Friday, October 30, 2015

மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான மதவெறிப்போக்கைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




நுழைவுத் தேர்வு, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு - முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து  மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் பின்வருமாறு:
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் 22.10.2015 அன்று மாலை 5 மணிக்கு பந்தல்குடிச் சாலை, இந்தியன் வங்கி அருகில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய அரசின் மதவெறிப் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன் தலைமையில் மாவட்ட ப.க. தலைவர் சு.பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி சிவகாசி நகர கழகச் செயலாளர் து.நரசிம்ம ராஜ், மாவட்ட துணைத்தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர் வெ.முரளி, மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் உரையாற்றினர். மண்டல இளைஞரணித் தலைவர் இரா.அழகர், விடுதலை சிறுத்தைகள் நகரச் செயலாளர் கா.குருசாமி, தமிழ்ப்புலிகள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் மு.கலைவேந்தன், நகரச் செயலாளர் ஆற்றலரசு, சிவகாசி நகர கழகத் தலைவர் மா.முருகன், அருப்புக்கோட்டை நகர கழகத் தலைவர் சு.செல்வராசு, செயலாளர் இரா.முத்தையா, 
புதூர் ஒன்றிய கழக அமைப்பாளர் வெ.பாலமுருகன், நகர கழக இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், க.சுப்பிரமணி, செந்தில்குமார் மற்றும் கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள் அமைப்பு தோழர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பா.இராசேந்திரன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தோழர் களுக்கு மாவட்ட திமுக கலை, இலக்கியப் பேரவை துணை அமைப்பாளர் மா.இராசேந்திரன் தேநீர் வழங்கி உபசரித்தார். ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
புதுச்சேரி
ஜாதி வெறி, மதவெறி, நுழைவுத்தேர்வு, மாட்டுக் கறிக்கு தடை, பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை யாளர்கள் படுகொலை, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 22.10.2015 அன்று புதுச்சேரி அறிஞர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டலச் செயலாளர் கி.அறிவழகன், மகளிரணித் தலைவர் விலாசினி இராசு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன முழக்கங் களை ப.க.தலைவர் வீர.இளங்கோவன் முழங்கினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணித் தலைவர் தோழர் கீத நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தோழர் சோ.பாலசுப்ரமணி யன், மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு உறுப்பினர் பெரியாரியல் சிந்தனையாளர் இரா.சடகோபன், இந்திய ஜனநாயகக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பஷீர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர் ஜெயக்குமார், வெல்லும் தூயதமிழ் இதழா சிரியர் க.தமிழமல்லன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கழக இளைஞரணித் தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.
கண்டன ஆர்பாட்டத்தில் தொழில் அதிபர் சடகோபன், பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி செய லாளர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழகத் தலைவர் சு.துளசிராமன், அமைப்பாளர் ஆ.சிவராசன், புதுச்சேரி மண்டல அமைப்பாளர் கே.குமார், மணவெளி தொகுதி கழகத் தலைவர் இரா.ஆதிநாராயணன், பெரியார் பெருந்தொண்டர் பொ.தட்சிணாமூர்த்தி, இருசாம்பாளையம் செ.இளங் கோவன், இரா.சதாசிவம், இரா.நா.முத்துவேல், ப.க.துணைச் செயலாளர் செ.கா.பாஷா, புதுச்சேரி நகர கழகச் செயலாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், மகளிரணித் தோழியர் எழிலரசி அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
22.10.2015 அன்று பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிட கழகத் தலைவர் ப.ஆறுமுகம் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் பெ.அண்ணாதுரை வரவேற்புரையும், பகுத்தறிவுப் பாசறைத் தலைவர் கி.முகுந்தன், அக்ரி ந.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குறிப்பாக வேதகாலத்தில் யாகம் வளர்த்து மாட்டுக் கறியையும், பசுக்கறியையும் தின்றவர்கள் இன்று பசுவதைத் தடை என்ற பெயரில் மாட்டி றைச்சிக்கு எதிராகக் கிளம்பி சிறுபான்மை முஸ்லிம் களை கொலை செய்கின்ற கொடுமையைக் கண்டித்தும், உண்ணும் உரிமையை மறுப்பதையும், தபோல்கார், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் கொல்லப்படும் மத வெறி யாட்டங்களைக் கண்டித்தும் அனைத்து தோழர்களும் ஆர்ப்பரித்துக் குரல் எழுப்பினர். பகுத்தறிவு விளக்கவு ரையைத் திரளான பொதுமக்களும், வணிகர்களும், இளைஞர்கள் பலரும் கேட்டு விளக்கம் பெற்றனர். இரா.அரங்கராசன், பெ.துரைசாமி, மு.விஜயேந்திரன், சி.தங்கராசு, பெ.பெரியசாமி, அ.ஆதிசிவம், நா.அரங் கசாமி, சங்கர் போன்ற தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணித் தலைவர் செ. தமிழரசனின் நன்றி கூறலுடன் இனிதே நிறைவுற்றது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.நெப் போலியன் தலைமையில் 22.10.15 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, மாவட்ட அமைப்பாளர் தெ.செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலாளர் கு.சிவானந்தம்,  மாவட்ட துணைத் தலைவர் சி.பி.க.நாத்திகன்,  நாகப் பட்டினம் நகரத் தலைவர் மா.குஞ்சுபாபு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு.க.ஜீவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இல.மேகநாதன் தொடக்க உரையாற்ற தலைமைக்கழக பேச்சாளர் இராம. அன்பழகன் கண்டன உரை நிகழ்த்தினார்.
நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாவா.செயக் குமார், நாகை மாவட்ட இளைஞர் அணி தலைவர் இராச.முருகையன், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், திருமருகல் ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றியச் செயலாளர் ப.செல்வகுமார், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் ரெ.துரைசாமி, கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் அ.பன்னீர்செல்வம், நாகை ஒன்றியத் தலைவர் பெ.செல்வராஜ், நாகை மாவட்ட மாணவரணி செயலாளர் க.குமரேசன், 
நாகை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ம.முத்துராஜா, நாகை மாவட்ட விவசாய அணி  அமைப்பாளர் அ.தங்கராசு, திருமருகல் விவசாய அணி செயலாளர் எஸ்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ஜெ.லெனின், திருமருகல் ஒன்றிய துணைச்செயலாளர் காமராஜ், மண்டல மாணவர் அணி செயலாளர் நா.பொன்முடி, கீழ்வேளூர் வட்டார விவசாய அணி அமைப்பாளர் தமிழ்செல்வம், கீழ் வேளூர் ஒன்றிய துணை தலைவர் அ.அரங்கராசு, 
திருமருகல் ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி,நாகைமாவட்ட கழகத் தோழர்கள் மு.நாராயணசாமி, தெ.தங்கையன், தா.சேகரன், ராம சாமி, ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடு துறை நகரத் தலைவர் என்.தியாகராஜன், மயிலாடு துறை நகரத் துணைத்தலைவர் சீனி.முத்து,  மயிலாடு துறை நகரச் செயலாளர் அரங்க.நாகரெத்தினம், மயி லாடுதுறை மாவட்ட ப.க.செயலாளர் அ.சாமிதுரை, 
சீர்காழி ஒன்றிய தலைவர் கடவாசல். குணசேகரன், மயிலாடுதுறை விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சாமிநாதன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டு ரெங்கன், மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் செ.கணேசன், சே.மதியழகன், எஸ்.பாலாஜி, சி.திவாகர், இ.இளந்தென்றல்,எஸ்.கவியரசன், டேனியல், சிவ ராமன், முகில்வேந்தன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். நாகை நகரச் செயலாளர் சோம.வீரமணி நன்றி கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தஞ்சாவூர் மாநகரம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 137ஆவது பிறந்த நாள் விழா, கழக கொடியேற்று விழா



தஞ்சாவூர், அக். 30_ 17.9.2015 அன்று காலை 9 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கழகத்தின் சார் பில் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் சிறீதர் பெரியார் சமூக தொடர் கல்லூரி சார்பில் நிர்வாகி புவனேஸ் வரி, 
பெரியார் மணியம்மை பல்கலை கழக மகளிர் பணியாளர்கள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட் டது. தொடர்ந்து சரபோஜி கல்லூரி எதிரில் உள்ள கழக கொடியை செந்தூர் பாண்டியன், பெரியார் சமூக தொடர் கல்லூரி யிலுள்ள பெரியார் படிப் பகத்திற்கு திமுக மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் காரல் மார்க்ஸ் மாலை அணிவித்தனர்.
ஆர்.ஆர்.நகரில் உள்ள கழகக் கொடியை மாவட்ட வழக்குரைஞரணி தலை வர் இரா. சரவணகுமார், உரத்தநாடு குணசேகரன் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மண்டலச் செயலாளர் மு.அய்யனார்  ஏற்றினர். பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில ப.க. பொதுச்செய லாளர் மா.அழகிரிசாமி மாலை அணிவித்தார். 
கழகக் கொடியை மாநில மகளிரணி செயலாளர் அ. கலைச்செல்வி ஏற்றினார். பவர் வசந்தன் நகரில் உள்ள கழகக் கொடியை மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் ஏற்றி னார். அன்னை சிவகாமி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய செய லாளர் ஆட்டோ ஏகாம் பரம் மாலை அணிவித் தார். கழகக் கொடியை மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு ஏற்றி வைத்தார்.
பழைய பேருந்து நிலையம்
பழைய பேருந்து நிலை யத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.அமர் சிங், மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் வெ. ஜெய ராமன், மாநகர திராவிடர் கழகம் சார்பில் மாநகர தலைவர் வ.ஸ்டாலின் மற் றும் மாநகர செயலாளர் சு.முருகேசன், மகளிர் அணி சார்பில் மாநில மகளிரணி செயலாளர் அ.கலைக்செல்வி மாலை அணிவித்தனர். குடும்ப விளக்கு சார்பில் தலைமை நிர்வாகி பா.வேணுகோபால் மாலை அணிவித்தார்.
திமுக
திமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செய லாளர் துரை.சந்திரசேக ரன், மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம்  மாலை அணிவித்தனர்.
அதிமுக
அதிமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகர மேயர் சாவித்திரி கோபால்  மாலை அணிவித்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங் கிரஸ் சார்பில்
தஞ்சை மாவட்ட தலைவர் து. கிருஷ் ணசாமி வாண்டையார் மாலை அணிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலா ளர் ஆர்.பி.தமிழ்நேசன்  மாலை அணிவித்தார்.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கழகக் கொடியை மாநகர தலைவர் வ.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து ஜெப மாலைபுரத்தில் உள்ள கழகக் கொடியை சவுந்தர் ராஜன், கரந்தை வலம் புரியில் உள்ள கழகக் கொடியை செல்வி பியூலா, கரந்தை கடைத்தெருவில் உள்ள கழகக் கொடியை உடலியல் மருத்துவர் அரங்கராஜ், கீழவீதி பெரியார் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மாதவராசன், வ.ஸ்டா லின் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாநகர செயலாளர் சு.முருகேசன், 
தொல்காப்பியர் சதுக்கத் தில் உள்ள கழகக் கொடியை ஒன்றிய தலை வர் இரா.சேகர், அண்ணா நகரில் உள்ள கழகக் கொடியை வையாபுரி, பெ.வையாபுரி இல்லம் அருகில் உள்ள கழகக் கொடியை மாவட்ட துணை செயலாளர் சா.சந் துரு, யாகப்பா நகர் சாலை சந்திப்பில் உள்ள கழகக் கொடியை மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழ கிரி, ஆசிரியர் காலனியில் உள்ள கழகக் கொடியை ஒன்றிய செய லாளர் செ. ஏகாம்பரம், கீழவாசல் கரம்பை சாலையில் உள்ள கழகக் கொடியை மண்டல செயலாளர் மு.அய்யனார், சீனிவாசபுரத்தில் உள்ள கழகக் கொடியை ரமேஷ், 
நாஞ்சி கோட்டை சாலை முல்லை நகரில் உள்ள கழகக் கொடியை மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், அதிரடி அன்பழகன் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாக்கியம், யாகப்பா நகரிலுள்ள கழக கொடியை மாநகர அமைப் பாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றி வைத் தனர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!

