‘நீட்’ தேர்வில் ஆங்கிலம் - இந்தி மொழி வினாக்கள் தவிர மற்ற மாநில மொழி வினாக்கள் வேறுபட்டே இருந்தன!
உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது சி.பி.எஸ்.இ. நிர்வாகம்
புதுடில்லி, ஜூன் 9 ‘நீட்’ தேர்வு வினாத்தாள்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி வினாக் கள் கேட்கப்படாமல், வெவ்வேறாக இருந் தன என்பதை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ஒட்டுமொத்தமாக செல்லாது என்று அறிவிக்கப்படுமா? என்று நாடே எதிர்ப்பார்க்கிறது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பெறுப்பு இந் திய மருத்துவக் கழகத்துக்கு உண்டு. இந்தியாவில் மருத்துவ கல்வி தரத்தை முறைப்படுத்தவும்,கல்வித்தரத்தைஉயர்த் துவதற்கான வழிமுறைகளை உருவாக்கு வதும் மருத்துவக் கழகத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
அதன்படி பொது மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த 2016- இல் முடிவு செய்யப்பட்டது. இதற்காக உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. ‘நீட்’ தேர்வு நடத்தும் பொறுப்பு சிபிஎஸ்இ-யிடம் வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் 28.4.2015- இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் மே 7- இல் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் 9,13,099 மாணவர்கள் அதாவது 80.16 விழுக்காடு மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர்கள் வெறும் 10,594 பேர் (9.25 விழுக்காடு),தெலுங்கு மொழியில் 1766 (0.15 விழுக்காடு), அசாமியில் (3810.33 விழுக் காடு), குஜராத்தி மொழியில் 47,853 (4.2 விழுக்காடு), மராத்தி 975 (0.8 விழுக்காடு), தமிழ் 15,206 (1.33 விழுக்காடு), வங்கமொழி 34,417 (3.02 விழுக்காடு), கன்னட மொழியில் 712 (0.6 விழுக்காடு) மற்றும் ஒரிய மொழியில் 400 பேர் (0.03 விழுக்காடு) தேர்வு எழுதியிருந்தனர். 9.25 விழுக்காடு தேர்வர்களுக்காக 90.75 விழுக் காடு மாணவர்களின் வினாத்தாள்களில் பல் வேறு குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. மாநில மொழிகளில் தேர்வெழுதியவர்களின் ஒப்பிடும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதியவர்கள் மிகவும் சொற்பமே!
இந்தி, ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜ ராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பாரபட்சம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது.
சி.பி.எஸ்.இ.யின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆனால், உச்சநீதிமன்றத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழி வினாக்களைத் தவிர மற்ற மாநில மொழி வினாத்தாள்கள் வேறுபட்டே இருந்தன; கேள்வித்தாள் தயாரிக்கும் குழுவே மாநில மொழி வினாக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஆகவே, இப்படி அமைந்துவிட்டது என்று நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ கூறியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7- ஆம் தேதி நடைபெற்றது. ஜூன் 8- ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் விநியோகம் செய்யாததால், ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த சந்தியா உட்பட 9 மாணவர்களும், திருச்சியைச் சேர்ந்த மலர்க்கொடியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மே 24- ஆம் தேதி உத்தரவிட்டது..
இந்நிலையில், தடையை நீக்கக் கோரி சிபிஎஸ்இ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு மீது வரும் 12- ஆம் தேதி விசாரணை நடக்கவுள்ளது.
இந்தியாவிலேயே குஜராத் மொழியில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (47,853). குஜராத் மொழியில் வெளிவந்த வினாக்கள்தான் மிகவும் எளிமையாக இருந்தன என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இந்தியாவுக்கே கேரள அரசு வழிகாட்டுகிறது! வழிகாட்டுகிறது!!
- பிற்போக்கு பி.ஜே.பி. ஆட்சி வீழ்த்தப்படவேண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் தாக்கு
- இஸ்லாமியர்களே இறைச்சி உண்ணாதீர்! துளசிச் செடியை வளருங்கள்! ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் இந்திரேஷ்குப்தா பேச்சு
- மதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது காவிக்கூட்டம்
- மானமிகு கலைஞருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
No comments:
Post a Comment