சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என் னும் தகவல் வெளியாகி யுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள் ளன. கடந்த கல்வி ஆண்டிற் கான முழு
ஆண்டு தேர்வு விடுமுறை முடிந்து 2019_ 2020ஆம் கல்வியாண்டிற் கான
வகுப்புகள் ஜூன் 3இல் தொடங்கின. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளி களில்
மாணவ, மாணவி களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனைத்தும் பள்ளி
தொடங் கும் முதல் நாளிலேயே வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில்
அறி விக்கப்பட்டது.
தொடக்கப் பள்ளி, நடு நிலைப்பள்ளிகளில்
மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையில் முதல் பருவத் திற்கான தொகுதி ஒன்று
புத்தகங்கள் இதுவரை வழங் கப்படவில்லை. தொகுதி ஒன்றில் தமிழ், ஆங்கிலம்
பாடங்கள் இருக்கும். மொழிப்பாடங்களுக்கு பள்ளி திறந்து இரண்டு மாதங்கள்
முடிந்த நிலையில் புத்தகங்கள் வழங்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்
படுத்தியுள்ளது.
கல்வி அலு வலகங்களில் புத்தகங்கள்
குறித்து தலைமையாசிரியர், ஆசிரியர் கேட்கும் நிலையில், அது குறித்து
தங்களுக்கே எந்த தகவலும் வரவில்லை என கல்வித்துறை அலு வலர்கள்
தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள்
தட்டுப்பாடு இல்லாத நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களுக்கு மட்டும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.
இப்பள்ளி மாணவர் களுக்கு எப்போது வேண்டு
மானாலும் புத்தகங்கள் வழங்கலாம் என்ற நட வடிக்கை கண்டித்தக்கது. அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகளை கல்வித்துறை புறக்கணிப்பு செய்து வரு கிறது. தற்போது
காலாண்டு தேர்வு வரவுள்ளது. ஆனால் மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையில்
மொழிப் பாடங்களுக்கான புத்தகங் களே இதுவரை வழங்கப்பட வில்லை. மாணவர்களின்
கல்வியை பாதிக்க செய்யாமல் கல்வித்துறை உடனடியாக புத்தகங்கள் வழங்க நட
வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment