இந்திய நாடாளுமன்றத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை கேள்விக்குறியாகிவிட்டது.
இந்தியாவின் எட்டாவது மக்களவையில் மொத்தம் 46 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருந்ததுண்டு. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22ஆக சரிவடைந்தது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளி லிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, நாட்டில் மொத்தம் 14.2 சதவீதம் பேர் இசுலாமிய சமயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநித்துவம் இருக்க வேண்டுமென்ற ஒரு கருத்துண்டு. அந்த வகையில் பார்த்தாலும் கூட, இந்திய மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில், 77 இடங்களில் இசுலா மியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்திய மக்களவை வரலாற்றில் இந்த எண்ணிக்கை தொடப்பட்டதாக சரித் திரமே இல்லை. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்த லின்போது மொத்தம் 449 இடங்கள் இருந்தன. அவற்றில் இசுலாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 21, அதாவது 4.29 சதவீதம் மட்டுந்தான்.
16ஆவது மக்களவைத் தேர்தலின்போது, நாட்டிலுல்ள 29 மாநிலங்களில் வெறும் 7 மாநிலங்களில் இருந்து மட்டும் தான் முஸ்லிம் வேட்பாளர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, அதிகபட்சமாக மேற்கு வங்கத்திலிருந்து எட்டு பேரும், பீகாரிலிருந்து 4 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவிலிருந்து தலா மூன்று பேரும், இருவர் அசாமிலிருந்தும், தமிழ்நாடு-தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். மேற்குறிப்பிட்டுள்ள இந்த மாநிலங்களில் மட்டும், இந்தியாவிலுள்ள மொத்த முஸ்லிம்களில் 46 சதவீதத்தினர் வசிக்கின்றனர்.
மற்ற 22 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங் களிலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல் குறித்த தரவுகளை உற்று நோக்கினால் சில முக்கிய விடயங்கள் தெரிய வருகின்றன. இந்தியாவின் முதலாவது மக்களவைத் தேர்தலின்போது, இசுலாமிய உறுப்பினர்களின் எண் ணிக்கை 21ஆக இருந்த நிலையில், அது சீராக அதிகரித்து, இருப்பதி லேயே அதிகபட்சமாக ஏழாவது மக்களவையில் 49 உறுப்பினர்களாக இருந்தது.
இந்தியாவில் இசுலாமியர்களின் நிலை, பட்டியல் இனமக்களை விட மோசமாக உள்ளதாக 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அய்ந்து ஆண்டுகளில் இசுலாமியர்களுக்கு எதிராக அதிக மோதல்கள் நடைபெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் சமுக விரோதிகளைக் கொல்லுகிறோம் என்ற பெயரில் சாமியார் ஆதித்யநாத் அரசு 2018ஆம் ஆண்டில் மட்டும் 470 என்கவுன்ட்டர்கள் நடத்தினார்கள்.
இதில் 113 இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக 112 பேர் கொல்லப் பட்டனர், அக்லாக், பஹலுகான், இஸாஸ், அஸ்லாம், முகமது இசுமாயில், நவாஸ் கான் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, ரயிலில் உடன் பயணம் செய்த இசுலாமிய சிறுவனை, "நீ மாட்டிறைச்சி சாப்பிட்டவன் தானே" என்று கூறி அடித்தே கொலை செய்துள்ளனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி "உங்களுக்கு கபரிஸ் தான் வேண்டுமா, சம்சான்கட் வேண்டுமா?" (இசுலாமியர் சுடுகாடு வேண்டுமா - இந்து எரியூட்டும் இடம் வேண்டுமா?) என்று வெளிப் படையாகவே மதவெறுப்பை உமிழ்ந்துள்ளார். நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப் பேசுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. துணைக் குடியரசுத்தலைவராக இருந்த ஹமித் அன்சாரியைக் கூட மதரீதியாக அமைச்சரவை சகாக்கள் பேசும் போது அதை அவர் ஆமோதித்து அமைதிகாத்து இருந்தார் பிரதமர் மோடி.
வயநாட்டில் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல்காந்தியை விமர்சனம் செய்யும் போது "இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் போட்டியிடுகிறார், இந்துக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என்ற அச்சம் அவருக்குள்ளது" என்று மோடி மீண்டும் மதவெறி விமர்சனம் செய்தார், இது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல் தேசியக் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் கட்சியை சாமியார் ஆதித்யநாத் "நாட்டை நோயின் பிடியில் சிக்கவைக்க வந்த வைரஸ்" என்று கூறியிருந்தார். இதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஒன்றுமே எடுக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்க தாகும்.
எல்லாம் காவி மயம் - என்னதான் நடக்காது
No comments:
Post a Comment