பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 6
மாதங்களாகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன் னும் திட்ட அறிக்கை(Project
Report) தயாராகவில்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய
சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
நிதி ஒதுக்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி நேரடியாக மதுரை வந்து
எய்ம்ஸுக்கு கட் டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன்பிறகே மதுரையில்
‘எய்ம்ஸ்’ தொடங்கப்படும் என்ற நம்பிக்கை தென் மாவட்ட மக்கள் மத்தியில்
ஏற்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தில் மாநில அரசுக்குப் பெரியளவில் ஈடுபாடு
இல்லாத தால் ‘எய்ம்ஸ்’மருத்துவமனைக் கான செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக
ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அண்மையில், இந்த மருத்துவ மனைக்காக
ஒதுக்கப்பட்ட 224.42 ஏக்கர் நிலம் மத்திய சுகாதாரத்துறை வசம்
ஒப்படைக்கப்படவில்லை என்று தகவல் அறியும்உரிமைச் சட்டம் மூலம்
வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகுமாவட்ட நிர்வாகம், துரிதமாகச்
செயல்பட்டு சர்வே செய்து 224.42 ஏக்கர் நிலத்தை மத்திய சுகாதாரத்துறை வசம்
ஒப்படைப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை ‘எய்ம்ஸ்’
மருத்துவமனைக்கான திட்ட அறிக் கையைத் தயார் செய்யவில்லை என்று தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
இத்தகவலைப் பெற்ற மதுரை யைச் சேர்ந்த
ஹக்கீம் கூறுகையில், ‘‘224 ஏக்கரில் அமையும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில்
எத்தனை தளங்கள், என்னென்ன சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை அடங் கிய விரிவான
அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதா? என்றும், இருந்தால் அதன் நகல் கேட்டும்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால், மத்திய சுகாதாரத்
துறை இன்னும் விரி வானதிட்ட அறிக்கை தயாராக வில்லை என்று பதில் தந்துள்ளது.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 6 மாதங்களைக் கடந்தும் இன் னும்திட்ட
அறிக்கைகூட தயார் செய்யாமல் தொடக்கப் புள்ளியிலேயே பணி நிற்கிறது.
எப்போது நிலம் முறைப்படி
ஒப்படைக்கப்பட்டு, திட்ட அறிக் கைதயார் செய்து நிதி ஒதுக்கீடு நடந்து
ஒப்பந்தம் விட்டு பணிகள் தொடங்கும் என்பது மத்திய அரசுக்கு மட்டுமே
வெளிச்சம்.
மதுரைக்கான திட்டமாக ‘எய்ம்ஸ்’
மருத்துவமனையைப் பார்க்காமல் தமிழகத்துக்கான திட்டமாக நினைத்து விரைவில்
திட்ட அறிக்கை தயார் செய்து, நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளைத் தொடங்க மத்திய
அரசுக்கு அழுத் தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment