எழுத்தாளர் உணர்வுகளை இழித்துப் பேசும் தினமணி!
26.10.2015 தினமணி கட்டுரைக்கு மறுப்பு
- மஞ்சை வசந்தன்
வளர்ச்சி என்ற கவர்ச்சிகாட்டி, மக்களை குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றி பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தது முதல் வன்முறைச் செயல்பாடுகள், பேச்சுகள், கொலைகள், அழிவு வேலைகள் அன்றாடம் நடக்கின்றன. மதவெறிக்கூட்டம் பல அமைப்பு களாகப் பிரிந்து பல செயல்களை, திட் டங்களை, மோசடிகளை, கலவரங் களை, மோதல்களை உருவாக்குவது போலவே, அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள், பரிவாரங்கள் என்று பலரைப் பயன்படுத்தி அவ்வப் பொழுது வெறிப்பேச்சுகளை பேசி சிக்கல்களை உருவாக்குவதோடு மக் களின் உணர்வுகள், எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்றும் சோதித் துப் பார்க்கின்றனர்.
வளர்ச்சி என்ற கவர்ச்சிகாட்டி, மக்களை குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றி பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தது முதல் வன்முறைச் செயல்பாடுகள், பேச்சுகள், கொலைகள், அழிவு வேலைகள் அன்றாடம் நடக்கின்றன. மதவெறிக்கூட்டம் பல அமைப்பு களாகப் பிரிந்து பல செயல்களை, திட் டங்களை, மோசடிகளை, கலவரங் களை, மோதல்களை உருவாக்குவது போலவே, அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள், பரிவாரங்கள் என்று பலரைப் பயன்படுத்தி அவ்வப் பொழுது வெறிப்பேச்சுகளை பேசி சிக்கல்களை உருவாக்குவதோடு மக் களின் உணர்வுகள், எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்றும் சோதித் துப் பார்க்கின்றனர்.
மறுபுறம் தங்கள் திட்டங்களுக்குத் தடையாக, எதிராக இருக்கக்கூடியவர் களை, தங்கள் மோசடிகளை விளக்கிக் காட்டுகின்றவர்களை, அழித்தொழிக் கும் செயலை தங்கள் காலிகளைக் கொண்டு செய்து வருகின்றனர்.
அவ்வகையில் மனிதநேயத்தோடு மக்கள் பணியாற்றி, மக்களுக்கு விழிப் பூட்டி, பகுத்தறிவு பரப்பி, ஆதிக்கத் திற்கு எதிராய் குரல் கொடுத்துவரும் முற்போக்குச் சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை தொடர்ச்சியாக கொலை செய்தும் வருகின்றனர்.
கொலை செய்த கையோடு, மற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக் கும் கொலை மிரட்டல் விடுகின்றனர். அதேபோல் மக்களின் தனிப்பட்ட விருப்பங்களிலும், நுகர்வுகளிலும் தலையிட்டுத் தடை விதிக்கின்றனர்.
காதலிக்கக்கூடாது, விரும்பும் ஆடையை அணியக்கூடாது, விரும் பும் உணவை உண்ணக்கூடாது என்று கட்டளையிடுகின்றனர். மீறினால் தாக் குதல் நடத்திக் கொலை செய்கின்றனர்.
இவற்றை அரசும் காவல்துறையும் விரைந்து தடுக்காத நிலையில், தங்கள் கண்டனங்களை எழுத்தாளர்கள் எழுப் பினர். அதற்கும் பயன் இல்லாமல் அடாவடிச் செயல்கள் அன்றாடம் நிகழ்ந்ததால் வெறுப்புற்ற எழுத்தாளர் கள் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்து எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது தங்கள் உள்ளக் கொதிப்பை, குமுறலை, உணர்வை, எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்கும் ஒரு பண்பட்ட வழியாக, அதுவும் கடைசி வழியாகக் கையாண்டுள்ளனர்.
ஆனால் இதை, மதவெறிக்கும் பலும், அவற்றை ஆதரிக்கின்ற ஆரி யப் பார்ப்பனர்களும் கொச்சைப் படுத்தி பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர். கொலை செய்யும் கொடியவர்களை கண்டிக்காது, பாதிக்கப்பட்ட வர்களை பரிகாசம் செய்யும் பாசிசப் போக்கை அவர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால் இதை, மதவெறிக்கும் பலும், அவற்றை ஆதரிக்கின்ற ஆரி யப் பார்ப்பனர்களும் கொச்சைப் படுத்தி பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர். கொலை செய்யும் கொடியவர்களை கண்டிக்காது, பாதிக்கப்பட்ட வர்களை பரிகாசம் செய்யும் பாசிசப் போக்கை அவர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வைத்திய நாதஅய் யரின் சொந்த விருப்பு வெறுப்புகளை யெல்லாம் செய்திகளாக வெளியிட்டு, இது ஒரு ஆரிய பார்ப்பன ஏடு என்று, அன் றாடம் காட்டிவருகின்ற தினமணி அவ்வகையிலே தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
எழுத்தாளர் எதிர்ப்பு பற்றி கருத்துச் சுதந்திரமும், நடுநிலையும் என்ற தலைப் பிட்டு நடுப்பக்கம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது (தினமணி 26.10.2015) சந்திர.பிரவீண்குமார் என்ற ஒருவர் அதை எழுதியுள்ளார்!
அவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை அவரது எச்சரிக்கையே வெளிப்படுத்து கிறது.
தொடர்ந்து ஒரு தரப்பாகவே நடுநிலை பிறழ்ந்த நிலையில் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தினால், சாதாரண மக்கள் வன் முறைப் பேச்சுகளை ஆதரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே அந்த எச்சரிக்கை!
எழுதுகின்றவர் தான் தரம் தாழ்ந்து தாதா பாணியில் எழுதுகிறார் என்றால், அதையும் ஒரு நாளேடு வெளியிடுகிறது என்றால், அதை விட தரம் கெட்ட நிலை வேறு என்ன இருக்க முடியும்.
எழுத்தாளர்கள் செய்த தவறு என்ன? தங்களையொத்த எழுத்தாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். தங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பியளித்துத் தங்கள் உணர்வுகளை உள்ளக் கொதிப்பைக் காட்டியுள்ளனர்.
இதற்கும் இந்த நபர் விடும் எச்சரிக்கைக்கும் என்ன தொடர்பு?
மதவெறிக்கும்பலும், ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளும், பி.ஜே.பி. தலை வர்களும், அமைச்சர்களும், எம்.பிக் களும் அன்றாடம் வெறிப்பேச்சு பேசி நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்கள். இதை குடியரசுத் தலைவர் கண்டிக்கின்றார். மோடியும், ராஜ்நாத்சிங்கும் ஏன் அமித் ஷாவும் கூட கண்டித்து (வேறு வழியில் லாமல்) எச்சரிக்கின்றனர். அந்த அள வுக்கு அந்த வெறிப்பேச்சின் கொடுமை, கடுமையுள்ளது. அதை இவர் ஆதரிப் பாராம். பொதுமக்கள் ஆதரிப்பார்களாம். இதை ஒரு பத்திரிகை கட்டுரையாக வெளியிடுகிறது.
பொதுமக்கள் காரித்துப்புகிறார்கள். அதை மறைத்து, ஏதோ இவர்கள் பின்னே பொதுமக்கள் நிற்பதுபோல ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுவதோடு, எச்சரிக்கிறர்களாம்! என்னே வேடிக்கை?
வெறிப்பேச்சை ஆதரித்துப் பாருங்கள், பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம். தெரி யாமல் தேர்ந்தெடுத்துவிட்டோமே என்று மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என்பது பிரவீண்குமாருக்கு தெரியாமலி ருக்கலாம். தினமணிக்குக் கூடவா தெரிய வில்லை?
இந்தக்கட்டுரையில் இவர் அப்படி யென்ன நியாயத்தை கூற வருகிறார்? தனது பாசிச தாகத்தை கக்கியுள்ளதைத் தவிர அதில் நியாயமான கருத்து எதுவும் இல்லையே!
இதோ அவர் கூறும் கருத்துக்கள்
1) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் பிராமணர்களை மட்டுமே திராவிட இயக்கங்கள் குறிவைக்கின்றன.
2) திராவிட இயக்கத்தினர் நவீன எழுத்துக்களை ஏற்க மறுக்கின்றனர்.
3) திராவிட இயக்கத்தை விமர்சித்து எழுத்தாளர்களால் எழுதமுடியவில்லை.
4) கம்யூனிஸ்ட்டுகள் கார்ல்மார்க்ஸை விமர்சிக்க இடங்கொடுப்பதில்லை.
5) மோடியரசின் கடுமையைக் கண்டிக்கலாம், ஆனால் தனிப்பட்ட அவதூறு எப்படிப் பரப்ப முடியும்?
6) எழுத்தாளர்கள் கொலை, தாத்ரி வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வற்புறுத்தலாம். மாறாக மோடியரசை எப்படிக் குறை கூறமுடியும்?
7) மதத்தின் பேரால் குண்டு வெடிக் கும்போது அமைதி காத்த எழுத்தாளர்கள் கொலை நிகழ்வில் மட்டும் விசாரிக் காமலே தீர்ப்புக் கூறுவது ஏன்?
இவையே இவர் கட்டுரையில் எழுப்பும் வினா, வேதனை.
இந்த ஏழு செய்திகளையும் முதலில் சொன்ன இவரது எச்சரிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர், எதைச் சார்ந்தவர் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். என்றா லும் இந்த பத்திரிகையையும் அப்பாவி மக்கள் படிக்கிறார்களே அவர்களுக்காக சில விளக்கங்களை எழுத வேண்டிய கட்டாயம் எழுகிறது!
