‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி திராவிடர் கழகம் நடத்திடும்
ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்!
தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 7 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பிற் கிணங்க ‘நீட்’ மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டு மெனக் கேட்டு, தி.மு.கழக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் இன்றைக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பாதிக்கப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு
இந்த ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத் திற்கு விலக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோ தாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கே அனுப்பாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.
அதிமுக அரசோ அது பற்றியெல்லாம் பேசுவதற்கோ, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ நேரமின்றி அவர்களின் உள்கட்சி சண்டையிலும், ஊழல் போட் டியிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டதிலி ருந்து இன்றுவரை பல்வேறு குழப்பங் களை சந்தித்துள்ள மாணவர்களும், பெற்றோரும் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண் டிருந்தாலும் மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகி விட்ட வேதனைக் கதை தொடர்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் எதிரொலித்த தமிழுணர்வுக்கு மத்தியில் உள்ள அரசு இதுவரை மதிப்பளிக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக அமைந்திருக்கிறது.
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தாய்கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் அவர்கள் கடந்த 4.7.2017 அன்று திராவிட முன்னேற் றக் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, 12.7.2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு கோடி அஞ்சல் அட்டைகள், மின்னஞ்சல்கள் மாண வர்கள் மூலம் அனுப்புவது என்று மிக முக்கிய மான முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
சமூக நீதியை பாதுகாக்க...
சமூக நீதி, மாநில உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த சீர்மிகு முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு அக்கறையுடனும், ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்று கழக மாணவர் மற்றும் இளைஞரணியினரை கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு கோடி அஞ்சலட்டைகள்
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வின்படி ‘நீட்’ மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு ஒரு கோடி அஞ்சலட்டைகள், மின்னஞ்சல்கள் அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், வருகின்ற 12 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பேரார்வத் துடன் பங்கேற்று தமிழ்நாட்டின் உணர்வு களை மத்திய அரசுக்கு உணர்த்தி வெற்றி கரமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.
இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment