அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (வயது46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் 2008-ஆம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணி யாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
பேராசிரியை நிர்மலாதேவி தன்னிடம் படிக்கும் மாணவி களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி பாலியல் ரீதியில் தவறான வழியில் ஈடுபடும் வகையில் வற் புறுத்தி பேசிய ஒலிப்பதிவு, அண்மையில் சமூக வலைதளங் களில் பரவியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியைமீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிர்மலாதேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்யக்கோரி கல்லூரி முன்பு பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
நிர்மலாதேவி விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் இந்த புகார் குறித்து தனியார் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலர் ராமசாமி, பேராசிரியை நிர்மலாதேவி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மதி கூறும்போது, கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான புகார் பெறப்பட் டுள்ளது. இதன் அடிப்படையில் நிர்மலாதேவிமீது சட்டரீதி யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதற்கிடையே நிர்மலாதேவி மீது கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினர் வந்த போது, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு நிர்மலாதேவி பல மணி நேரம் வெளியே வர மறுத்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த நிர்மலாதேவியிடம் பேசிய காவல்துறையினர், அவரை ரகசியமாக அழைத்துச் செல்வ தாகத் தெரிவித்தனர். அதையடுத்து, அப்பகுதியில் செய்தியா ளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினர் அவரை கைது செய்து அருப்புக் கோட்டை நகர காவல் நிலையத்துக்கும் அதைத்தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அருப்புக் கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒழுங் கீனமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சம்பந்தப் பட்டிருப்ப தாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடாமல் இருக்கும் வகையில் இதுகுறித்து உடனடி யாக விசாரிக்க வேண்டியது அவசியமா கிறது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறை யில், ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலை மையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இப்பொழுது இந்தியா முழுவதும் பரவி யுள்ளது. ஆளுநர் என்ற பெயர் மறைமுகமாக உச்சரிக்கப்பட் டுள்ளதால், தமிழக ஆளுநரே செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக் கிறதே. மாநில அரசு என்று ஒன்று இருக்கும்போது ஆளுநர் எதற்குத் தேவையில்லாமல் இதில் மூக்கை நுழைத்திருக்கிறார் என்ற சர்ச்சை ஒரு பக்கத்தில் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினை நாகரிக உலகத்திற்கு மிகப்பெரிய இழுக்காகும் இது. கல்லூரியில் பேராசிரியராக இருக்கக்கூடிய ஒரு பெண்மணி இந்த வேலையில் ஈடுபடுவது தலைகுனியத் தக்கதாகும்.
அந்தப் பேராசிரியையின் கூற்றிலிருந்து பெரிய இடத்தில் இருப்பவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது.
கல்வியைக் குறை கூறுவதா? வளர்த்த முறை சரியில்லை என்பதா? சமூகத்தின் கேடு கெட்ட தாக்கம் எந்த அளவுக்குச் சென்று இருக்கிறது என்று நொந்து கொள்வதா?
இந்தத் துறையில் மட்டும்தானா இப்படி நடக்கிறது? எல்லா இடங்களிலும்தான் நடக்கிறது என்று கூறி பிரச்சினையைத் திசைதிருப்பப் போகிறார்களா? என்ற கேள்வி எல்லாம் செங்குத்தாக எழுந்து பல்லிளிக்கின்றன.
சரியாகப் புலன் விசாரணை நடத்தப்பட்டு உண்மைக் குற்ற வாளிகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டே ஆகவேண்டும். அதன்மூலம் இதுபோன்ற சிந்தனை கூட யாருக்கும் வரக்கூடாது என்ற நிலைமையை அது உருவாக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை அவசர அவசரமாக நியமித்து விசாரணை நடத்தச் சொல்லி ஆளுநர் ஆணை பிறப்பித்தது ஏன்? ஆளுநரே சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஒன்றினை விசாரிக்க அந்த ஆளுநரே அதிகாரியை நியமித்தால் அங்கு உண்மையான விசாரணைக்கு இடம் இருக்குமா?
இதில் இன்னொரு வேடிக்கை. சிபிசிஅய்டி போலீஸ் இந்தப் பிரச்சினையை விசாரிக்கும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரச்சினையை இரு மய்யங்கள் விசாரிக்கலாமா? ஒன்றுக்கொன்று முரண்பட்டால் எதை எடுத்துக் கொள்வது? மிகவும் வேதனையும் வெட்கமும் சூழ்ந்து சூழ்ந்து தாக்குகிறதே!
மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கக்கூடிய அரசுகள் மதிக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளவில்லை என்கிற போது இன்னும் என்னென்னதான் நடக்குமோ?
No comments:
Post a Comment