Friday, April 27, 2018

பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு அம்பலப்படுத்துகிறது

இந்தியாவில் மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஏராளமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களில் கருத்துரிமைப் பறிப்புகள் மற்றும்  கருத்துச் சுதந்திரத்தின்மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றனஎன்பதைசுட்டிக் காட்டி, அதற்கான கவலைகளையும், கடுங்கண்டனத் தையும் அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்காக பாடுபட்டு வருபவர்கள்குறித்து இந்தியாவில் அரசு அதிகாரங்களில் பொறுப்பில் உள்ளவர்கள் வெளிப்படையாகவேவிமர்சித்துள்ளார்கள்.அதன்மூலமாக மனித உரிமைகளுக்காக பாடு பட்டு வருபவர்களிடம் பகையுணர்ச்சியுடன், வன் முறைகளை அவர்களுக்கு எதிராக ஏவிவிடுகின்ற சூழல்கள் ஏற்பட்டு வருகின்றன.
தெற்காசியாவில் மதச் சிறுபான்மை மக்கள் மீதான கும்பல் வன்முறைகள் நடைபெற்றன. அப்போது ஆட்சியாளர்கள் மதச்சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறினார்கள். குற்றமிழைத்தவர்கள்மீது நடவடிக்கைகளை எடுக்காதது மட்டுமின்றி குற்றங் களுக்குத் தூண்டுகோலாகவும் இருந்துள்ளனர்.
இந்தியாவில் இந்துத்துவ அரசு ஏற்பட்டதன் தொடர்ச்சியாக வெறுப்பு நோயாக பரவி  முசுலீம்களுக்கு எதிரான மத வெறுப்புணர்ச்சியால் குற்றங்கள் நாடுமுழுவதும் பெருகின. குறைந்த பட்சம் முசுலீம்கள் 10 பேராவது எவ்வித விசார ணையுமின்றி பசுப் பாதுகாப்புக் குழுக்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர், ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர்.
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களிலும் முசுலீம்கள்மீதான தாக்குதல்களைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், வன் முறை தாக்குதல்களுக்கு எதிராக  சிறு அசைவுகூட அரசிடமிருந்து வரவில்லை.
2017ஆம் ஆண்டில் தெற்காசியா முழுவதிலும் மனித உரிமைப் பாதுகாவலர்கள்மீதான வெளிப்படையான அவதூறுகளால், அவர்களுக்குரிய இடம்  குறுகிப் போனது. இணைய, பிளாக் எழுத்தாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாககருத்துகளைவெளியிடுவதுகுற்ற மாகக் கருதப்பட்டு, அச்சுறுத்தல்கள் விடப்பட்டு, கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்கள்மீது அவ தூறுகள் பரப்பப்பட்டு, வன்முறைகளால் அவர் தம் செயல்கள்  முடக்கப்பட்டுள்ளன. இது போன்றதாக்குதல்கள்அனைத்தும் தொடர்ச் சியாக அதிகரித்துக்கொண்டிருந்தன. இருந்த போதிலும், 2017ஆம் ஆண்டுமுழுவதும் தங்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் விரும்பும் உலகத்தை காண்பதற்காக தொடர்ச்சியாக மனித உரிமை மாண்பாளர்கள் போராட வேண்டியவர்களாக இருந்தார்கள்.
இந்தியாவில் தூண்டப்படும் வெறுப்பு நோயால் முசுலீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தாக்கிக் கொல்லப்பட்டனர். அதனையடுத்து, கும்பல் வன்முறைகளுக்கு எதிராக Ôநாட் இன் மை நேம்Õ அறிவிப்பு பதாகைகளுடன்  ஏராளமானவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இன்றைய இந்தியாவின் நிலைமை என்ன என்பதை பன்னாட்டு உலக அமைப்பு உலகம் முழு வதும் அம்பலப்படுத்தி விட்டது.
என்னதான் அதிகாரவர்க்கமும், ஊடகங்களும் டமாரம் அடித்தாலும் உண்மை நிலை பல்வேறு வடிவங்களில் அம்பலப்படுத்தப்பட்டுதான் வருகிறது.
சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து கொல்லப் பட்டதானது பி.ஜே.பி.யின் பிற்போக்குத்தனமான பாழ்பட்ட சிந்தனையின் சீழ்நாற்றம் நாட்டையே நோயாளியாக்கி விட்டது. நாட்டின் மதிப்பை வெகு அதிகமாக, வேகமாக வீழ்த்தி விட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தை அரங்கேற்ற துடித்துக் கொண்டுள்ளது பி.ஜே.பி. அரசு.
இவ்வாட்சி எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப் படுமோ அந்த அளவுக்கு நாட்டு மக்களுக்கு நல்லதே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...