புதுடில்லி,
ஆக. 7- டில்லி பல்கலைக் கழகத்தில்
பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள தமிழ்
பேராசிரியர் களுக்கான பதவிகளை நிரப்ப மக்களவையில்
நேற்று வலியுறுத்தப்பட்டது. இதை இந்தியன் யூனியன்
முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர்
கே.நவாஸ் கனி பூஜ்ஜிய
நேரத்தில் எழுப்பி னார்.
இது குறித்து ராமநாதபுரம் தொகுதி உறுப்பினரான நவாஸ்
கனி பேசியதாவது: டில்லியில் சுமார் பதி மூன்று
லட்சம் தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. இவர்களுக்காக டில்லி தமிழ் கல்வி
சங்கத்தினரால் நடத் தப்படும் ஏழு
தமிழ் பள்ளி களில் ப்ளஸ்டூ
வரை தமிழ் பயிலும் மாணவர்கள்
உள்ள னர். இவர்களுக்கு பள்ளிக்
கல்வி பெறுவதில் எந்த பிரச் சினையும்
இல்லை. ஆனால், பள்ளிக்கு பின்
உயர்கல்வி பயில அவர்களுக்கு பெரும்
பிரச்சினையாக உள்ளது.
டில்லி
பல்கலைக்கழகத் தின்கீழ் செயல்படும் இரண்டு முக்கியமான கல்லூரிகளிலும்
தமிழ்மொழிக்கான பேராசிரி யர் பணியிடம் நிரப்பப்படா
மல் உள்ளது. லேடி சிறீராம்
மகளிர் கல்லூரியிலும், மிராண்டா ஹவுஸ் மகளிர் கல்லூரியிலும்
சுமார் பத்து ஆண்டுகளாக தமிழ்
மொழிக் கான பேராசிரியர் பணியிடம்
காலியாகவே உள்ளன. இவர்களில் பெண்குழந்
தைகள் அதிகம் என்பதால் அவர்களால்
தம் உயர்கல் வியை தொடரமுடியாமல்
உள்ளது. டில்லியில் மத்திய அரசின் கல்வியியலுக்கான
(பிஎட்) நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல்
தமிழ்பா டப் பிரிவு மூடப்பட்டுள்ளது.
இதற்கு
அந்த துறையில் நிலவும் உட்பூசல் காரணமாக
உள்ளது. ஆனால், அதற்கான நுழைவுத்தேர்வில்
தமிழ் மாணவர்கள் தகுதிபெறுவ தில்லை எனத் தவறானக்
காரணம் கூறப்பட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத் தின்கீழ்
செயல்படும் இந்த மத்திய அரசின்
நிறுவனம், கல்வியியலில் உயர்கல்வி நிறு வனமாக செயல்படும்
இந்த நிறுவனம் 1947 ஆம் ஆண்டு, இந்தியாவின்
முதல் மத்திய கல்வித்துறை அமைச்சரான
மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால்
அமைக்கப்பட் டது. இதில், தமிழுக்காக
ஏழு உள்ளிட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொது
நுழைவுத்தேர்வின் அடிப் படையில் தேர்வு
செய்யப் பட்டு வந்தனர். கடந்த
மூன்று ஆண்டுகளாக தமிழுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத் தப்பட்டு அந்த
இடங்களை வேறு பாடப்பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டு விட்டன.
இது, தமிழ் மொழிக்கு எதிரான
சதியாகவும் தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். இது
பொய் என நிரூபிக்க மத்திய
அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்
எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment