‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன
வேதனை அடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய
உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
நெல்லை ஊருடையார்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் தனலட்சுமி (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக தச்ச நல்லூர்
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தன லட்சுமி உடலை கைப்பற்றி
ஆய் வுக்காக பாளையங் கோட்டை அய்கிர வுண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி
வைத்தனர்.
தொடர்ந்து தனலட்சுமி எதற் காக தற்கொலை
செய்து கொண் டார் என்பது குறித்து தச்சநல்லூர் காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத் தினார்கள்.
விசாரணையில் பிளஸ்-2 முடித்த தனலட்சுமி
மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனால் அவர் மருத்துவப்
படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வை எழுதினார். ஆனால் அதில் அவர்
குறைந்த மதிப்பெண் எடுத்தார்.
இதனால் அவரால் மருத்துவப் படிப்பு படிக்க முடிய வில்லை. இதன் காரணமாக அவர் கடந்த சில நாட் களாக மனவேத னையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந் தது.
மேலும் மாணவி எழுதிய உருக்க மான கடிதம்
காவல்துறை நடத்திய சோதனையில் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘நீட்’ தேர்வில்
குறைந்த மார்க் கிடைத்துள்ளதால், மருத் துவம் படிக்க முடியாமல் போனது
மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் வெற்றி பெற்று மருத்துவராகி இருந்தால்
எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைபட்டு
கிடக்கிறேன். எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வாழப் பிடிக்காத
தால் தற்கொலை செய்கிறேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில் எழுதியதை கேட்ட உறவினர்கள் கதறி அழு தனர்.
இந்த கடிதத்தை வைத்து காவல்துறையிர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment