சென்னை, நவ.9 சென்னை பெரியார் திடலில் நேற்று (8.11.2017) நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட மக்கள் அறிக்கையை கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் கட்சித் தலைவர்களும் பெற்றுக் கொண்டனர்.
மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் உயர்மதிப்புக் கொண்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து ஓராண்டு முடிந்துவிட்டது. அதனால், கோடிக்கணக்கான மக்கள் பல்வேறுவிதமான அல்லல்களைச் சந்தித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச்செய்தது ஏன் என்பதை விளக்கி நிதி அமைச்சகத்தால் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை (எண் 2652 நாள் 2016 நவம்பர் 8) அதற்கு பின்வரும் மூன்று காரணங்களைக் குறிப்பிட்டிருந்தது:
1. குறிப்பிடப்பட்ட கரன்சி நோட்டுகளைப்போலவே கள்ள நோட்டுகள் ஏராளமாக புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றைப் பிரித்தறிவது சிரமமாக இருக்கிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.
2. உயர் மதிப்புகொண்ட இந்த ரூபாய் நோட்டுகள் கணக்கில் காட்டாத செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது நாட்டின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலிருந்து தெரிய வருகிறது.
3. கள்ள நோட்டுகள் போதை மருந்து கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற சீர்குலைவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் பாதுகாப்பும் நாசப்படுத்தப்படுகின்றன.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும் கள்ளப் பணத்தைக் கண்டு பிடிப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மோடி அரசு கடந்த ஆண்டு கூறியது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் இன்று அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் ஆறு விதமான பயன்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கருப்புப்பணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும்; பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும்; போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும்; ஏழை மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும்; வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கூடியிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
மோடி அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் உண்மையில்லை என்பதை மக்களின் கருத்துகள் அம்பலப்படுத்தியுள்ளன. பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ள விளைவு என்ன என்பதைப் பற்றி இன்று இந்தியன் எஸ்பிரஸ் ஆங்கில நாளேடு மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், இந்த பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் கருப்புப்பணப் புழக்கம் குறைந்துள்ளதா? என்று கேட்டுள்ளனர்.
அக்கேள்விக்கு 59.33% மக்கள், கறுப்புப்பணம் புழக்கம் குறையவில்லை என்று பதில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஊழல் குறைந்துள்ளதா? என்று கேட்கப்பட்டதற்கு 66.52% மக்கள் ஊழல் குறையவில்லை என்று பதில் அளித்துள்ளனர். பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்றுகேட்கப்பட்டதற்கு, ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்பட்டார்கள் என்று 69.08% பேர் பதில் அளித்துள்ளனர். இதிலிருந்தே மோடி அரசாங்கத்தின் கூற்றை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
1. 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தபோது அப்போது மொத்தத்தில் புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளில் அந்த இரண்டு நோட்டுகளும் 86.4% பங்கு வகித்தன. அதாவது, மொத்தமாக அப்போது புழக்கத்தில் இருந்த 16.41 லட்சம் கோடி ரூபாயில் அந்த இரண்டு நோட்டுகள் மட்டும் 14.18 லட்சம் கோடி ரூபாய் இருந்தன. செல்லா நோட்டு அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு, மக்கள் வங்கிகளுக்குச் சென்று பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு அதற்கிணையான மதிப்பில் வேறு நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியது. அதற்காக வங்கிகளின் முன்னால் வரிசையில் காத்திருந்து நோட்டுகளை மாற்றியபோது ஒவ்வொருவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்றி வழங்கப்பட்டது. அதுவும்கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால், வங்கிகளில் 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை. 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது 2.23 லட்சம் கோடி அளவுக்குத்தான் சிறிய மதிப்புள்ள நோட்டுகள் அரசாங்கத்திடம் இருந்தன. 14.18 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக அரசாங்கத்தின் கையிலிருந்தது வெறும் 2.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மட்டும்தான். அதனால்தான், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக வேறு நோட்டுகளை வங்கிகளால் வழங்கமுடியவில்லை. இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அரசாங்கம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அதனால்தான், தமது சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளில் வரிசையில் காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த உயிரிழப்புகள் விபத்தினாலோ இயற்கை பேரிடராலோ ஏற்பட்டவை அல்ல. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உருவாக்கிய பொருளாதாரப் பேரிடர் நடவடிக்கையால் நேர்ந்ததாகும். எனவே, அவர்கள் அனைவரும் மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்றே கருதவேண்டும். இந்தப் படுகொலைகளுக்கு பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையை எடுத்த பிரதமரும் நிதியமைச்சருமே பொறுப்பேற்கவேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
2. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் காரணமாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துவிட்டதாக மோடி அரசு சொல்கிறது. 56 லட்சம் பேர் புதிதாக வருமானவரி செலுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போதே அந்தப் புள்ளி விவரம் பொய் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதை மெய்பிப்பதுபோல இன்று வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் இ-ரிட்டர்ன் சமர்ப்பிப்போரின் எண்ணிக்கை 27.95% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. 2013-2014 ஆம் நிதி ஆண்டில் இ-ரிட்டர்ன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 38.67% உயர்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 31% அதில் வளர்ச்சியிருந்தது. பண மதிப்பு அழிப்பு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டில்கூட 27.22% வளர்ச்சியிருந்தது. எனவே, பணமதிப்பு அழிக்கும் நடவடிக்கையால்தான் இந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று சொல்வது மிகப்பெரிய மோசடியாகும்.