 
- ஜோதிர்லதா கிரிஜா
அலைக்கற்றை ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற இன்னும் பல் வேறு ஊழல்களில் கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டு ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு அடி கோலிய காங் கிரசுக்குப் பாடம் புகட்ட எண்ணி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அதை அரியணையில் அமர்த்தியது. சிங்கத்திடமிருந்து தப்பிப் புலியின் வாயில் சிக்கிய ஒருவன் கதையைத் தான் நினைவூட்டுகிறது
தெய்வம், தேசம் ஆகியவற்றைக் காட்டிலும் மதத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்களுக்கு வாக்களித் தால் என்ன நேரும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி உதிர்த்துக்கொண்டிருக்கும் உளறல் களிலிருந்து மிகத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகிறது. 
ராமஜென்ம பூமி சார்ந்த விஷயத்தில் மக்களுக்கு உள்ள ஈடுபாட்டால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என்கிற மிகத் தவறான மயக்க உணர்விலிருந்து பாஜகவினர் விடுபடப் போவதே இல்லை என்பதுதான் அவர்களின் திருவாய்கள் உதிர்த்துக் கொண்டி ருக்கும் உளறல்களிலிருந்து தெரிகிறது. 
ராமன் அவதார புருஷன் என்பதை நம்புகிற பெரும்பாலான இந்துக்கள் கூட அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில்தான் ராமபிரானுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றெல் லாம் வெறி பிடித்து அலையவில்லை அவர்களுக்கு வேண்டிய வயிறார மூன்று வேளை - இரண்டு வேளையா கிலும் சோறு, பாதுகாப்பான உறை விடம், உடை, கல்வி, வேலை ஆகியவற்றை ராவணன் திரும்ப வந்து கொடுத்தாலும் இந்துக்கள் ஏற்பார்கள் என்பதே உண்மை.
மக்களைக்காட்டிலும் மதத்தை அதிகமாய் நேசிக்கும் தலைவர்கள் மக் களையும் புரிந்துகொள்ளவில்லை.  மதத் தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதே மெய்.
பிற மதத்தினரின் உணவுப்பழக்கத்தி லெல்லாம் தலையிட்டுக் கலகம் செய்யும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மாட்டிறைச்சி சாப்பிட் டால் தப்பு; ஆட்டிறைச்சி மட்டும் சாப் பிடலாமா? மற்ற உயிர்களை வதைத்து அவற்றை உண்பது மட்டும சரியாகுமா? மாடு தெய்வமெனில் அதை உன் மட்டுக்கு வைத்துக்கொள். மற்றவர்களும் அவ்வாறே கருதவேண்டுமென நிர்ப் பந்திக்க நீ யார்?
இந்துக்களிலேயே சில இனத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே? அது தெரியாதா உனக்கு? உனக்குப் பிடிக்க வில்லையெனில் நீ அதைச் செய்யாதே. உன் கருத்தின்படி பிற மதத்தினரும் நடக்க வேண்டும் என்று கூற நீ யார்? அது சரி, இந்துக்கள் பசுக்களை அன்பாக நடத்துகிறார்களா? பசு தெய்வ மெனில் அதன்பாலைக் கறந்து நாம் பருகலாமா? 
அதன் கன்றுகளுக்கே அந்த முழு உரிமையையும் தர வேண்டாமா? இந்துக் கோவில்களில் உள்ள பசுக்கள் எலும்புந் தோலுமாய் வற்றி வறண்டு கிடப் பது யாரால்? அவற்றைப் பராமரிக்கும் கடமையைச் சரிவரச் செய்யாமல் அவற்றைப் பட்டினிபோட்டு அந்தக் காசில் கொழுக்கும் இந்துக்கள் அன்றோ! மாட்டுக்கு ஊசி போட்டு அதிகப் பாலைக் கறக்கும் கொடுமையைச் செய்வோரை என்ன செய்யப் போகிறாய்? 
தாத்ரியில் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் அவரைச் சில கொடும் பாவிகள் அடித்தே கொன்றிருக்கிறார் களே மாட்டைக் கொல்லுவது பாவ மெனில் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றது மட்டும் பாவம் ஆகாதா? இந்த அநியாயத்துக்காகப் பதறித் துடித்துக் கொலைகாரார்களைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் அது பற்றி வாயே திறவாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றி பிரசாரம் மட்டும் செய்தால் போதுமா? ஊழலால் ஒரு நாட்டின் பொரு ளாதாரம் மட்டுமே பாதிப்புக்கு உள்ளா கிறது. மதவெறி தூண்டப்பட்டு அது மிகுமானால், அதன் விளைவுகள் பயங்கர மானவையாக இருக்கும். ஆயிரக்கணக் கான மனிதர்கள் கொல்லப்படுவார்கள்.
பெண்கள் வன்னுகர்வுக்கு ஆளாவார்கள் குழந்தைகள் கூட விட்டுவைக்கப்பட மாட்டார்கள்! தேசமே பல்லிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கும் கோவில்கள் சூறையாடப்படும் பாப்ரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதன் விளைவுகள் பற்றி இந்த மதம்பிடித்த தலைவர்கள் அறிய மாட் டார்களா? அதன் விளைவாகப் பங்களா தேஷின் ஆயிரக்கணக்கான பழம்பெரும் காளி கோவில்கள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டனவே. இந்து-முஸ்லிம் கலவரங்கள் அதிகரித்ததே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பிறகு தானே. தங்கள் கோவில்கள் இடிக்கப்படுவதற்குத் தாங் களே வழி வகுக்கும் இவர்கள் எத் தோடு சேர்த்தி? ஒரு தலைவர் இந்துப் பெண் மணிகள் தலா பத்துக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று உளறினார்.
அந்தப் பெண்ணின் நிலை பற்றி அந்த மனிதர் கடுகளவேனும் சிந்தித்திருந் தால் அப்படி ஒரு கொடுமையான யோசனையைச்  சொல்லுவாரா? பெண்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம் பவே, மற்றொருவர் சற்றே இறங்கி வந்து பத்தை நாலாக்கி இரக்கம் காட்டினார்.
பாஜகவின் ஒரு முக்கியத் தலைவி சமஸ்கிருதம் படித்தால் நல்ல தன் மைகள் பெருகும் என்று உளறிக் கொண்டிருக்கிறார். தமிழில் இல்லாத நல்லவையா சமஸ்கிருதத்தில் இருக் கின்றன? மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவ்வளவு மோச மான இலக்கியங்களும் வடமொழியில் இருக்கின்றன என்று பட்டியல் இட் டால் அந்த அம்மையார் எங்கே போய் ஒளிந்து கொள்ளுவார்? எல்லா மொழி களிலும் நல்லவையும் கெட்டவையும் கலந்தே இருக்கின்றன.
இன்னொருவர் பகவத் கீதை பயிலச் சொல்லுகிறார் பகவத்கீதை யில் சில ஆன்மிகத் தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே ஆனால் அது சாதாரண மக்களுக்கான நூலன்று பெருவாரி யான மக்களுக்கான அரிய படைப் பாகத் திகழும் திருக்குறளுக்கு முன் னால் பகவத்கீதை ஒன்றுமே இல்லை!
மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் என்னவெல்லாம் நேரும் என்பதற்கு இவை மிகச் சில உதாரணங்கள்:
காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவ தற்காக இவர்களைப் பதவியில் அமர்த்திவிட்டோம் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு மக்கள் கட்டாயம் பாடம் கற்பிப்பார்கள்.
(நன்றி: திண்ணை 25.10.2015)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

நீதிபதிகள் தங்கள் எல்லையைத் தாண்டலாமா?


சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சைப் புயலை எழுப்பி விட்டது.
அத்தீர்ப்பில் வசிப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என்பது தீர்ப்பின் முக்கிய சாரம் ஆகும். இப்பொழுது தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தங்கள் மாநிலத்தைச் சாராதவர்களுக்கான வாய்ப்புகள் கிடையாது. இதனைத் தேசிய அளவில்  கொண்டு செல்ல வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தில் பரிந்துரையாகும்.
ஏற்கனவே எம்.பி.பி.எஸ். கல்வியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 விழுக்காடு இடங்கள் இந்திய அளவில் கொண்டு போகப்பட்டு விட்டன; மருத்துவ முதுகலைக் கல்வியில் 15 சதவீத இடங்கள் தூக்கிச் செல்லப்பட்டு விட்டன. இதில் என்ன கொடுமை என்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதே! இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதே. மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில், தங்கள் மாநில நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கல்லூரிகளை நிருவகித்தால், கொஞ்சம் கூட கூசாமல், கோழிக் குஞ்சைப் பருந்து தூக்கிச் செல்லுவது போல நடந்து கொள்வது நேர்மையானது தானா?
ஆந்திரம், காஷ்மீர் மாநிலங்களில் எங்களுக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டிலிருந்து இடங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அவ்விரு மாநிலங்களிலிருந்தும் இடங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொள்ளைப் போவ தில்லை. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் சிந்திப்பது நல்லதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த குப்ப சமுத்திரத்தில் படித்த ஒரு பெண்ணுக்கு உத்தரப்பிரதேசத்திலோ, பிகாரிலோ, அசாமிலோ இடம் கிடைத்தால் இப்பொழுதுள்ள சூழ் நிலையில் அங்குச் சென்று படிக்க முடியுமா? ஆனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சுகமான வகையில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடமில்லாமல் நிம்மதி யாகப் படித்துச் சென்று விட முடியுமே!
இந்த நிலையில் சிறப்பு மருத்துவப் படிப்பில் (Super speciality) அகில இந்தியத் தொகுப்புக்குப் பங்குக் கேட்பது ஏன்? சிறப்பு மருத்துவம் படித்துத் தேறியவர்கள் எண்ணிக் கையில் மிகவும் குறைவே. இம்மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் சிறப்பு மருத்துவராகத் தேர்ச்சி பெற்று இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பும் - உச்சநீதிமன்றத்தால் பறிபோய் விடவில்லையா?
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டி யலில் தன்னிச்சையாகக் கொண்டு சென்றதன் தீமையினை இன்று மாநிலங்கள் அனுபவித்துக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கக் கூடிய பதிலில் தமிழ்நாட்டுக்கே உரிய மண்ணின் வாசனையை (Soil Psychology) சமூக நீதி உணர்வை விரிவாக எடுத்துக் கூற வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் தீர்ப்போ, கருத்தோ கூற வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தப் பிரச்சினைக்கு அப்பாற்பட்ட வகையில், கோட்டைத் தாண்டி இடஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்வது சரியானதுதானா? இட ஒதுக்கீடு அரசியலில் வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீதிபதிகள் சொல்லலாமா?
நீதிபதிகளைப் பற்றி அரசியல்வாதிகள் பேசக் கூடாது; ஆனால் அரசியலைப்பற்றி நீதிபதிகள் மாத்திரம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனம் தேவையில் லாதது. அதனுடைய எல்லையைத் தாண்டுவதும் ஆகும்.
இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதிக்கு, இடஒதுக்கீடுக்கு உட் பட்டது தானா என்ற கேள்வியும் எழுகிறதா இல்லையா?
இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாதிக்கப்படும் என்று - இதுவரை கல்வி வேலை வாய்ப்புகளைத் தங்களின் நுனி விரல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் கூறி வந்துள்ளனர். அது நீதிமன்றத்தின் வாயால் வருகிறதே - இது எங்கேயோ இடிக்கிறதே!
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி - திறமை குறைந்து விடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண் டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வரையும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல் தான் நீண்ட கால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப்பார்க்க வேண்டும் என்று சொன்னவர் யார் தெரியுமா? பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற பாரத ரத்னா அமர்த்தியா சென்தான் இவ்வாறு கூறியவர் ஆவார்.
அதுவும் எந்த இடத்தில்? தகுதி, திறமை தம் பட்டம் அடிக்கும் சென்னை அய்.அய்.டி.யிலேயே (22.12.2009).
இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் இருக்கலாமா? பொருளாதார அடிப்படையில்தான் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். ஒன்றை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. காலம் காலமாக ஜாதி காரணமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டவர் களுக்கான திட்டம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உயர் ஜாதிகளில் ஏழை இருந் தால் அவர்களுக்குக் கல்விக் கடன் கொடுக்கட்டும், தொழில் தொடங்க வட்டியில்லாத கடனைக்கூடக் கொடுக்கட்டும்; அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

நம் அரசமைப்புச் சட்டம் ஜாதியற்ற சமுதாயத்தை நிர்ணயிக்கவில்லை. ஜாதியை ஒழிப்பதற்கு முடியவில்லை. ஆனால் ஜாதியின் பெயரால் இருந்து வரும் வேறுபாடுகளைப் போக்கி சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஜாதியின் காரணமாக நிலவி வரும் அந்தஸ்து வேறுபாடுகளையும் போக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் முயலுகிறது. அப்படி ஜாதியின் அடிப்படையில் இருக்கும் அந்தஸ்துகளைப் போக்கி விட்டால் எல்லா ஜாதிகளும் சமமாகி விடும். ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கான தொடக்கமாக அமையும் என்று 2008 ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. ஆர். இரவீந்திரன் அவர்கள் தீர்ப்பு ஒன்றில் கூறியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாட்டிறைச்சியில் இரும்புசத்து நிறைந்துள்ளது என்று கூறிய அரசு வெளியீடு - பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்

மாட்டிறைச்சியில் இரும்புசத்து நிறைந்துள்ளது என்று கூறிய
அரசு வெளியீடு  - பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்

ஆவணப் படத்திற்கும் தடை

சண்டிகர், அக்.30_ மாட்டிறைச்சியில் இரும்பு சத்துள்ளது என்று அரியானா அர சின் கல்வித்துறையால் வெளியிடப்பட்ட பகுதி  பள்ளி பாடத்தில் இடம் பெற்றதற்காக அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஷிக்ஷா சாரதி எனும் இதழ் அரியானா அரசின் கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டு வருவ தாகும். மாணவர்களுக்கு அன்றாட அறிவியல் தக வல்களை, செயல்பாடு களை விளக்கும்வகையில் அவ்வேடு வெளி வந்து கொண்டிருக்கிறது.
இதழின் தலைமை புரவலராக அரியானா மாநில முதல்வர் மனேகர் லால் கட்டாரும், புரவல ராக கல்வித்துறை அமைச் சர் ராம் பிலாஸ் ஷர்மா உள்ளனர். நாட்டிலேயே பசுக்கொலைக்கு தண் டனையாக 10 ஆண்டு களை விதித்து சட்டம் இயற்றியுள்ள மாநிலம் அரியானா மட்டுமே.
இந்தியாவில் உள்ள முசுலீம்ககள் மாட்டுக் கறியை உண்ணுவதை நிறுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டு, பின்னர் மறுத்தார். எனினும், அவரு  டனான நேர்காணல் ஒலிப்பதிவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக் கிறது.
சிக்ஷா சாரதி எனும் அவ்விதழ் கல்வித்துறை யின் சார்பில் பதிப்பிக்கப் பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந் தைகள், உணவு மற்றும் சத்து, கல்வி கற்பிக்கும் முறை, பல்வேறு தகவல் கள், ஊக்கமூட்டக்கூடிய கதைகள், தொடர்ச்சியான செயல்பாடுகள்குறித்த தகவல்கள், பல்வேறு பள்ளிகளின் சாதனைகள். அரியானா மாநிலக் கல் வித்துறை அளித்துள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் 14,500 அர சுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் அவ்விதழ் சென்றடைகிறது.
பல்வேறு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகவல்களை இதழுக்கு அனுப்புவதில் முக்கியப் பங்காற்றிவருகின்றனர். மாட்டுக்கறிகுறித்த தகவல் இடம் பெற்றிருந்த தால், கல்வித்துறையின் தகவலின்படி, கடந்த செப் டம்பர் மாத இதழ்களைத் திரும்ப பெற்றுக் கொண் டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறைக் கான இயக்குநரும், அவ் விதழின் ஆசிரியர் குழு வின் உறுப்பினருமாகிய எம்.எல்.கவுசிக் மாட்டுக் கறி கட்டுரை தொடர்பாக கருத்து கூற மறுத்து விட்டார்.
பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு பசுக் கொலைக்கு 5 ஆண்டுகளாக இருந்த தண்டனையை இரட்டிப் பாக்கி 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்டத்தை திருத்தியது.
அவ்வேட்டில் மாட்டுக் கறி சாப்பிடும்போது, அதுவும் இளம் கன்றின் கறியைச் சாப்பிடும்போது நேரிடையாக உடலுக்கு இரும்புச் சத்து சேர்கிறது என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. அக்கட்டுரை இரும்புச்சத்தின் இன்றி யமையாமையை விளக் குவதாக இருந்தது. அன்றாட வாழ்வில் இரும்புச் சத்து பற்றாக்குறையைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுமுறை குறித்து விரிவாக விளக்கி உள்ளது. இரும்புச்சத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் இரும்பு சத்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
அரியானா மாநிலத் தில் பஞ்ச்குளாவில் உள்ள  பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்திலி ருந்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவரக் கூடிய இதழ் சிக்ஷா சாரதி. பள்ளிக் கல்விக் கான இயக்குநரே சிக்ஷா லோக் சொசைட்டியின் தலைவரும் ஆவார்.
இதழாசிரியராக இருப்பவர் இதுகுறித்து குறிப்பிடும்போது, அக்கட்டுரை அறிவியல் அறிக்கையின்படி எடுத்து வெளியிடப்பட்டதாகும் என்றார்.
மாட்டுக்கறி, இளம் கன்றின் கறி, இளம் செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி மற்றும் இதர விலங்குகளின் இறைச்சி யிலிருந்து பெறப்படுகின்ற சத்துகுறித்து அக்கட்டு ரையில் விவரிக்கப்பட் டுள்ளது.
அக்கட்டுரை அவ் விதழில் வெளியானதை அடுத்து, பாஜக ஆளும் அரியானாவின் கல்வி அமைச்சராக உள்ள ராம் பிலாஸ் சர்மா கூறுகை யில், அரியானாவில் அவ் விதழில் அக்கட்டுரையை வெளியிட்டிருக்கக் கூடாது. இதழாசிரியரை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை களை எடுத்திட உள் ளோம் என்றார்.
52 பக்கங்கள் கொண்ட இணையப்பக்கத்தில் இதழாக தொடக்கக் கல்வித்துறைக்கான இணையதளத்தில் வெளி யிடப்பட்ட நிலையில், தற்போது இணையத்தி லிருந்தும் செப்டம்பர் மாதத்துக்கான இதழ் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி குறித்த ஆவணப் படத்திற்கும் தடை ஜீவிகா ஆசியா வாழ்வியல்முறை ஆவணப்பட விழா_2015 ஆவணப்பட விழாவில் மும்பையில் உணவுப் பழக்கம்குறித்த ஆவணப் படமாக உணவுப் பட்டியலில் ஜாதி எனும் ஆவணப்படம் நாளை (31.10.2015) புதுடில்லியில் திரையிடப்பட இருந்தது. ஆனால், விழா அமைப் பாளர்களுக்கு, ஆவணப் படத்தை திரையிடுவதற்கு முன்பாக தணிக்கை சான்று பெற்றிட வேண் டும் என்று அறிவிக் கையை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இதுகுறித்து விழாக் குழுவைச் சேர்ந்தவரான அதுல் ஆனந்த் கூறுகை யில், பொதுமக்கள் காணும் வண்ணம் ஆவணப்படங் களைத் திரையிடுவதற்கு தனியே சான்று பெற வேண்டி உள்ளது. 35 படங்களை சான்றளிக்கக் கோரி அனுப்பி இருந் தோம். ஆனால் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இந்த ஆவ ணப்படத்துக்கு சான்ற ளிக்க மறுத்துவிட்டது.
ஆவணப்படத்தக்கு சான்றளிக்க மறுத்து விட் டது குறித்து அலுவலகத் தரப்பில் ஒருவர் கூறும் போது, அரசியல் மற்றும் மத ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும்வகையில் இப்படம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
திரைப்பட விழாவின் அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்னிக்தா வெர்மா கூறுகையில், மக்களின் வாழ்வியல் முறைகுறித்தே இப்படத் தின்மூலமாக வெளிப் படுத்த விரும்பினோம் என்றார்.
அதுல் ஆனந்த் கூறு கையில், மாட்டுக்கறி என்றதுமே  அமைச்சகம் குறிப்பாக அனுமதி மறுத் துள்ளது என்றார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, October 29, 2015

ஈரோடு போவதற்கு துணிவு - தெளிவு - கொள்கை தேவை

ஈரோடு போவதற்கு துணிவு - தெளிவு - கொள்கை தேவை
அதற்கு எடுத்துக்காட்டானவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் விழா - நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை

சென்னை, அக். 29- ஊரோடு போனவர்கள் பலர் உண்டு. இவரோ ஈரோடு போனவர். ஊரோடு போவதற்குத் துணிவு தேவையில்லை, அறிவு தேவையில்லை. அது வழமையாக நடப்பது. ஆனால், ஈரோடு போவதற்குத்தான் துணிவும் தேவை, தெளிவும் தேவை, கொள்கையும் தேவை. அந்த வகையில் அவர் தனி எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அற்புதமான கவிஞராவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்  17.10.2015 அன்று சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களது பிறந்த நாள் விழா - நூல் வெளி யீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பழையவற்றைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய புரட்சிக் கவிஞர் வழியிலே, பாரதிதாசன் பரம்பரை என்று உருவாக் கப்பட்டஅந்தப் பரம்பரையில், தலைமாணாக்கர் என்ற பெருமையை இன்றைக்கும் தக்க வைத்துக்கொண்டு, தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதை எடுத்துக் காட்டக்கூடிய வகையில், அதே புதுவையைச் சார்ந்த நண்பர்கள், இதோ ஒரு மகாகவி என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்து இன்றைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய எங்கள் புரட்சியின் பூபாளம் மட்டுமல்ல, புரட்சிக்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு எரிமலையை கக்கக் கூடியதைப்போல, தன் எழுத்துக்களை வடிவமைத்து, ஒரு புதிய சமுதாயத்தை, பழையவற்றைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளில் மிகப்பெரிய பகுதியை செலவழித்து, மேலும் உற்சாகத்தோடு பணியாற்றுவதற்கு ஊக்கப்படுத்துகின்ற விழாவாக அமைந்துள்ள இந்த விழாவின் நாயகர் அன்பிற்குரிய அருமைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களே,
இந்த விழாவின் தலைவர் அவர்கள், நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களே, இந்த விழாவிலே கலந்துகொண்டு உரையாற்றிய நம்முடைய நீதியரசர் அவர்களே, அடுத்து உரையாற்றவிருக்கின்ற சிலம்பொலி யார் அவர்களே, உரையாற்றி விடைபெற்றுச் சென்ற கவிஞர் இன்குலாப் அவர்களே, அருமைத் தோழர் மகேந்திரன் அவர்களே, மற்றும் இங்கே மேடையிலும், எதிரிலும் அமர்ந்துள்ள அருமைப் பெரியோர்களே,
இலக்கிய சந்தையிலே என்று நம்முடைய இசைவாணர் பாடியது நினைவிற்கு வருகிறது
எதிரில் ஒரு பெரிய இலக்கிய சந்தையே இருக்கிறது. சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள். தனித்தனியே சொல்லவேண்டுமானால், இலக்கிய சந்தையிலே என்று நம்முடைய இசைவாணர் பாடியது எனக்கு நன்றாக நினை வில் இருக்கிறது. அவ்வளவு பெரிய ஆற்றலாளர்கள். எனவே, இவர்கள் மத்தியில் ஈரோடு தமிழன்பன் அவர் களுடைய இலக்கிய பெருமைகள், கவிதைகளினுடைய கவித்துவம் இவற்றையெல்லாம் சொல்வதைவிட, அவர் எப்படி மாறுபட்டவர் என்பதைச் சொல்லவிருக்கிறேன்.
எனக்கடுத்து இரண்டு பெருமக்கள் பேசவிருக்கிறார் கள். சிலம்பொலி அணிந்துரையாளர். அவர் அணிந்துரை தராத நூலே கிடையாது. எனவே, இந்த விழாவில்கூட அவர் அணிந்துரையாளராகத்தான் வந்திருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவாள்
அவள் அறிந்திராத அறிவாவார்
தந்தை பெரியார்
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.
அந்த அணியை தன்னுடைய அணியாக மாற்றிக் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். எனவேதான், ஊரோடு போனவர்கள் பலர் உண்டு. இவரோ ஈரோடு போனவர். ஊரோடு போவதற்குத் துணிவு தேவையில்லை, அறிவு தேவையில்லை. அது வழமையாக நடப்பது. ஆனால், ஈரோடு போவதற்குத்தான் துணிவும் தேவை, தெளிவும் தேவை, கொள்கையும் தேவை. அந்த வகையில் அவர் தனி எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அற்புதமான கவிஞரா வார்.
புதிய சுருதியில் பூபாளம்
அவருடைய நூல்கள் சிறப்பானவை என்பதை எடுத்துச் சொல்வதோடு, அவருடைய கவிதை நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், புதிய சுருதியில் பூபாளம் என்கிற கவிதையில்,
ஈரோடு தமிழன்பன் எழுதுகிறார். அவர் எங்களை எப்படி ஈர்த்திருக்கிறார். ஈரோடு அவருக்குப் பெயருக்கு முன்னால் அல்ல, ஈரோடு என்பது அவரது மூச்சு. அதைத் தான் அவர் பேச்சாக, கவிதையாக வடித்திருக்கிறார். அவரைப் பாராட்ட அல்ல. பெரியார் அன்பர்கள் சார்பாக, பெரியார் தொண்டர்கள் சார்பாக அவருக்கு நன்றி கூற வந் திருக்கிறேன். நான் பெரியார் தொண்டனின் தொண்டன்.
பல பேர் பல திவ்ய சேத்திரங்களின் பெயரை வைத் திருக்கிறார்கள். ஆனால், இவரோ சென்னிமலையில் பிறந்தவர்; ஈரோட்டிற்கு நேரிடையாகத் தொடர்பு இல்லை என்றாலும், ஆனால், கொள்கையில் நான் என்றும் ஈரோட் டுக்காரன் என்பதைக் காட்டினார். ஈரோட்டுக்காரர் என் பதை மத்திய அரசாங்கமே அடையாளம் கண்டிருக்கிறது. எப்பொழுது? நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறையில் இருந்த காலத்தில். அவர் எங்களோடு சிறைக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். நல்ல வாய்ப்பாக அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. செய்திகள் நிறைவடைந்தன என்ற சொல்லுக்கு இவர்தான் சொந்தக்காரர்!
அவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். செய்திகள் நிறைவடைந்தன என்ற சொல்லுக்கு இவர்தான் அதற்குக் கர்த்தாவாக இருக்கக்கூடியவர் என்பது உங்களுக்குத் தெரியும். செய்திகள் முடிந்தது, செய்திகள் முடிந்தது என்றுதான் அதற்குமுன் சொல்வார்கள். ஈரோடு தமிழன்பன் அவர்கள் எப்படி ஈரோட்டிற்கு உரியவர் என்பதற்கு அடையாளமே, நிறைவு செய்வது எப்பொழுதுமே ஈரோடாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வாய்ப்பில் அவர்கள் சொல்கிறார்கள்,
உயர்சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்....
உச்ச நீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது.
கவிஞர்கள் கவி பாடினால், ஒருமுறை சொன்னால் போதாது; மற்றவர்களுக்கும் அது ஆழமாகப் பதிய வேண்டும். ஆகவேதான், இரண்டு, மூன்று முறை சொல் வார்கள். எனவேதான், நான் மீண்டும் அந்த வரிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பேனாவை சாட்டையாக சுழற்றத் தெரிந்த கவிஞர்! சமூகநீதிக்காக எப்படிப்பட்ட ஒரு சாட்டையடி கொடுக்கிறார். கவிதையைப் பொறுத்தவரையில் வெறும் எழுத்துக்கள் அல்ல அவரிடமிருந்து வருவது. பேனாவை சாட்டையாக சுழற்றத் தெரிந்த கவிஞர் அவர். புரட்சிக் கவிஞர் அவர்களுக்குப் பிறகு. அந்த வகையில் மிக அருமையாக சொல்கிறார்.
உயர்சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்....
உச்ச நீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவன் குடிசையில்
ஒரு குழந்தை பிறந்தால் - அந்தத்
