கருத்து தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக் கப்பட்டு இருந்தது.
இந்த வரைவு அறிக்கை, நாடு முழுவதும்
மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்திருந் தது. இது, இந்தியை
திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில்,
வரைவு அறிக்கை குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று கேள்வி
நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், எந்த
ஆலோ சனை கூட்டமும் நடத்தாமல், வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு
தயாரித்ததா? என்று கேட்டார்.
அதற்கு மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-
எல்லா மட்டங்களிலும், ஆலோ சனை நடத்திய
பிறகு, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்காக இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்து கூறுவதற்கான கால அவகாசம், மேலும்
ஒரு மாதத்துக்கு, அதாவது ஜூலை 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:- தனியார்
பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்
சட்டப்பிரிவு, 2009-ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், 2014ஆ-ம்
ஆண்டில் இருந்து தான் தீவிரமாக அமல்படுத்தப் பட்டது. அந்த ஆண்டு பலனடைந்த
குழந்தைகள் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 41 லட்சமாக
உயர்ந்தது. மத்திய இந்தி இயக் குநரகத்தில் காலியாக உள்ள இயக் குனர் பதவி
விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment