மாலேகான் வழக்கு: இந்துத்துவவாதிகளை
காப்பாற்ற அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்?
அரசு வழக்குரைஞர் அம்பலப்படுத்தினார்
அரசு வழக்குரைஞர் அம்பலப்படுத்தினார்
மும்பை அக் 15 மாலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான இந் துத்துவா தீவிரவாதிகளின் பெயர்களை நீக்கவேண்டும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.அய்.ஏ) அதிகாரி சுகாஷ் வார்கே தான் தமக்கு நெருக்கடி அளித்ததாக மகாராஷ்டிரா அரசின் சிறப்பு வழக் குரைஞர் ரோஹிணி சாலியன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச் சாட்டை தேசிய புலனாய்வு ஏஜென்சி நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப் டம்பர் மாதம் 29-ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
இந்த குண்டுவெடிப் புக்கு காரணமாக இருந்த தாக சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் சிறப்பு வழக்குரை ஞராக ரோஹிணி சாலியன் ஆஜராகி வந்தார்.
கடந்த ஜூன் மாதம் ரோஹிணி ஊடகங்களுக் கும், நாளிதழ்களுக்கும் அளித்த பேட்டியில், மத்தியில் மோடி அரசு அமைந்த நிலையில் மாலே கான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டார். அவர் வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளின் பெயர்களை நீக்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்த தாக கூறியிருந்தார்.
ஆனால் அந்த அதி காரியின் பெயரை ரோஹிணி வெளியிடவில்லை. அவர் அளித்த இந்த பேட்டியின் அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் பட்டேல் என்பவர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது 3 மாதங்களாகியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசா ரணை எதுவும் நடை பெறவில்லை. இதையடுத்து சஞ்சய் பட்டேல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தாம் கீழமைநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடைபெற வில்லை என்று குறிப் பிட்டு இருந்தார்.
இவ்வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்குரைஞர் ரோஹிணி, பிரமாண வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய புலனாய்வு ஏஜென்சியில் பணியாற் றும் அதிகாரியான சுகாஷ் வார்கே மும்பை காவல் துறை இணை ஆணையராகப்
பணியாற்றி வந்தார். அவர்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதித்துறையில் குறுக்கீடு செய்யும் விதமாக தலையிட்டார்.
கடந்த ஆண்டு(டிசம்பர் 2014) இறுதியில் என்னைச் சந்தித்த அவர் தமக்கு மேலிடத்தில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்ப தாகவும், அவர்கள் கேட்டுக்கொண்ட வாறு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறும் கூறினார். இந்த வழக்கில் எனக்கு பதிலாக வேறொரு வழக்குரைஞர் ஆஜர் ஆவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு ரோஹிணி வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
ரோஹிணியின் இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் தேசிய புலனாய்வு ஏஜென்சி, ரோஹிணியின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. கார்கிலில் மரண மடைந்தவர்களுக்காக மும்பையில் ஒதுக் கப்பட்ட ஆதர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டட ஊழல் விவகாரத்தில் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் சுகாஸ் வார்க்கேவின் பெயரும் அதில் உள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- உ.பி. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நீக்கம் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
- பெண் சாமியார் ராதேமாமீது மேலும் ஒரு புகார்
- தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் வரி செலுத்துவோருக்கு புதிய சலுகை
- மகாராஷ்டிராவில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழுமா?
- குடும்ப விழா நடத்திட சென்னை மகளிரணி கலந்துரையாடலில் முடிவு
No comments:
Post a Comment