மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத் தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலு வலகங்களும் உள்ளன. சென் னையில் மட்டும் கூடுதலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற் றுத் திறனாளிகள் பிரிவு உட் பட 3 சிறப்பு அலுவலகங்கள் இயங்குகின்றன.
வேலைக்காக பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப் பித்து வர வேண்டும். ஆனால் 57 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பலர் மூன்றாண்டு களுக்கு ஒருமுறை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அப்படியும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மத்திய, மாநில அரசு களின் கொள்கைகளில் தெளி வில்லாத நிலை, அரசியல் தலையீடு போன்றவையும் அடங்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு ஆணையம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாண வர்கள், 17 லட்சத்து 41 ஆயி ரத்து 402 பேரும்; 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப் பட்ட கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 93 ஆயிரத்து 351 பேரும் வேலைவாய்ப்பு அலு வலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதே போல் 24 முதல் 35வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்பவர்களின் எண் ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 பேர்; 36 வயது முதல் 57 வயதுவரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 11 லட்சத்து 29 ஆயிரத்து 429 பேர் பதிவு செய்து காத்திருக் கிறார்கள்.
அதேபோல் 57 வய துக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் 6 ஆயிரத்து 687 பேர் என மொத்தமாக 73 லட்சத்து 12 ஆயரத்து 390 பேர் பதிவு செய்துள்ளனர். இப்படி யிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, பிஎச்இஎல், ராணு வத் தொழிற்சாலை, வருமான வரி அலுவலகம், துறை முகங்கள், விமான நிலை யங்கள், பெட்ரோலிய தொழி லகங்கள் ஆகியவற்றில் தமி ழர்கள் தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டு வருவதாக வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாறாக, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளால் தமிழகத்தில் பட்டம், முது கலை பட்டம் என பல்வேறு விதமான படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசு வேலை என்பது கானல் நீராக மாறி வருகிறது.
கருநாடகாவில் வெளி மாநிலத்தவர்கள் அதிக எண் ணிக்கையில் வேலை பெறு வதை தடுக்கும் வகையில் சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து அதை செயல்படுத் துகிறார்கள். அதேபோல் நாகா லாந்து, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர் வேலைக்கு சேரு வதில் ஏராளமான நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப் படுகிறது. எனவே அதுபோல் தமிழகத்திலும் புதிய சட்டம் கொண்டுவந்து தமிழக இளை ஞர்களுக்கு அதிகமாக வேலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment