள வர்கள், கடினமான சூழ் நிலைகளில் ஏதாவது செய்ய முயல்கிறார்கள். எந்தவொரு மதத்திற்கும் சாதகமாக இல்லாத ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகமாக இந்தியா முடிவு செய்தது. அதுதான் இந்தியாவின் அடிப்படை, அதனால்தான் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதேசமயம் பாகிஸ்தானில் முஸ்லிமல்லாதவர்கள் அதிக அளவில் இல்லை. பாகிஸ் தானில் ஒரு சதவீதம் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள். நாம் பாகிஸ்தானியர் அல்ல. நாம் மதச்சார்பற்றவர்களாக இருப்பதால் வேறுபட்டவர் களாக உள்ளோம். இந்தி யர்கள் இடையே, இது ஒரு சிறந்த அம்சம். இந்தியாவில் எல்லா மதத்தவரும் பொறுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அப்படி இருக்கக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போன்ற ஒரு தவறான நட வடிக்கை தேவையற்றது'' என வெங்கடராமன் கூறி உள்ளார்.

அய்.அய்.டி. யில் கடந்த 5 ஆண்டுகளில்
7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி யுள்ளது.
இதுதொடர்பான தக வலை, மக்களவையில் மனித வள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 7, 248 மாணவர்கள்
அய்.அய்.டி.யின் பி.டெக் படிப்பில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இது கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட புள்ளி விவரங் களாகும். அதன் பிறகு அவர் கள் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். படிக் கும் தருணத்தில் ஏற்படும் அழுத்தங்களே இதற்கு கார ணம் என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகளில் 2,000 மாணவர்கள் அய்.அய்.டி.யில் இருந்து வெளியேறி இருக் கின்றனர். அதிலும் குறிப்பாக, 2 ஆண்டுகளில் டில்லி மற்றும் கோரக்பூர் அய்.அய்.டி.யில் இருந்து மட்டும் 1,400 பேர் பாதியில் கல்வியை கைவிட் டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு 11,000 மாணவர்கள் அய்.அய்.டி.யில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு களில் சேர்ந்திருக்கின்றனர். படிப்புக்கு பிறகு வேலை வாய்ப்புக்கான உறுதி இல் லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...