காரைக்குடி, ஜூலை 3 ஒற்றை ஆட்சி முறையை நோக்கி ஒற்றை வரி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். திட்டம்! அந்த அடிப்படையில் மத்திய பிஜேபி அரசு ஒற்றை வரியை கொண்டு வந்துள்ளது என தமிழர் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடிக்கு வருகைதந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (2.7.2017) செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:
செய்தியாளர்: சரக்கு, சேவை வரி விதிப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத் துகிறதே? இதுகுறித்து....?
தமிழர் தலைவர்: ஜி.எஸ்.டி. என்கிற முறை இந்தியா முழுவதும் ஒரே சீராக இருக்கும் என்று கேட்பதற்கும் அல்லது படிப்பதற்கும் சிறப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சீர்மை என்பது இருக்கிறதே, மாநிலத்துக்கு மாநிலம் பொருள் விற்பனைக்கு மாறுபடக்கூடிய சூழல் ஏராளம் இருக்கின்றன. காங்கிரசு ஆட்சியின்போதே துவக்கினார்கள் என்று சொன்னாலும்கூட, போதிய அளவிற்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கக்கூடிய வணிகர்கள், இதனால் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு தரப்பினர் ஆகியோரிடம் அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு, பலருக்கும் பாதகமில்லாமல், இந்த சீர்மை யான வரியினாலே ஒரு பொது நன்மை ஏற்படுகிறது என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கி, அதற்குப்பிறகு, இது அமலாக்கியிருந்தால், இது மக்களுக்கு சங்கடத்தை தராத ஒன்றாக அமைந் திருக்கும். ஆனால், அப்படி செய்யவில்லை. இதை அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்ததைப்போல ஏதோ நாங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தலுக்கு எதிராக செய்தோம் என்று ஒற்றையாட்சிமுறை, இந்தியா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, அந்த அடிப்படையிலேயே ஒரே வரி என்ற அளவிலே இதை ஆக்கியிருப்பது என்பது, அந்தக் கொள்கைக் காக இவர்கள் அவசரப்பட்டிருக்கிறார்களே தவிர, இதனுடைய முழுப்பயன் என்பது பாதிக்கப்படாத மக்கள் மத்தியிலே கொண்டுசெல்லும் அளவுக்கு செய்திருக்கவேண்டும்.
விற்பனை வரி என்பதையே முதல் முதலில் காட்டியவர் இராஜகோபாலாச்சாரியார் 1938இல். சென்னையிலிருந்துதான் ஆரம்பித்தது. இப்போது மாநிலங்களுக்கு கொடுக்கக்கூடிய இந்த பங்கு, இதன்மூலம் வெகுவாக பாதிக்கப்படக்கூடும்.
தமிழ்நாட்டினுடைய உரிமைகளும் அதிக அளவில் பறிக்கப்படும். இன்னும் பலருக்கும் புரியவில்லை. பலரும் குழப்பத்திலே இருக்கிறார்கள். ஆகவே, இதைப்பற்றிய ஒரு தெளிவுபடுத்துவதற்கு உரிய அவகாசம் தேவை. அதைச் செய்ய வேண்டும். இல்லையானால், இதில் நோக்கம் சிறப்பாக இருப்ப தாகக் கூறினாலும், இதனுடைய விழுமியங்களும், அது ஏற்படுத்தக்கூடிய வினைவுகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தருமா? என்பது அய்யப்பாடு.
செய்தியாளர்: கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே...?
தமிழர் தலைவர்: கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பாஜகவினர் சுவரெழுத்து எழுதுகிறார்கள். ஆட்களே இல்லாத கட்சி, மிஸ்டு கால் மூலமாக கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள். தாங்கள்தான் ஆளப்போகிறோம் என்று பினாமி உருவமாக ஓர் ஆட்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலே, கழகங்களே தேவையில்லையானால், தமிழ்நாட்டின் ஓட்டு களைத்தான் இன்றைக்கு குடியரசுத் தலைவர் தேர் தலிலே வெற்றி பெற வேண்டுமானாலும், அவர் களைத்தான் நம்பிவந்து நாடிவந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துத்தான் அவர்களின் வாக்கு களை வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு மட்டும் கழகம் தேவை, மற்றவைகளுக் கெல்லாம் கழகம் தேவை. நல் அடிமைகளாக இருப்பதற்கு கழகம் தேவை என்கிற அளவுக்கு இந்த ஆட்சியை அச்சுறுத்தி, பயமுறுத்தி நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். கழகங்களே இல்லாத ஆட்சி வரட்டும், ஆனால், கழகங்களே இல்லாத மற்ற மாநிலங்களில், அதுவும் பசுவுக்கு இருக்கிற பாதுகாப்பு மனிதருக்கில்லை என்ற அளவிலே, இவ்வளவு எதிர்ப்பு வந்த பிற்பாடு பிரதமரே கூட, பசு வதை வன்முறை என்பதை ஒப்புக்காகவாவது கண்டிக்க முன்வந்திருக்கிறாரே, இதிலிருந்தே பசு மாட்டுக்கு பாதுகாப்பு இருக்கிற அளவுக்கு மற்ற வர்களுக்கு இல்லை. பசுவின் பெயராலே ஏராளமான கலவரங்கள் நடக்கிறது என்பதை பிரதமருடைய வாக்குமூலமே தெளிவாக்கி இருக்கிறது.
ஆகவே, கழகங்களே இல்லாத தமிழ்நாடு என்றால், மத, ஜாதி கலவரங்களே மிகுந்த தமிழ் நாட்டை உருவாக்க அவர்கள் துடிக்கிறார்கள்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- குடியரசுத் தலைவர் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி : மீராகுமார்
- ஜி.எஸ்.டி.யால் பறி போகிறது மாநில உரிமை
- நாட்டின் பாதுகாப்பு விவகாரத்திலும் தில்லுமுல்லு வேலை செய்த பாஜக!
- இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதுதான் மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா?
- அமெரிக்காவில் பிரதமர் மோடி அமெரிக்காவிலிருந்து ‘வாஷிங்டன் போஸ்ட்' ஏட்டின் கண்டனத் தலையங்கம்!
No comments:
Post a Comment