தாயின் கனவில் புதிதாய் ஒரு
கழிப்பறை திறக்கப்படுகிறது
எவ்வளவு பெரிய கொடுமை. இதைவிட அழகாக சொல்ல முடியுமா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த மனுதர்மம் இன்றைக்கும் எப்படி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நம்முடைய நீதி நாயகம் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் மண்ணின் பாரம்பரியத்தைக் காக்கக்கூடிய காவலர்கள்
நாம் எதை உண்ணுவது? எதை எண்ணுவது? இரண் டையுமே யாரோ நிர்ணயிக்கப் போகிறார்கள்; நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையானால், நீங்கள் கல்புர் கிகளாக ஆகவேண்டும் என்பதுதான் இன்றைய நிலை என்று சொன்னால், அதை எதிர்த்துச் சொல்லக்கூடிய ஒரு மண் இருக்கிறது என்று சொன்னால், அது இந்தப் பெரியார் மண் என்ற பெருமைக்குரிய ஒன்று. அந்தப் பெரியார் மண்ணின் பாரம்பரியத்தைக் காக்கக்கூடிய காவலர்களில் இன்றைக்குத் தலைசிறந்த கவிஞர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் ஈரோடு தமிழன்பன் அவர்களாவார்கள்.
அவர்களுக்கு 81 வயது. சென்ற ஆண்டு இதே நாளில், அவருடைய 80 ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளவேண்டியவர்கள் அத்துணை பேரும் கலந்து கொள்ள முடியாமல், இன்றைக்குக் கலந்துகொண்டிருக் கிறோம் என்றால், ஒரு செய்தியை சொல்லவேண்டும்.
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தாங்கும் தாண்டும் தடந்தோள்களும் உண்டு.
அன்றைக்கு யார் யார் வரவிருந்தார்களோ, அத்த னைப் பேரும் இன்றைக்கு வந்திருக்கிறார்கள். எனவே, எப்பொழுதும் அவரோடு நாங்கள் இருப்போம்; அவர் எப்பொழுதும் எங்களோடு இருப்பார்.
ஆகவேதான், அவரைப் பாராட்டுவதற்கு நியாயங் களும், தேவைகளும், காரணங்களும் நிச்சயமாக உண்டு.
அந்த வகையில், அந்த நூலில் இன்னொரு பகுதி யைச் சொல்கிறார்,
கக்கூஸ் கழுவவரும்
பெண்ணைக்
கணக்குப் பண்ணிக்
காமம் கழிக்கின்ற
ஆசார சீலர்கள் - அவள்
தொட்ட பாத்திரத்தைத்
தொடுவதன் முன்
தூத்தம் தெளிப்பார்கள்
அதே நூலில் இன்னொரு இடத்தில்,
இன்றைய தேவை!
மதங்களின்
மகுடங்களை உருக்கி,
மனங்களைத் திறக்கும்
சாவிகள் செய்வோம்!
மனிதமே - இனி
மதம்!
வாழ்க்கையின் பிரகாரங்களில்
வாட்டும் பிரச்சினைகளுக்கு
விடிவு காண்பதே புதிய
வேள்வி!
இதுதான் இன்றைய தேவை. இல்லையானால், மனிதமே இனி மதமாகாவிட்டால், மனிதனுக்கு இப்பொழுது பிடித்திருக்கின்ற மதம் இருக்கிறதே, அது சாதாரணமாக அடங்காது, ஒடுங்காது!
ஆகவேதான், இப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் தேவை. சமுதாயத்திற்கு இவர்களுடைய மிகப்பெரிய சிந்த னைகள் தேவை. அதுமட்டுமல்ல, இங்கே சிறப்பாக ஒரு செய்தியைச் சொல்லுகிறார், இப்பொழுது வெளியிடப் பட்டிருக்கின்ற நூலில்!
மரணம் இருட்டறையல்ல
வெளிச்சத்தை விட்டுச் செல்லும் என்பதை
இரத்தம் காயத்தை அல்ல
காரியத்தை விட்டுச் செல்லும் என்பதை
போராட்டம் மண்டியிடுவதை அல்ல
மானத்தை விட்டுச் செல்லும் என்பதை
எழுத வந்த வரலாற்றுக்குப் பெயர்
உன் பெயர் பிரபாகரன்
என்று எழுதுகிறார்.
அதுமட்டுமல்ல,
கனலினும் நெருப்பு
காலடி எடுத்து வைத்து
நடந்து வந்ததைப்போல்
எம்சமகாலத்துள் வந்த உன்னை
போர் மரபு புறப்பாட்டுத்
தமிழ் நதிகள் தம்மைக் கடந்து தாவி வந்து தழுவிக்கொண்டன
நட்சத்திரத்திலிருந்து
நட்சத்திரத்திற்குப் போய்
ஈழத்தின் ரத்த நாட்கள்
உன் பெயரை
ஒளியில் செதுக்கி வைத்தன
இப்படி ஏராளமாக அந்த நூலில் சொல்லியிருக்கிறார். அந்த நூல் ஒரு அற்புதமான ஒரு தலைசிறந்த அவர்களே விரும்பக்கூடிய அளவிற்கு அருமையான நூலாகும்.
கருணை மறவர் தந்தை பெரியார் என்று அறிவா சானைப் பற்றி மிக அற்புதமான ஒரு படப்பிடிப்பு!
மனிதனின் எந்த உரையாடலில்
விடுதலையும், விடுமுறைப் போடாத் தன்மானமும்
பல பேர் வருமானத்திற்காக தன்மானத்தையும் இழக் கிறார்கள்; இனமானத்தையும் இழக்கிறார்கள். இந்த நிலை யில், இவருடைய தன்மானம் எப்படிப்பட்டது என்றால், ஒரு நேரங்கூட விடுமுறைப் போட்டதே கிடையாது. இது போன்று சிந்தித்த ஒரு எழுத்தாளர், கவிஞர் இதுவரையில் தமிழ்நாட்டில் நான் அறிந்தவரையில், ஈரோடு தமிழன்ப னைத் தவிர வேறு எவரும் கிடையாது. அவரை ஒருவேளை அவரேதான் மிஞ்சக்கூடிய நிலை ஏற்படும் இனிமேல்.
குனிவறியா ஒளிபடைக்கின்றனவோ
அந்த உரையாடலில்தான்
அவனுடைய தாய்மொழிச் சிறகுகள்
விண்ணின் விரிவோடு ஒப்பந்தம் போடும்
அந்த உரையாடலைத்தான்
தந்தை பெரியார்
முதன்முதலாய்த் தமிழர்களுக்காக நிகழ்த்தினார்
அவர் தமிழோடு நடத்திய அத்தனையும்
அக்கறைக் கலவரங்கள்
உலகனாய் இருப்பது சுலபம்;
கலகனாய் இருப்பது அதிசயம்
எவ்வளவு அற்புதமான சொல்லாக்கம்.
அவருடைய கவிதையைப்பற்றிச் சொல்லும்பொழுது மணிகண்டன் அவர்கள் சொன்னார்கள், உலகனாய், இந்தியனாய் என்று வரிசையாக அவர்கள் சொன்னார்கள். அவர் உலகனாய் மட்டும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. மிகப்பெரிய கலகனாய் மாறியிருக்கிறார். உலகனாய் இருப்பது சுலபம். கலகனாய் இருப்பது அதிசயம். அந்த வகையில்தான் அவர் இன்றைக்கு ஒரு நல்ல கலகன். அந்த வகையிலேதான் அவர் பாராட்டுக்குரியவர்.
உயர்வுகளை நோக்கி
தமிழனை, தமிழை உந்தித் தள்ளின
இச்சகம் பேசிகளின்
ஒப்புக்கான உறவுகள் ஒதுங்கி நின்று
உள்ளுக்குள் வெந்தன
தமிழ்ச்சொற்கள் காவியங்களை
கதைகளை, பாடல்களை
எத்தனையோ வகைகளில்
எவ்வளவோ காலமாய் சந்தித்திருக்கின்றன
துணிவுமிக்க
வெட்டு ஒன்று; துண்டிரண்டு
வெப்ப நெருப்புப் பிம்பமான
சிந்தனைகளைத் தந்தை பெரியாரின்
அறிவுத் தாழ்வாரத்தில்தான்
முதன்முதலாய்ச் சந்தித்தன
அறிவோடு நட்பு பாராட்ட முடிந்த அய்யா
அறியாமையின் தேநீர் விருந்து
அழைப்புகளை ஒருபோதும்
ஏற்க முடியவில்லை; எப்படி
முடியும் அது?
இருள் மண்டபத்தில்
இரவு நடத்தும் நட்சத்திரத் திருவிழாவிற்கு
வருகை தர ஒப்புவானா சூரியன்?
ஒப்பினால், பகல்களை யார் பயிரிடுவது
பாதுகாப்பது
இப்படி எவ்வளவோ சுவையான, அற்புதமான புதிய கோணத்தில் அவர்கள் படைத்திருக்கிறார்கள்.
தொடருங்கள் உங்கள் பயணத்தை - துணைக்கு நிற்கிறோம் நாங்கள்!
அப்படிப்பட்ட ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு 81 வயது என்று சொன்னாலும், இங்கே உரையாற்றிய டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வயதைக் குறைத்துச் சொன்னார்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இன்னும் அதிகமாகப் பாடுபடுவதற்கு நீங்கள் நிச் சயமாக இருக்கவேண்டும். இதுவரையில் உங்களிடத்தில் யாரும் வராதவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னால், இனி வரமாட்டார்கள் என்கிற உணர்வை இந்த விழா தந்திருக்கும் என்று நாங்கள் நிச்சயமாகக் கருதுகி றோம்.
அந்த வகையில் 81 அல்ல; கவிஞர் ஈரோடு தமிழன் பன் அவர்களே, 18 என்று மாற்றிப் படியுங்கள், சரியாக இருக்கும். தொடருங்கள் உங்கள் பயணத்தை - துணைக்கு நிற்கிறோம் நாங்கள்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

