Friday, April 27, 2018

பலே, பலே அகசாகி கிராம மக்கள்!

கருநாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் அகசாகி கிராமத்தில் மாசனாயி தேவி கோயில் உள்ளது.  கோயிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச் சியாக திருட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் இருந்து வந்தன.
பொறுக்க முடியாத அக்கிராமத்தினர் ஒன்று கூடி னார்கள். அக்கோயிலின் கடவுள்தான்  திருடர்களுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்றும், அதற்கு ஒன்பது நாள்கள் கெடு விதிக்கப்படுகிறது என்றும், அதுவரை அக்கோயிலில் கடவுளுக்குத் தேங்காய் உடைக்கக் கூடாது என்றும் பக்தர்களான அப்பகுதி மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
கோயிலிலிருந்து திருடப்பட்ட கோயில் மணி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே கோயிலைத் திறக்க வேண்டும் என்று கூறி கோயிலை சாத்தி பூட்டு போட்டனர்.
எதைக்கேட்டாலும் கொடுக்கின்ற சக்தி வாய்ந்த கடவுள் என்றும், அனைத்துவித துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் அனைவரையும் காக்கின்ற  கடவுள் என்றும்,  அக்கோயிலின் கடவுளான Ôமாச னாயி தேவிÕயை அப்பகுதிமக்கள் நம்பி வழிபட்டு வந்தார்கள்.
அண்மைக்காலமாக கொள்ளையர்கள் கிராமத்தில் புகுந்து கோயிலில் உள்ள கோயில் மணியையே திருடிச் சென்று விட்டார்கள். கோயில் மணியுடன், கோயிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்களையும் சேர்த்து எடுத்துச்சென்று விட் டார்கள். கோயில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் திருட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.
திருட்டு நிகழ்வுகள் குறித்த காக்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் எவரும் பிடிபடவில்லை. அதனால், நிலைகுலைந்த கிராமத்தினருக்கு கடவுளின்மீது இருந்த பக்தி குறையத் தொடங்கியது.
ஆகவே, கடவுளின் சக்திகுறித்து சோதனை செய்ய முடிவெடுத்தனர். கோயிலைப்பூட்டிவிட்டு, “தாயே, கொள்ளையர்களை நீ தண்டிக்க வேண்டும். திருடிச்சென்ற கோயில் மணியை உன்னுடைய சக்தி யால் அவர்களாகவே திருப்பிக் கொடுத்திடச் செய்ய வேண்டும். அதற்காக உனக்கு ஒன்பது நாள்கள் கால அவகாசம் அளிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்கள்.
அகசாகி கிராமத்தில் வழக்கமாக வீடுகளின் முன்பகுதிகளில் விவசாய கருவிகளைப் போட்டு வைத்திருப்பார்கள். நுழைவாயில் கதவுகளை பெரும்பாலும் திறந்தே வைத்திருப்பார்கள். Ôமாசானக்கவாÕ எனும் அவர்கள் நம்புகின்ற கடவுள் அனைத்தையும் காக்கும் என்கிற நம்பிக்கையில் பொருள்கள் அனைத்தையும் அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். வீடுகளை பூட்ட மாட்டார்கள். அக்கோயிலில் பூஜை செய்வதற்கு எனத் தனியே பூசாரியோ, அர்ச்சகரோ கிடையாது.
இந்த நிலையில்தான் கோயில் மணி திருடு போனது. கோயில் முன்பாக கிராமத்தினர் ஒன்று கூடினார்கள்.  நீண்ட பெரிய இரும்பு சங்கிலியை கொண்டு வந்தனர். கோயிலின் நுழைவாயில் கதவுகளை சங்கிலிகளால் பிணைத்து பூட்டி விட்டார்கள். கடவுளுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால், திருடர்களிடமிருந்து கோயில் மணியை திரும்ப கொண்டுவர வேண்டும் என்று கூறிவிட்டார்கள். மேலும் கோயில் மணி திரும்ப கிடைக்கும் வரை யாரும் கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: “குற்றம் நிகழ்ந்தது குறித்து தகவல் அளித்தார்கள். முறையாக எவரும் புகார் கொடுக்கவில்லை’’ என்றனர்.
திருடுபோன கோயில் மணி  உள்ளிட்ட பொருள் களை மீட்கும்வரை அக்கோயிலில் வழிபாடு கிடை யாது எனும் முடிவு அக்கிராமத்தில் மட்டுமல்லாமல், மற்ற இடங்களிலும் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இந்தக் கிராமத்தினரை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். கடவுளுக்கு உண்மையிலேயே சக்தியிருந்தால் கோயிலில் திருட்டுப் போகுமா?
அப்படியே போனாலும் அதனைக் கண்டுபிடித்து இழுத்து வரும் சக்தி அந்தக் கடவுளுக்கு இருக்க வேண்டாமா?
இதைக்கூட செய்ய முடியாதது எப்படி கடவுள் ஆகும்? அதை நம்பி பக்தர்கள் பொருளையும், பொழுதையும் வீணடிப்பது முட்டாள்தனம்தானே?
இந்த வகையில் கருநாடக மாநிலம் அகசாகி கிராமத்து மக்கள் அகிலத்திற்கே வழிகாட்டியிருக்கின்றனர்.
இந்து மதப் பக்தர்கள் மட்டுமல்லாது; அனைத்து மதப் பக்தர்களும் சிந்திப்பார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...