அய்.அய்.டி. யில் கடந்த 5 ஆண்டுகளில்
7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி யுள்ளது.
இதுதொடர்பான தக வலை, மக்களவையில் மனித வள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 7, 248 மாணவர்கள்
அய்.அய்.டி.யின் பி.டெக் படிப்பில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இது கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட புள்ளி விவரங் களாகும். அதன் பிறகு
அவர் கள் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். படிக் கும்
தருணத்தில் ஏற்படும் அழுத்தங்களே இதற்கு கார ணம் என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகளில் 2,000 மாணவர்கள் அய்.அய்.டி.யில் இருந்து வெளியேறி இருக்
கின்றனர். அதிலும் குறிப்பாக, 2 ஆண்டுகளில் டில்லி மற்றும் கோரக்பூர்
அய்.அய்.டி.யில் இருந்து மட்டும் 1,400 பேர் பாதியில் கல்வியை கைவிட்
டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு 11,000 மாணவர்கள் அய்.அய்.டி.யில் பட்டப்படிப்பு
மற்றும் பட்டமேற்படிப்பு களில் சேர்ந்திருக்கின்றனர். படிப்புக்கு பிறகு
வேலை வாய்ப்புக்கான உறுதி இல் லாததால் அவர்கள் இந்த முடிவை
எடுத்திருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.
No comments:
Post a Comment