இந்தி பேசப்படாத மாநிலங்களில் இந்தி
மொழியைக் கற்பிக்க முழுவீச்சில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும்,
இதற்காக ரூ.50 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை
அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங் களில் இந்தி
ஆசிரியர்களை நியமிக்க நிதிநிலை அறிக்கை யில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மக்களவையில்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதில் கல்வித்துறைக்கு பல்வேறு
அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். உயர் கல்விக்கொள்கையை வகுக்க தனி ஆணையம்
அமைக்கப் படும். இந்தியாவில் படிப் போம் என்ற திட்டம் உரு வாக்கப்படும்
என்று அவர் அறிவித்தார். முக்கியமாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி
ஆசிரியர்களை நிய மித்து, இந்தியை கற்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்
டுள்ளது. புதிய அரசு அமைந் ததுமே மனிதவளத் துறை அமைச்சர் வெளியிட்ட புதிய
தேசிய கல்விக் கொள் கையின் வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களில்
இந்தி மூன்றாவது மொழியாக கட் டாயம் என்ற அறிவிப்புக்கு தமிழகம் உள்ளிட்ட
சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பை அடுத்து இந்தி
கட்டாயம் என்ற வார்த்தைப்பதம் மட்டும் நீக்கப்பட்டது. மூன்றாவது மொழியாக
ஏதாவது ஒரு மொழி கற்பிக்கப்படும் என் பது தொடர்ந்து இருக்கிறது.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்று ஆளும் அதிமுக அரசு உறுதி
யாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கும், இந்தி கட் டாயம் என்ற அறிவிப்பிற்கும் எதிராக போராட்டம் வெடித் துள்ளது.
மேலும் பஞ்சாப், மேற்கு வங்கம், கருநாடகா,
பாஜக ஆளும் மகாராட்டிரா என பல மாநிலங்கள் இந்தி திணிப்பை எதிர்த்து வரு
கின்றன. இந்த நிலையில் இந்தி ஆசிரியர்களை இந்தி பேசாத மாநிலங்களுக்கு
அனுப்பும் பணியை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையின் மூலம் முடுக்கி
விட்டுள்ளது.
No comments:
Post a Comment