அதைபோலவே நேரடி வரி வருவாயிலும் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. நிர்ணயித்த இலக்கில் கடந்த ஆண்டு வசூலித்த அதே 22% தான் இந்த ஆண்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.
3. போலிப் பெயர்களில் அயல்நாடுகளில் நிறுவனங்களை நடத்தி கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலையோ அதற்கு நேர் எதிராக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு பாரடைஸ் பேப்பர்ஸ் என அயல்நாடுகளில் போலி நிறுவனங்களை நடத்துவோரின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 714 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாஜகவுக்கு நெருக்கமான நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் விஜய் மல்லையா, மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாஜக வைச் சேர்ந்த எம்.பி ஆர்.கே.சின்ஹா ஆகியோரது பெயர்களும் அதில் உள்ளன. அதைப்பற்றி இதுவரை பிரதமரோ, நிதி அமைச்சரோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல, லீஷ்டென்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் 1400 பேர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலைத் தருவதற்குத் தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்தபோதிலும் அந்தப் பட்டியலை கேட்டுப் பெறுவதற்கு இதுவரை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; அதுபோலவே ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கியிருப்போரின் பட்டியலை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றையெல்லாம் பாஜகவை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி 2016 நவம்பர் 15 ஆம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது குற்றம்சாட்டி கடிதமாகவே எழுதியிருக்கிறார்.
எச்.எஸ்.பி.சி வங்கியின் ஸ்விஸ் நாட்டுக் கிளையில் 25,420 கோடி ரூபாய் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த 1195 பேரின் பட்டியல் 2015 பிப்ரவரி மாதத்தில் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டது. இதுவரை அவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை,அந்தக் கருப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
பனாமா நாட்டில் உள்ள மொஸாக் ஃபொன்சேகா என்ற நிறுவனத்தின்மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் போலி கம்பெனிகளைத் துவக்கி கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் முப்பத்தேழாயிரம் இந்தியர்களின் பட்டியலை 2016 ஏப்ரலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டது. அதில் அமிதாப்பச்சன், அய்ஸ்வர்யா ராய், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் வினோத் அதானி உள்ளிட்டோரின் பெயர்கள் இருக்கின்றன.ஆனால் அவர்களில் எவரும் கைதுசெய்யப்படவில்லை,அவர்கள் பதுக்கியதாக சொல்லப்பட்ட கறுப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இப்படி கருப்புப் பணக்காரர்களையும், போலி நிறுவனங்களை நடத்துவோரையும் கூட வேவைத்துக் கொண்டு, அவர்களை பாதுகாத்துக்கொண்டுதான் கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டோம் எனமோடி அரசு மக்கள் பணத்தில் இன்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.
4. வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகை தொடர்பான கணக்குகள் சிலவற்றில் சந்தேகம் இருப்பதாகவும்அதை ஆராய்ந்துகொண்டு இருப்பதாகவும் இன்றைய விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவைஎல்லாம் கருப்புப் பணம்தான் என மோடி அரசு கூறவில்லை. மாறாக, பண மதிப்பு அழிப்பு நடவடிக்கைஎடுக்கப்படுவதற்கு முன்பே பாஜகவுக்கு நெருக்கமானவர்களுக்கு அந் தத் தகவல் ரகசியமாகக்கசியவிடபட்டது என்றும், குஜராத் மாநிலத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானகூட்டுறவு வங்கிகள் பலவற்றில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் மாற்றித்தரப்பட்டதாகவும், அங்குள்ள நகைக் கடைகளில் பாஜகவினரால் கிலோ கணக்கில் தங்கம் வாங்கப்பட்டதாகவும் புகார்கள்தெரிவிக்கப்பட்டன. இந்த புகார்கள் எதையும் மோடி அரசு இதுவரை விசாரிக்கவில்லை.
5. பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் 75% குறைந்துவிட்டனஎன்றும் இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் 20% குறைந்துவிட்டது என்றும் மோடி அரசின்விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய்யைத்தவிர வேறுஒன்றுமில்லை. காஷ்மீர்மாநிலத்தில் வன்முறை சம்பவங்களில் 2016 ஆம் ஆண்டு 82 பாதுகாப்புப் படையினரும் 150தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். 2017இல் இதுவரை 40 பாதுகாப்புப் படையினரும் 160 தீவிரவாதிகளும்கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கிகளைக் கொள்ளையடிப்பதன்மூலமும், உள்ளூர் வர்த்தகர்களைமிரட்டிப் பணம் பறிப்பதன்மூலமும்தான் காஷ்மீர் தீவிரவாதிகளுக்குப் பணம் வருகிறது என்பதைபாதுகாப்புத்துறை அதிகாரிகளே கூறியுள்ள நிலையில் ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதால் காஷ்மீரில் வன்முறை குறைந்துவிட்டது என்று மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது. மத்திய அமைச்சர்ரவி சங்கர் பிரசாத் இன்னும் ஒருபடி மேலே போய் இந்த நடவடிக்கையால் விபச்சாரம் செய்வோரின்எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று மிகப்பெரிய நகைக்சுவை தகவலை கூறியுள்ளார். ஆட்சியாளர்கள்எந்த அளவுக்கு மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்தத்தகவலும் வெளியாகவில்லை. ஆனால், நாட்டின் பல பகுதிகளிலும் பாஜக ஆதவாளர்களிடமிருந்துதான்பல கோடிக் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் கைப் பற்றப்பட்டுள்ளன.
6. 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாததாக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு உயர்ந்துவிட்டது என மோடி அரசு மிகப்பெரிய பொய்யை இன்றைய விளம் பரத்தில் கூறியுள்ளது. ஆனால், பண மதிப்பு அழிப்புநடவடிக்கையின் காரணமாக சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் வேலைகளைஇழந்துள்ளார்கள் என்பதே உண்மை. 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில்மட்டும் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சென்டர் ஃபார்மானிடரிங்க் இன்டியன் எகானமி என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துவந்த திருப்பூர் பின்னலாடைத்தொழில் முற்றிலுமாக நசிந்துப்போய் இன்று பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதுபோலவே ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
7. தனக்கும் பொருளாதார அறிவு ஏதுமில்லாமல், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர்கள் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹாஉள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் சொன்ன ஆலோசனைகளையும் கேட்காமல் மோடி அரசுஎடுத்துள்ள இந்த நடவடிக் கையால் இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் நெருக்கடிக்குஆளாகியிருக்கிறது. ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியை மிகப்பெரிய அளவில் அதுபாதிப்படையச் செய்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டு, சுமார்3 லட்சம் கோடி அளவுக்கு இந்திய பொருளாதாரத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மோடி அரசேபொறுப்பேற்கவேண்டும்.
ரூபாய் நோட்டுப் புழக்கத்தைக் குறைத்துவிட்டதாக பிரதமர் மோடி இப்போது மார்தட்டிக்கொள்கிறார்.2014 மே மாதத்தில் அவர் பதவி ஏற்கும்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 13.71 லட்சம் கோடியாகும். 2016 நவம்பர் 4 ஆம் தேதிக்குள் அது ரூபாய் 17.97 லட்சம் கோடியாக உயர்ந்தது. அது 31% கூடுதலாகும். குறுகிய காலத்தில் அந்த அளவுக்கு ரூபாய் நோட்டுகள் ஏன் புதிதாக அச்சிடப்பட்டுபுழக்கத்தில் விடப்பட்டன பண மதிப்பு அழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்தப் பணம் எவரிடம்போனது என்பதற்கு பிரதமர் மோடி தான் விளக்கமளிக்கவேண்டும்.பண மதிப்பு அழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வி என்பதை ஒப்புக்கொண்டு பிரதமர் நரேந்திரமோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பகிரங்கமாக இந்திய மக்களிடம் வருத்தம்தெரிவிக்கவேண்டும்.
போலி புள்ளி விவரங்களை அளித்து மேலும் மேலும் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல்தகுதிவாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இனியாவது பொரு ளாதாரத்தை மேம்படுத்தும்நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment