வாஷிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு
வாஷிங்டன், ஆக. 17- பசுப்பாதுகாப்புக் குழுவினரால் பெரும்பாலான வன் முறைகள் இந்தியாவில் உள்ள முசுலீம் களை குறிவைத்தே நடந்துள்ளன. பன்னாட்டு மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அய்க்கிய நாடு அறிக்கையை 15.8.2017 அன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியிடப் பட்டுள்ள
பன்னாட்டு மத சுதந்திரத்துக் கான அறிக்கையில் பசுப்பாதுகாவலர் கள்மீது
வழக்குப்பதிவு செய்து நீதிமன் றத்தில் நிறுத்துவதில் தோல்வி கண்டுள் ளன
என்று அரசின்மீது குற்றச்சாற்றை பதிவு செய்துள்ளது
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப் பேற்ற
பிறகு அமெரிக்காவிலிருந்து வெளியான அறிக்கையிலேயே இவ் வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன்
வெளியிட்ட அறிக்கையில், சிவில் சங் கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறியுள்
ளதன்படி, இந்து தேசியவாதக் குழுக் களைச் சேர்ந்தவர்கள், இந்து அல்லாத தனி
நபர்கள் மற்றும் அவர்களின் வழி பாட்டிடங்கள்மீதான வன்முறைகளை நடத்தி
வருகிறார்கள். அதனால், பாஜக தலைமையிலான அரசில் சிறுபான்மை மக்கள் மிகவும்
வேதனைகளை அனு பவித்து வருகிறார்கள் என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
மதரீதியில் குறிவைத்து கொலைகள்,
தாக்குதல்கள், கலவரங்கள், பாகுபாடு, சூறையாடல் ஆகியவற்றின்மூலமாக தனி
நபர்களின் மத நம்பிக்கை மற்றும் மதம் மாறுகின்ற உரிமைகளைக் கட் டுப்படுத்தி
வருவதாக அறிக்கையின் தகவல்கள் கூறுகின்றன.
2016ஆம் ஆண்டில் பன்னாட்டளவில் பல்வேறு
நாடுகளிலும் மத சுதந்திரத்தின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு
அமெரிக்க அரசு சார்பில் ஆண் டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசுப் பாதுகாப்பு குழுக்
களால் நிகழ்த்தப்படுகின்ற கொலை கள், கும்பல் வன்முறைகள், தாக்குதல் கள்
மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை நிகழ்வுகளிலும்
பெரும்பாலும் முசுலீம்களுக்கு எதிரா கவே நடத்தப்பட்டுள்ளன.
பன்னாட்டு மத சுதந்திரம் குறித்த 2016ஆம்
ஆண்டுக்கான அறிக்கையில், இந்துக்கள் என்று கூறிக்கொண்டு, முசுலீம்களையும்,
கிறித்தவர்களையும் அச்சுறுத்தி, அவர்கள்மீது தாக்குதல்களை நடத்துவதுடன்,
அவர்களின் சொத்துக ளையும் அழிக்கிறார்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
மோடியின் சுதந்திர நாள் பேச்சு வேறு,செயல்வேறாக உள்ளது
பசுக்களைக் கொல்கிறார்கள் அல் லது சட்ட
விரோதமாக கடத்துகிறார்கள் அல்லது விற்கிறார்கள் அல்லது மாட் டிறைச்சியை
சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற குற்றங்களை சுமத்தி சந்தேகங் களின்
அடிப்படையிலேயே சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்ற
பசுப்பாதுகாப்புக் குழு வினரை சட்டத்தின்முன் நிறுத்தாமல் உள்ளனர்
பொறுப்பான அரசுத்துறையினர்.
செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையில்
பிரதமர் மோடி தம்மைக் காத் துக்கொள்ளும் வகையில் அவர் பேசும் போது, மத
நம்பிக்கைகளின்பெயரால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் ஏற்றுக்கொள்ள
முடியாதவை என்றும், ஜாதியமும், வகுப்புவாதமும் நாட்டிற்கு விஷம் போன்றவை
என்றும் குறிப் பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்துகளால் பசுப் பாதுகாவலர்கள் என்போரால் தாக்கப்படுகின்ற நிகழ்வுகள் சிறிதளவு குறையலாம் என்பது கற்பனையே.
இந்திய எவாங்கெலிகல் ஃபெலோ ஷிப் அமைப்பு
கூறியுள்ள கருத்தைச் சுட்டிக்காட்டி அறிக்கையில் குறிப்பிடு கையில்,
நாடுமுழுவதும் கிறித்தவர் களை மோசமாக நடத்திய நிகழ்வுகளின் எண்ணிக்கை 2015
ஆம் ஆண்டில் 177 ஆக இருந்த நிலையில், 2016ஆம் ஆண் டில் மட்டும் 300
நிகழ்வுகளாக அதிகரித் துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இசுலாமிய மதத்தில் பின்பற்றப்படு கின்ற
நடைமுறைகளில் ஒன்றாக மண விலக்கு கோரும்போது கூறப்படுகின்ற முத்தலாக்
முறைக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவர
வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மஹோபா பகுதியில்
அக்டோபர் 24இல் மோடி பேசியபோது, "மத நம்பிக்கைகளின் பெயரால் பெண்களை
பாகுபடுத்துவ தற்கு இடம் அளிக்க முடியாது. முசுலீம் பெண்களுக்கு
அரசமைப்பின்படி உள்ள உரிமைகளை காத்திட அரசு பொறுப் பேற்கும்" என்றார்.
மதத் தலைவர்கள் தங்கள் மதங்க ளில் அரசு
தலையிடுவதை எதிர்த்து வருகிறார்கள். மத ரீதியிலான முடிவு களை மதத்தைச்
சேர்ந்தவர்களே எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
மத சிறுபான்மை மக்கள் கூறும் போது,
மத்தியில் உள்ள அரசு எப்போ தாவது வன்முறைகளுக்கு எதிராக பேசு கிறது. அதையே
உள்ளூர் தலைவர்கள் பேசுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல், மத
சிறுபான்மை மக்களை ஆபத்தில் தள்ளிவருகிறார்கள் என்று அறிக்கையில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment