கொழும்பு, ஏப். 25- இலங்கையில் தேவா லயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங் களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த் தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தி யர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர்ருவான் விஜவர்தன புதன் கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரி ழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கை களை முறையாக மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கி றோம். வேறு சில பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களில் 32 பேர் குற்றப்பிரிவு விசாரணை துறையின் காவலில் உள்ளனர். நியூஸிலாந் தின் கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், அவர்கள்தான் இதை செய்தார்கள் என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை. இலங்கை பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல் களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.
வெளிநாட்டவர்கள்
34 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில், 10 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 6 பேர், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் உள்பட வெளிநாட்டவர்கள் 34 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.
இலங்கையில் 7 இடங்களில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், ஒரு பெண் உள்பட 9 பேர் தங்களது உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தற்கொ லைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதிகளில் ஒருவரின் மனைவி என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்த வர்கள் என்றும், சமூகத்தில் நல்ல அந்தஸ் தில் வாழ்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னமோன் கிராண்ட் மற்றும் ஷாங்க்ரி லா நட்சத்திர விடுதிகளில் தாக்கு தல் நடத்திய இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வந்ததையடுத்து, அவர்களது வீட்டை சோதனையிட்டதில் பயங்கரவா தம் குறித்த புத்தகங்கள், செல்லிடப்பேசி சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவர்களது இளைய சகோதரர், விடுதியில் விட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரையும் விசாரணைக்காக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் தேசிய தவ்கீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவர் என்று கூறப்படும் ஜக்ரான் காசிம் என்பவருக்கு இந்த தாக்கு தல்களில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ப தாக அய்.எஸ். பயங்கரவாத அமைப்பு செவ்வாய்க்கிழமை ஒரு காணொலியை வெளியிட்டது.
இந்நிலையில், இலங்கையில் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபட்டவரான ஜக்ரான் காசிம் முகம் அந்த காணொலியில் தெரிந்ததாக காவல் துறையினர் கூறினர். எனினும், காணொலியில் இருந்த பயங்கர வாதிகள் தங்களது முகத்தை பாதி மறைத் திருந்ததால், காசிமின் அடையாளம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இலங்கையில் அவசர நிலை அமல் படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்புவின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் தனியாக நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை கண்ட காவல் துறை யினர் அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர். நல்வாய்ப்பாக அதில் எந்த வெடிபொருள்களும் இல்லை. அதையடுத்து, பொது இடங்களில் வாக னங்களை நிறுத்திச் செல்வோர், வாகனத் தின் பின்புறம் தனது பெயரையும், செல்லி டப்பேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும் என்று மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்கூட்டியே எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்தியாவும் அமெரிக்காவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தன என்று அந்நாட்டு அமைச்சர் கூறியதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் கூறுகையில், "இலங்கை அரசுக்கு வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. உளவுத் துறை தகவல்களை சேகரிப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் பின்னடைவு ஏற்பட்ட தாக இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள் ளது. இலங்கையில் நடைபெற்ற தற் கொலைத் தாக்குதல்கள் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. அதனால் நாங் கள் எந்த தகவலையும் அவர்களுக்கு அளிக்கவில்லை ' என்றார்.
இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலை மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து இலங் கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்து மத கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment