Friday, November 10, 2017

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மோடி பதில் சொல்லும் நிலை வரும் மதுரை ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

மதுரை, நவ.9  மத்திய அரசு கடந்த ஆண்டு நவ.8ஆம் தேதி 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து ஓராண்டு நிறைவு பெற்றதை  முன்னிட்டு, நேற்று நாடு முழு வதும் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில்  கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மதுரையில் மாநகர் வடக்கு, தெற்கு, மதுரை வடக்கு, தெற்கு ஆகிய 4 மாவட்ட திமுக சார்பில்,  அண்ணா நகரில் நேற்று (8.11.2017) காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
திமுகவோடு காங்கிரசு, விடுதலை  சிறுத் தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, த.நா.மு.லீக், திராவிடர் கழகம், பார்வர்டு பிளாக், ஆதிதமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினரும்  பங்கேற்றனர்.
தொடர்ந்து எதிர்ப்போம்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடு நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை, 2016 நவம்பர் 8ஆம்  தேதி நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட பண மதிப்பிழப்பால் இழந்துள்ளோம். இதை அறிவித்தபோது மக்கள் ஏடிஎம், வங்கிகளில் கால் கடுக்க காத்து  நின்றனர். கூலித்தொழிலாளி அரிசி வாங்க, நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல பணத்துக்காக காத்து நிற்க வேண்டிய கொடுமை நிகழ்ந்தது.  கியூவில் நின்று ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தனர். நூற்றுக்கணக்கோனார் இறந்தனர். பணப் புழக்கத்தையே மோடி அரசு முடக்கி போட்டுள்ளது.   இதற்கெல்லாம் வருங்காலத் தில் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். பண மதிப்பிழப்பை எந்த சூழ் நிலையிலும், எந்த அச்சுறுத்தல்  வந்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம்.

தொலைக்காட்சிகள் விமர்சனம்

காங்கிரசு முன்னணி தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில், டில்லியில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி  எம்.பி. பங்கேற்றார். அதில் பண மதிப்பிழப்பு தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி  விட்டது என சில பத்திரிகை, தொலைக்காட்சி களில் விமர்சித்தனர். அதற்கு காரணம், “பிரதமர் மோடி, தலைவர் கலைஞர் அவர் களை சந்தித்து உடல் நலம்  விசாரித்தார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கி ஏதோ சமரசம் ஆகி விட்டது. அதையும் தாண்டி கூட்டணி கூட உருவாகும் நிலை வந்துவிட்டது”  என்றெல்லாம் அவரவர் கற் பனைக்கு ஏற்ப செய்தி வெளியிட்டுள்ளனர். சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டும் தொடர்மழை காரணமாக  ஆர்ப்பாட்டம் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. திருவண் ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை இல்லை என்பதால் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.  இதை மூடி மறைத்து சிண்டு முடிகிற வேலையில் சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஈடுபடுகின்றன.
நம்மை பயன்படுத்தி விவாதம்..
.
தமிழகத்தில் குட்டிச்சுவரான ஆட்சி நடக்கிறது. மோடியை காக்கா பிடித்து, இந்த ஆட்சியை கவிழ்த்து விடமாட்டார்களா? என்றெல்லாம் சில தொலைக்காட்சிகளில்  விவாத மேடை நடத்துகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதற்கு நம்மை பயன்படுத்தி விவாதிக்கிறார்கள். ரேசன் கடை களில் சர்க்கரை  விலை உயர்வை கண்டித்து நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ஒத்திவைக் கப்பட்டது. ஆனால், மோடி  வருகையால் ஒத்தி வைத்ததாக செய்தி வெளியிடுகின்றனர்.
மழைக்காக  போராட்டம் ஒத்திவைப்பு

பிரதமர் 6ஆம் தேதி காலை சென்னை வருவதால், ரேசன் கடை முன்  காலையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மாலை யில் நடத்துங்கள் என்று  காவல்துறை ஆணையர் கூறினார். மாலையில் ரேசன் கடையே இருக்காது என்று நாங்கள் தெரிவித்தோம். அப்போது கூட பிரதமர் மோடி, கலைஞர் அவர்களை  சந்திக்க வருவது தெரியாது. மழைக்காகத்தான் அந்த போராட் டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, கலைஞரை சந்தித்து நலம் விசாரித்த  பிறகு, “மோடி அரசியலுக்காக வந்தாரா?'' என்று என் னிடம் செய்தியாளர்கள் கேட்டனர். “மோடி அரசியலுக்காக வரவில்லை. அதை நாங்கள் அரசியலுக்கு  எதற்காகவும் பயன்படுத்த விரும்பவில்லை” என்று பதில் கூறினேன்.
மனிதாபிமான அடிப்படையில்...

பிரதமர் 6ஆம் தேதி சென்னை வரும்போது, ‘திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான கலைஞர் உடல் நலிவில், வயது மூப்பு காரணமாக  ஓய்வெடுப்பதால் சந்திக்க வேண் டும். அப்போது நானும் உடன் இருக்க வேண்டும்’ என்று விரும்புவதாக எனக்கு தகவல் வந்தது. அப்போது நான்  துபாயில் இருந்தேன். 6ஆம் தேதி மாலையில்தான் வருவதாக எனது பயணத்திட்டம் இருந்தது. ஆனால் முன்கூட்டியே 5ஆம் தேதி இரவே சென்னை வந்து,  மோடி, தலைவர் கலைஞரை பார்க்க வரும்போது உடனிருந்து வரவேற் றேன். அவர் சந்தித்து உடல்நலம் விசாரித்தது, மனிதாபிமான  அடிப்படையிலானது. திமுக தலைவர் கலைஞரை பார்த்ததும், ‘என்ன சார் வணக்கம்’ என்றார்.
அரசியல் குழப்பம் ஏற்படுத்த...

இதைத்திரித்து அரசியல் குழப்பம் ஏற் படுத்த சிலர் நினைக்கின்றனர். அந்த நோக்கம் நிறைவேறாது. அவர்கள் கனவு பலிக்காது. பண மதிப்பிழப்பை  மோடி அறிவிக்கும்போது, கள்ளநோட்டு ஒழிப்பு, கருப்பு பணம் ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு போகிற பணம் ஒழிப்பு ஆகிய மூன்று நோக்கங்களை  வெளியிட்டார். இதில் ஒன்று கூட நிறைவேறவில்லை. இதை சுட்டிக்காட்டவே இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றுள்ளது. இது மோடி அரசுக்கு ஒரு  எச்ச ரிக்கை. இது இன்றுடன் முடியாது. தொடரும்.
இவ்வாறு திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...