சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் : தாழ்த்தப்பட்டவர்களுக்கு
24 மடங்கு அதிகரிப்பாம்!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம்
வகுப்பு படிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் செலுத்தி வந்த ரூ.50 என்ற
தேர்வுக் கட்டணத்தை ரூ.1200 என சிபிஎஸ்இ உயர்த்தி யுள்ளது.
சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக்கல்வி
வாரியத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப் புகளில்
படிக்கும் மாணவர்களுக் கான தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ அதிரடியாக உயர்த்தி
யுள்ளது. மேற்கண்ட வகுப்புகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்
இதுவரை ரூ.50 தேர்வுக் கட்டணம் செலுத்திவந்தனர். அவர்கள் இனிமேல் ரூ.1200
செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் முன்பு ரூ.750 செலுத்தி வந்தனர்.
இனிமேல் ரூ.1500 செலுத்த வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பில்
தற் போது படித்து வரும் மாணவர்கள், 9ஆம் வகுப்பு படிக்கும் போதே 10ஆம்
வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல 12ஆம் வகுப்பில்
படிக்கும் மாண வர்கள் 11ஆம் வகுப்பு படிக்கும் போதே, 12ஆம் வகுப்பு
தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த இரு வகுப்புகளுக்கான தேர்வுக் கட்ட
ணத்தையும் சிபிஎஸ்இ கடந்த வாரம் உயர்த்தியுள்ளது. இதை யடுத்து, ஏற்கெனவே 10
மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுக்கான பதிவு களை பள்ளிகள் தொடங்கி பழைய கட்டண
அடிப்படையில் வசூ லித்து இருந்தால், தற்போது உயர்த் தப்பட்ட கட்டணத்தை
அடிப்ப¬ டயாக கொண்டு மீதித் தொகையை பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றும்
தெரிவித் துள்ளது.
உயர்த்தப்பட்ட புதிய தேர்வுக்
கட்டணத்தின்படி எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் 5 பாடங்களுக்கு தேர்வுக்
கட்டணமாக தற்போது ரூ.1200 செலுத்த வேண்டும். பழைய கட்டணத்தின் படி ரூ.50
செலுத் தினால் போதும் என்று இருந்தது. தற்போது 24 மடங்கு கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுப்பிரிவு மாணவர்கள் 5 பாடங்களுக்கான
தேர்வு எழுத முன்பு ரூ.750 செலுத்தினால் போதும், தற்போது அவர்கள் ரூ.1500
செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டணம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு
பொருந்தும் என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய கட்டண
விகிதத்தின்படி, எஸ்சி எஸ்டி பிரிவு மாணவர்கள் 12ஆம் வகுப்பில் ஏதாவது
கூடுதல் பாடங்களை எழுதினால் அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற
நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வு
எழுதினால் கூடுதலாக ரூ.300 சேர்த்து செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு
மாணவர்கள் இது போல கூடுதலாக பாடத்தை எழுத விரும்பினால் முன்பு ரூ.150
செலுத்த வேண்டும். தற்போது அவர்கள் ரூ.300 கூடுதலாக செலுத்த வேண்டும்.
நூறு சதவீதம் கண்பார்வையற்ற வர்கள்
தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத் தின்படி வித்தியாச தொகையை கடைசி
தேதிக்குள் செலுத்தா விட்டால் தேர்வு எழுத அனு மதிக்கமாட்டார்கள். இடம்
பெயர்வதற்கான(Migration) கட்டணம் முன்பு ரூ.150 என இருந்தது. தற்போது அந்த
கட்டணம் ரூ.350 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிபிஎஸ்இ தேர்வு
எழுத பதிவு செய்துள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங் களுக்கு
ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த கட்டணம் ரூ.5 ஆயிரம் என
இருந்தது. இவற்றில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களுடன் கூடுதல்
பாடங்களை எழுத விரும் பினால் முன்பு ரூ.1000 செலுத்த வேண்டும். இப்போது
ரூ.2000 செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment