அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறும்
10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்கு தமி ழக அரசு சார்பில் ரூ.1.60
கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. இந்த மாநாட்டுக்காக உலகத் தமிழ் ஆராய்ச்சி
மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி
செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட
அமெரிக்க தமிழ் மன்றம், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் அமெ ரிக்காவின்
சிகாகோ மாநகரில் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை (ஜூலை
4) முதல் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 7) வரை நடைபெற உள்ளது.
ரூ.1 கோடி நிதி உதவி: இந்த மாநாட்டுக்கு
நிதி உதவி அளிக்குமாறு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் தமிழக
அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்று, உலகத் தமிழ் ஆராய்ச்சி
மாநாடுக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது. இந் நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கச் செல் பவர்களுக்
காக நிதி ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சித் துறையின் செய லாளர் ஆ.கார்த்திக் புதன் கிழமை வெளியிட்ட உத்தர வின் விவரம்:-
சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 8-ஆம் தேதி
வரை நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசு சார்பிலும்,
அரசு சார்பற்ற முறையில் தமிழறிஞர்களுமாக மொத் தம் 20 பேர் பங்கேற்க
உள்ளனர்.
அவர்களில் அமைச்சர் க.பாண்டியராஜன் உள்பட
அலுவல் சார் உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பி வர ரூ.31.62
லட்சமும், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பங் கேற்க ரூ.28.47
லட்சமும் என மொத்தம் ரூ.60 லட்சத்து 9ஆயிரம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது
என்று தனது உத்தரவில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment