இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து வருவதால் நூற்பாலைகளின் உரிமையா ளர்கள் கவலையடைந்துள்ளனர்.
உலகில் அதிகம் பருத்தி உற்பத்தி செய்யும்
நாடுகளில் முன்னணியில் இருப் பது இந்தியா. இந்திய ஜவுளித் துறையின் மிக
முக்கியப் பிரிவுகளில் ஒன்று பருத்தி நூல் தயாரிப்பு. உலகின் மொத்த பருத்தி
நூல் தேவையில் 26 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. நாட்டின் மொத்த
பருத்தி நூல் உற்பத்தியில் 32 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வரு
கிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இது 27 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில்
இந்தியாவில் உற்பத்தியான மொத்த பருத்தி நூலில் மூன்றில் ஒரு பங்கான 1,310
மில்லியன் கிலோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த
2014-ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதியா ளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு
சலுகைகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது. இதனால் 2017-18 -ஆம்
ஆண்டில் பருத்தி நூல் ஏற்றுமதி 1,097 மில்லியன் கிலோவாக குறைந்தது.
உலக உற்பத்தியில் 47 சதவீத பருத்தி நூலை
கொள்முதல் செய்யும் சீனாதான், இந்தியாவின் நூலை இறக்குமதி செய்வ தில்
முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத் தில் அய்ரோப்பிய ஒன்றியம் உள்ளது.
இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 சதவீத மும்,
அய்ரோப்பிய ஒன்றியத்தில் 4 சத வீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
வியத்நாம், இந்தோனேசியா போன்ற நாடு களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சீனாவும், அய்ரோப்பிய ஒன்றியமும்
இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்வதை குறைத்துக் கொண்டு வியத்நாம்,
இந்தோனேசியா போன்ற நாடு களில் இருந்து பருத்தி நூலை அதிகமாக இறக்குமதி
செய்கின்றன. இது இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைக் காட்டிலும் கூடுதலாக
நூலைத் தயாரித்து வரும் இந்திய நூற்பாலைகளுக்கு பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நூல் ஏற்றுமதி
குறைந்து வந்தாலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்)
கடந்த ஆண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது அதிர்ச்சி
அளிக்கிறது என்கிறார் இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்
(டெக்ஸ்புரோசில்) தலைவரான கே.வி.சிறீனிவாசன்.
No comments:
Post a Comment