கனடா நாட்டை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் எழுப்பிய கேள்விக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சீஸ் அளித்துள்ள பதில் பரிதாபமானது.
கத்தோலிக்க மதத் தலை வரான போப் பிரான்சீசிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
6 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில், 26 நாடு களிலிருந்து 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.
6 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில், 26 நாடு களிலிருந்து 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.
இவற்றில் 50 கேள்வி களைத் தெரிவு செய்து அதற்குப் பதிலளித்து ஒரு புத்தகமாக தயாரிக்கப்பட்டது. இந்த 50 சிறுவர்களில் கனடா நாட்டை சேர்ந்த ரியான் என்ற சிறுவனும் பங்கேற்றுள்ளான்.
சிறுவன் ரியான் போப் புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அன்பிற்குரிய போப் அவர்களே, இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டு இருந்தார்? எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னர் உலகமே வெறுமையாகத் தானே இருந்திருக்கும்? அப்போது கடவுள் தனிமையாக இருந்தது போன்று உணர்ந்தாரா?’ என்ற கேள்வியை எழுதி அனுப்பியுள்ளான்.
‘Dear Pope Francis’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த புத்தகம் 1.3.2016 அன்று வெளியிடப்பட்டது. அந்நூலில் ரியான் கேட்ட கேள்விக்கு - போப் அளித்த பதிலும் இடம்பெற்றுள்ளது.
ரியானின் கேள்விக்கு போப் ஆண்டவர் பதி லளித்தபோது, ‘உலகத்தை படைப்பதற்கு முன்னர் கடவுள் காலத்தை (Time) படைத்தார். ஆனால், இதையெல்லாம் படைப்பதற்கு முன்னால் கடவுள் அன்பை விரும் பினார். அன்பு தான் கடவுள்’ என பதிலளித்துள்ளார்.
போப்பின் பதில்களைப் பெற்ற இந்த 50 சிறுவர்களும் ரோம் நகருக்குச் சென்று போப்பை நேரில் சந்தித்து, வாழ்த்து மற்றும் பரிசுகளைப் பெற்று வந்துள்ளனர்.
பரிசுகளைப் பெற்றதும் வாழ்த்துக்களைப் பெற்றதும் இருக்கட்டும். சிறுவன் எழுப்பிய வினாவுக்கு போப் சொன்ன பதில் சரியானது தானா? அறிவுக்குப் பொருந் தக் கூடியதுதானா?
காலத்தைப் படைத்தா ராமே கடவுள்? காலம் என் றால் என்ன? அது தனியாகத் தொங்கிக் கொண்டு இருக் கிறதா?
மனிதனாகப் பார்த்துக் கணித்துக் கொண்டதுதானே - காலம் இதில் படைப்பு என்பது எங்கிருந்து வந்தது? அன்பை விரும்பினாராம் என்பது இன்னொரு பதில். அந்த அன்புதான் கடவுளாம்.. சரி அன்புதான் கடவுள் என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லை என்பதாக ஆகி விட்டதா இல்லையா?
அந்த அன்புதான் உலகைப் படைத்ததா? மனிதனைப் படைத்ததா? காலம், அன்பு என்பவை வடிவமற்றவையல்லவா? வடிவமற்றவை வடிவமுள்ள பொருள்களைப் படைத்ததா?
கடவுள் பிரச்சினை என்று வந்து விட்டால் போப் முதல் சங்கராச்சாரி வரை பூஜ்ஜியம்தானா?
- மயிலாடன்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment