பிஜேபி - மோடிஅரசுக்குக் காணிக்கை:
காந்தியாரைக் கொன்ற மராட்டியப் பார்ப்பனன்
நாதுராம் கோட்சே உருவத்தோடு ரதயாத்திரையாம்!
இந்து மகாசாபா அறிவிப்பு
இந்து மகாசாபா அறிவிப்பு
குர்கான் அக்.20 கோட்சே மற்றும் அவ ரது கூட்டாளிகள் அனை வரின் தியாகத்தை மக் களிடம் விளக்கும் வகை யில் நாடெங்கும் கோட்சே ரதப் பயணத் திட்டத்தை நடத்திட இந்து மகாசபா முடிவு செய்துள்ளது. காந்தியடிகளைக் கொலைசெய்த குற்றத்திற் காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சே என்ற மராட் டிய பார்ப்பனனுக்கு நவம்பர் 15, 1949ஆம் ஆண்டு அம்பாலா சிறையில் தூக் குத் தண்டனை விதிக்கப் பட்டது,
நாதுராம் கோட்சே துவக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து பிறகு அரசியல் நடவடிக் கைக்காக இந்துமகாசபை யில் உறுப்பினர் ஆனவன். இவன் சாவர்கரிடம் பெரும் பொருளுதவி மற்றும் ஆயுத உதவிகள் பெற்று டில்லி சென்று பிர்லா கோவில் வளாகத்தில் அனைத்து மதப் பிரார்த் தனைக்குச் சென்று கொண்டு இருந்த காந்தி யாரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தான்.
அம்பாலா சிறையில் இவன் தூக்கிலிடப்பட்ட தும் அவனது உடலை வாங்க யாரும் வராததால், ஜீலம் நதிக்கரையில் உள்ள பொதுமயானத்தில் அவனது உடலை எரித் தனர். இந்த நிலையில் நாக்பூரில் சிலர் எங்களி டம் கோட்சேவின் சாம் பல் உள்ளது, அகண்ட பாரதம் பெற்ற பிறகு அந்தச் சாம்பலை சிந்து நதி அரபிக்கடலில் கலக் கும் இடத்தில் கரைப் போம் என்று சபத மிட்டனர்.
(சிந்து நதி காராச்சிக்கு அருகில் கடலில் சேர்கிறது தற் போது அது பாகிஸ் தானில் உள்ளது). அவ்வப்போது இந்து மகாசபை நாதுராம் கோட்சேவை வைத்து பத்திரிகைகளில் செய்தி வருமாறு ஏதாவது செய்துகொண்டு இருக்கும், ஆனால் கடந்த ஆண்டு மோடி தலைமை யில் ஆட்சி அமைந்த பிறகு இந்துமகாசபையின் நடவடிக்கையில் பெரிய அளவு மாறுதல் ஏற்பட்டு விட்டது,
முக்கியமாக டில்லியில் உள்ள கிஷான் கட்ச் என்ற இடத்தில் நாதுராம் கோட்சேவிற்கு நினைவிடம் ஒன்று ரகசிய மாக திறக்கப்பட்டது, அங்கு பகத் சிங் போன்ற படங்களும் வைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர் நினைவிடம் என்று கதை கட்டி விட் டார்கள். இருப்பினும் அங்கு நாதுராம் கோட்சே வின் சிலைக்குத் தான் தினசரி மரியாதை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்து மகாசபையில் தலைவன் சந்திரப்பிரகாஷ் கவுசிக் பத்திரிகையாளர்களைச் சந்தித்தான் அப்போது அவன் கூறியதாவது: கடந்த ஆண்டு எங் களின் வாக்குப்படி நாடு முழுவதும் பல இடங் களில் கோட்சேவின் சிலைகளை அமைத்து விட்டோம். ஆனால் சில முக்கிய காரணங்களால் நாங்கள் அதை விளம் பரப்படுத்தவில்லை, இம் முறை நாடு முழுவதும் கோட்சே ரதம் விட ஏற்பாடு செய்துள்ளோம் நவம்பர் 15-ஆம் தேதி புனேவில் கோட்சேவின் நினைவில்லத்தில் இருந்து புறப்படும் இந்த ரதம் நாடு முழுவதும் வலம் வந்து ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) மீண்டும் புனேவில் வந்து நிற்கும்,
இந்த ரதத்தில் கோட்சே, அவரது நண் பர்கள், பகத்சிங் மற்றும் சுதந்திரத்திற்காக பாடு பட்டு மரணமடைந்த இளைஞர்களின் படங்கள் இருக்கும், மேலும் கோட்சே வாக்குமூலம், அவரது தம்பி எழுதிய காந்தியின் கொலை ஏன் என்ற நூல்கள் சிறு சிறு பிரதிகளாக மாற்றப்பட்டு ரதம் செல்லும் இடங் களில் எல்லாம் அனை வருக்கும் விநியோகம் செய்வோம். மேலும் நவம் பர் 15 ஆம் நாளை பலி தான் திவஸ் (வீர மரண மடைந்தவர் நாள்) என்று அறிவிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள் ளோம் என்றார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கொலிஜியம் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள சமூகநீதி அறிக்கை
- இன்றைய சூழலில் கொலிஜியம் முறையே வரவேற்கத்தக்கது
- மதவாதக் கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து விட்டன - அமெரிக்கா கவலை
- மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்! - அரியானா முதல் அமைச்சர் (பிஜேபி)
- தவறு நடக்கும்போது அதனைக் கண்டிக்க பிரதமர் முன்வர வேண்டாமா? பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பிரதமருக்கு அழகல்ல
No comments:
Post a Comment