எழுத்தாளர் படுகொலையும், அதன் வேதனையும் விளைவும் பற்றி பேச வந்தவர் அதை விட்டுவிட்டு அவருக் குள்ள ஆதிக்க அரிப்பையெல்லாம் தேய்த்துத் தீர்க்கிறார் இக்கட்டுரையில்.
எழுத்தாளர் படுகொலைக்கும் திரா விடக் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? அக்கட்சிகளின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு? எந்தப் புழுக்கத்தை எங்குவந்து காட்டுகிறார் பாருங்கள்!
எந்தத் தனிப்பட்ட பார்ப்பனரையும் திராவிட இயக்கம் எதிர்ப்பதில்லை. பார்ப்பன ஆதிக்கத்தை மோசடியை, சூழ்ச்சியை வஞ்சத்தை, மனிதநேய மற்ற செயல்களை, சதிவேலைகளைத் தான் கண்டிக்கிறார்கள்.
ஞானி, சின்னக்குத்தூசி, கமலகாசன் போன்றவர்களை, பரிதிமாற் கலைஞர் போன்றவர்களை பாராட்டி ஏற்றி போற்றத்தவறவில்லையே! மற்ற வர்களும் மாறினால் பாராட்டுவோமே!
ஜெயலலிதா இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் காத்த போது பாராட்டவில்லையா?
நவீன எழுத்துக்களை உருவாக்கிய வர்களே திராவிடர் இயக்கத்தவர். அப்படியிருக்க நவீன எழுத்துக்களை ஏற்கவில்லை என்பது அறியாமையா? அயோக்கியத்தனமா?
திராவிட இயக்கத்தை விமர்சிக்க முடியவில்லையாம்! இதைவிடப் பித்த லாட்டம் வேறு உண்டா? பொழுது போனா பொழுது விடிந்தா உங்க ளுக்கு அதுதானே முழுநேர வேலை! இது மக்களுக்குத் தெரியாதா?
கார்ல் மார்க்ஸை விமர்சிக்க கம்யூ னிஸ்ட்டுகள் இடம் கொடுக்கவில் லையாம்?
எங்கு தடைபோட்டார்கள்? எவர் வாயைப் பொத்தினார்கள்? எதையா வது பினாத்துவதா?
மோடி அரசை விமர்சிக்கலாமாம். ஆனால் தனிப்பட்ட அவதூறு எப் படிப் பரப்பலாம்?
யார் அவதூறு பரப்பியது? வழக்குப் போடு! அவதூறு பேசவே பத்திரிகையும் தொலைக்காட்சியும் நடத்திடும் கூட்டம் மற்றவர்கள் மீது குறை சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை!
எழுத்தாளர் கொலையைக் கண் டிக்கலாமாம். ஆனால் மோடி அரசை கண்டிக்கக் கூடாதாம்!
மூலத்தைத் தாக்காமல் விளைவை பேசுவதை முட்டாள்தான் செய்வான். இவ்விளைவுக்குக் கார ணம் ஆட்சி அதிகாரம்தான் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல மக்கள்!
மதத்தின்பேரால் குண்டு வெடிக் கும் போது கண்டிக்காத எழுத்தாளர்கள் கொலையை மட்டும் கண்டிப்பதேன்? இந்த நியாயஸ்தர் கேட்கிறார்!
மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு கட்சி வளர்ப்பதே காவிக்கும்பல் தானே! குண்டு வீசுவது, வன்முறை செய்வது யாராயினும் அதைக் கண்டிக்க திராவிட இயக்கங்களோ, முற்போக்கு எழுத்தாளர்களோ என்றும் தவறியதில்லை! அப்படியி ருக்க சாத்தான் வேதம் ஓதுவது போல் இந்தக் கட்டுரையாளர் கருத்துகூறுவது, உள்நோக்க உந்துதல் எது என்பது உலகுக்குப் புரியும்!
மக்கள் எல்லோரும் விழிப் போடுதான் இருக்கிறார்கள். அதுவும் வேகத்தோடு இருக்கிறார்கள்! அதிகம் ஆடினால் அதற்கு பதிலடியை கட் டாயம் கொடுப்பார்கள்! எச்சரிக்கை!
மக்கள் எல்லோரும் விழிப் போடுதான் இருக்கிறார்கள். அதுவும் வேகத்தோடு இருக்கிறார்கள்! அதிகம் ஆடினால் அதற்கு பதிலடியை கட் டாயம் கொடுப்பார்கள்! எச்சரிக்கை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மாட்டிறைச்சி விவகாரம்:
- அய்தராபாத்- சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு (3)
- இடைச்செருகலுக்கு ஆளாக்கப் பெற்ற அண்ணல் அம்பேத்கரின் பெயர்
- “பெரியார் கொள்கையைப் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம்” 92 வயது இளைஞர் இதோ பேசுகிறார்!
- அய்தராபாத்- சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு (2)
No comments:
Post a Comment