Friday, April 27, 2018

தேர்தலில் வெற்றி பெற பி.ஜே.பி. பின்னும் வலைகள்

காங்கிரசு கட்சியின் செய்தி தொடர்பாளரும், அசாம் மாநிலத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கவுரவ் கோகாய் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பாஜக மேகாலயா மாநிலத்தில் பின்வாசல் வழியே ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது என்று கூறியுள்ளார்.
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுரா வில் நேற்று தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 3 ஆம் தேதி நடக்கிறது. 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன.
ஷில்லாங்கில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவுரவ் கோகாய் கூறியதாவது:
‘‘ஆர்.எஸ்.எஸ்., அமித்ஷா, யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட பாஜகவினர் மேகாலயா மாநிலத் திலுள்ள தேசிய மக்கள் கட்சியை பொம்மைக் குதிரையாக்குகிறார்கள். மேகாலயாவில் மாநிலக் கட்சிகளின் துணையுடன் பின்வாசல் வழியே ஊடுருவத் துடித்துக்கொண்டிருக்கிறது காவி பாஜக. ஆகவே, தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றேயாகும்.
கிறித்துவ போதகர்களான பாஸ்டர்கள்மீது தாக்கு தலை நடத்தி வருகிறது பாஜக. கிறித்துவர்களின் நல்ல வெள்ளியை, டிஜிட்டல் இந்தியா நாள் என்றும், கிருஸ்துமஸ் நாளை, நல்ல நிர்வாகத்துக்கான நாள் என்றும் கூறிவரும் பாஜக எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். நாள் என்றும், தீனதயாள் நாள் என்றும்கூட மாற்றிவிடும்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படையே பிற மதங்களை எதிர்ப்பதுதான். டில்லியில் ஆர்.எஸ்.எஸ்.சுக்காக, ஆர்.எஸ்.எஸ்.சால், ஆர்.எஸ்.எஸ்.சே நடத்தி வருவது தான் மத்திய அரசாகும்.
அசாம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக முன்னணியி லிருந்த மேகாலயாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பகல் கனவாகி வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் பல்கலைக் கழகங் களில் துணைவேந்தர் நியமனங்களில் உரிய தகுதி அடிப்படையில் தேர்வு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சிபெற்றவர்களையே நியமனம் செய்து வருகின்றன.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றாத நிலையில், பாஜகவின் தொலைநோக்கு அறிக்கையை அளிப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?
முத்ரா திட்டத்தின்கீழ் 1.68 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜக, அதைச் செய்யவில்லை. முத்ரா கடன் திட்டத்தின்கீழ் ரூ.43 ஆயிரம் மட்டும் அளிப்பதன்மூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முடியாது.
சுய தொழில் தொடங்குவதற்கான (ஸ்டார்ட் அப் இந்தியா) திட்டத்தின்கீழ் 33ஆயிரம் தொழில் நிறுவனங்களில் வெறும் 74 நிறுவனங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 2015-2016இல் வேலை வாய்ப்பின்மை விகிதம் 5 விழுக்காட்டளவில் அதி கரித்து விட்டது.
வடகிழக்கு மாநிலத்திலிருந்து பாஜகவை முற்றிலுமாக அகற்றிட காங்கிரசு கட்சி தீவிரமாக பணியாற்றிவருகிறது. அதற்கான பணிகள் மேகால யாவிலிருந்து தொடங்குகிறது.''
இவ்வாறு கவுரவ் கோகாய் தெரிவித்தார்.
பா.ஜ.க.வைப் பொருத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த முறைகேட்டின் எல்லைக்கும் சென்று காய்களை நகர்த்தும்.
மத மோதல்கள், ஜாதிக் கலவரங்களை உற்பத்தி செய்து ஒரு பெருங்கூட்டத்தை தன் பக்கம் இழுத் துக் கொள்ளும். உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க சட்டமன்றத் தேர்தலுக்குமுன் மதக் கலவரத்தை ஏற்படுத்தவில்லையா?
பல ஆண்டுகளுக்குப்பின் கலவரத்துக்குத் தூண் டப்பட்டவர்கள் முசுலிம் மக்களிடம் மன்னிப்புக் கோரியதையும் கவனிக்கவேண்டும். பி.ஜே.பி.யின் சன்னமான சூழ்ச்சிகளுக்கு இரையானவர்களின் நிலைமை இது.
பா.ஜ.க., சங் பரிவார்க் கும்பலின் இத்தகு சூழ்ச்சி கள் இப்பொழுது உணரப்பட்டு வருவது வரவேற்கத் தக்கதாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...