எழுத்தாளர் உணர்வுகளை இழித்துப் பேசும் தினமணி!

எழுத்தாளர் உணர்வுகளை இழித்துப் பேசும் தினமணி!
26.10.2015 தினமணி கட்டுரைக்கு மறுப்பு
- மஞ்சை வசந்தன்
வளர்ச்சி என்ற கவர்ச்சிகாட்டி, மக்களை குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றி பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தது முதல் வன்முறைச் செயல்பாடுகள், பேச்சுகள், கொலைகள், அழிவு வேலைகள் அன்றாடம் நடக்கின்றன. மதவெறிக்கூட்டம் பல அமைப்பு களாகப் பிரிந்து பல செயல்களை, திட் டங்களை, மோசடிகளை, கலவரங் களை, மோதல்களை உருவாக்குவது போலவே, அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள், பரிவாரங்கள் என்று பலரைப் பயன்படுத்தி அவ்வப் பொழுது வெறிப்பேச்சுகளை பேசி சிக்கல்களை உருவாக்குவதோடு மக் களின் உணர்வுகள், எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்றும் சோதித் துப் பார்க்கின்றனர்.
மறுபுறம் தங்கள் திட்டங்களுக்குத் தடையாக, எதிராக இருக்கக்கூடியவர் களை, தங்கள் மோசடிகளை விளக்கிக் காட்டுகின்றவர்களை, அழித்தொழிக் கும் செயலை தங்கள் காலிகளைக் கொண்டு செய்து வருகின்றனர்.
அவ்வகையில் மனிதநேயத்தோடு மக்கள் பணியாற்றி, மக்களுக்கு விழிப் பூட்டி, பகுத்தறிவு பரப்பி, ஆதிக்கத் திற்கு எதிராய் குரல் கொடுத்துவரும் முற்போக்குச் சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை தொடர்ச்சியாக கொலை செய்தும் வருகின்றனர்.
கொலை செய்த கையோடு, மற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக் கும் கொலை மிரட்டல் விடுகின்றனர். அதேபோல் மக்களின் தனிப்பட்ட விருப்பங்களிலும், நுகர்வுகளிலும் தலையிட்டுத் தடை விதிக்கின்றனர்.
காதலிக்கக்கூடாது, விரும்பும் ஆடையை அணியக்கூடாது, விரும் பும் உணவை உண்ணக்கூடாது என்று கட்டளையிடுகின்றனர். மீறினால் தாக் குதல் நடத்திக் கொலை செய்கின்றனர்.
இவற்றை அரசும் காவல்துறையும் விரைந்து தடுக்காத நிலையில், தங்கள் கண்டனங்களை எழுத்தாளர்கள் எழுப் பினர். அதற்கும் பயன் இல்லாமல் அடாவடிச் செயல்கள் அன்றாடம் நிகழ்ந்ததால் வெறுப்புற்ற எழுத்தாளர் கள் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்து எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது தங்கள் உள்ளக் கொதிப்பை, குமுறலை, உணர்வை, எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்கும் ஒரு பண்பட்ட வழியாக, அதுவும் கடைசி வழியாகக் கையாண்டுள்ளனர்.
ஆனால் இதை, மதவெறிக்கும் பலும், அவற்றை ஆதரிக்கின்ற ஆரி யப் பார்ப்பனர்களும் கொச்சைப் படுத்தி பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர். கொலை செய்யும் கொடியவர்களை கண்டிக்காது, பாதிக்கப்பட்ட வர்களை பரிகாசம் செய்யும் பாசிசப் போக்கை அவர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வைத்திய நாதஅய் யரின் சொந்த விருப்பு வெறுப்புகளை யெல்லாம் செய்திகளாக வெளியிட்டு, இது ஒரு ஆரிய பார்ப்பன ஏடு என்று, அன் றாடம் காட்டிவருகின்ற தினமணி அவ்வகையிலே தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
எழுத்தாளர் எதிர்ப்பு பற்றி கருத்துச் சுதந்திரமும், நடுநிலையும் என்ற தலைப் பிட்டு நடுப்பக்கம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது (தினமணி 26.10.2015) சந்திர.பிரவீண்குமார் என்ற ஒருவர் அதை எழுதியுள்ளார்!
அவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை அவரது எச்சரிக்கையே வெளிப்படுத்து கிறது.
தொடர்ந்து ஒரு தரப்பாகவே நடுநிலை பிறழ்ந்த நிலையில் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தினால், சாதாரண மக்கள் வன் முறைப் பேச்சுகளை ஆதரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே அந்த எச்சரிக்கை!
எழுதுகின்றவர் தான் தரம் தாழ்ந்து தாதா பாணியில் எழுதுகிறார் என்றால், அதையும் ஒரு நாளேடு வெளியிடுகிறது என்றால், அதை விட தரம் கெட்ட நிலை வேறு என்ன இருக்க முடியும்.
எழுத்தாளர்கள் செய்த தவறு என்ன? தங்களையொத்த எழுத்தாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். தங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பியளித்துத் தங்கள் உணர்வுகளை உள்ளக் கொதிப்பைக் காட்டியுள்ளனர்.
இதற்கும் இந்த நபர் விடும் எச்சரிக்கைக்கும் என்ன தொடர்பு?
மதவெறிக்கும்பலும், ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளும், பி.ஜே.பி. தலை வர்களும், அமைச்சர்களும், எம்.பிக் களும் அன்றாடம் வெறிப்பேச்சு பேசி நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்கள். இதை குடியரசுத் தலைவர் கண்டிக்கின்றார். மோடியும், ராஜ்நாத்சிங்கும் ஏன் அமித் ஷாவும் கூட கண்டித்து (வேறு வழியில் லாமல்) எச்சரிக்கின்றனர். அந்த அள வுக்கு அந்த வெறிப்பேச்சின் கொடுமை, கடுமையுள்ளது. அதை இவர் ஆதரிப் பாராம். பொதுமக்கள் ஆதரிப்பார்களாம். இதை ஒரு பத்திரிகை கட்டுரையாக வெளியிடுகிறது.
பொதுமக்கள் காரித்துப்புகிறார்கள். அதை மறைத்து, ஏதோ இவர்கள் பின்னே பொதுமக்கள் நிற்பதுபோல ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுவதோடு, எச்சரிக்கிறர்களாம்! என்னே வேடிக்கை?
வெறிப்பேச்சை ஆதரித்துப் பாருங்கள், பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம். தெரி யாமல் தேர்ந்தெடுத்துவிட்டோமே என்று மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என்பது பிரவீண்குமாருக்கு தெரியாமலி ருக்கலாம். தினமணிக்குக் கூடவா தெரிய வில்லை?
இந்தக்கட்டுரையில் இவர் அப்படி யென்ன நியாயத்தை கூற வருகிறார்? தனது பாசிச தாகத்தை கக்கியுள்ளதைத் தவிர அதில் நியாயமான கருத்து எதுவும் இல்லையே!
இதோ அவர் கூறும் கருத்துக்கள்
1) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் பிராமணர்களை மட்டுமே திராவிட இயக்கங்கள் குறிவைக்கின்றன.
2) திராவிட இயக்கத்தினர் நவீன எழுத்துக்களை ஏற்க மறுக்கின்றனர்.
3) திராவிட இயக்கத்தை விமர்சித்து எழுத்தாளர்களால் எழுதமுடியவில்லை.
4) கம்யூனிஸ்ட்டுகள் கார்ல்மார்க்ஸை விமர்சிக்க இடங்கொடுப்பதில்லை.
5) மோடியரசின் கடுமையைக் கண்டிக்கலாம், ஆனால் தனிப்பட்ட அவதூறு எப்படிப் பரப்ப முடியும்?
6) எழுத்தாளர்கள் கொலை, தாத்ரி வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வற்புறுத்தலாம். மாறாக மோடியரசை எப்படிக் குறை கூறமுடியும்?
7) மதத்தின் பேரால் குண்டு வெடிக் கும்போது அமைதி காத்த எழுத்தாளர்கள் கொலை நிகழ்வில் மட்டும் விசாரிக் காமலே தீர்ப்புக் கூறுவது ஏன்?
இவையே இவர் கட்டுரையில் எழுப்பும் வினா, வேதனை.
இந்த ஏழு செய்திகளையும் முதலில் சொன்ன இவரது எச்சரிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர், எதைச் சார்ந்தவர் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். என்றா லும் இந்த பத்திரிகையையும் அப்பாவி மக்கள் படிக்கிறார்களே அவர்களுக்காக சில விளக்கங்களை எழுத வேண்டிய கட்டாயம் எழுகிறது!
எழுத்தாளர் படுகொலையும், அதன் வேதனையும் விளைவும் பற்றி பேச வந்தவர் அதை விட்டுவிட்டு அவருக் குள்ள ஆதிக்க அரிப்பையெல்லாம் தேய்த்துத் தீர்க்கிறார் இக்கட்டுரையில்.
எழுத்தாளர் படுகொலைக்கும் திரா விடக் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? அக்கட்சிகளின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு? எந்தப் புழுக்கத்தை எங்குவந்து காட்டுகிறார் பாருங்கள்!
எந்தத் தனிப்பட்ட பார்ப்பனரையும் திராவிட இயக்கம் எதிர்ப்பதில்லை. பார்ப்பன ஆதிக்கத்தை மோசடியை, சூழ்ச்சியை வஞ்சத்தை, மனிதநேய மற்ற செயல்களை, சதிவேலைகளைத் தான் கண்டிக்கிறார்கள்.
ஞானி, சின்னக்குத்தூசி, கமலகாசன் போன்றவர்களை, பரிதிமாற் கலைஞர் போன்றவர்களை பாராட்டி ஏற்றி போற்றத்தவறவில்லையே! மற்ற வர்களும் மாறினால் பாராட்டுவோமே!
ஜெயலலிதா இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் காத்த போது பாராட்டவில்லையா?
நவீன எழுத்துக்களை உருவாக்கிய வர்களே திராவிடர் இயக்கத்தவர். அப்படியிருக்க நவீன எழுத்துக்களை ஏற்கவில்லை என்பது அறியாமையா? அயோக்கியத்தனமா?
திராவிட இயக்கத்தை விமர்சிக்க முடியவில்லையாம்! இதைவிடப் பித்த லாட்டம் வேறு உண்டா? பொழுது போனா பொழுது விடிந்தா உங்க ளுக்கு அதுதானே முழுநேர வேலை! இது மக்களுக்குத் தெரியாதா?
கார்ல் மார்க்ஸை விமர்சிக்க கம்யூ னிஸ்ட்டுகள் இடம் கொடுக்கவில் லையாம்?
எங்கு தடைபோட்டார்கள்? எவர் வாயைப் பொத்தினார்கள்? எதையா வது பினாத்துவதா?
மோடி அரசை விமர்சிக்கலாமாம். ஆனால் தனிப்பட்ட அவதூறு எப் படிப் பரப்பலாம்?
யார் அவதூறு பரப்பியது? வழக்குப் போடு! அவதூறு பேசவே பத்திரிகையும் தொலைக்காட்சியும் நடத்திடும் கூட்டம் மற்றவர்கள் மீது குறை சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை!
எழுத்தாளர் கொலையைக் கண் டிக்கலாமாம். ஆனால் மோடி அரசை கண்டிக்கக் கூடாதாம்!
மூலத்தைத் தாக்காமல் விளைவை பேசுவதை முட்டாள்தான் செய்வான். இவ்விளைவுக்குக் கார ணம் ஆட்சி அதிகாரம்தான் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல மக்கள்!
மதத்தின்பேரால் குண்டு வெடிக் கும் போது கண்டிக்காத எழுத்தாளர்கள் கொலையை மட்டும் கண்டிப்பதேன்? இந்த நியாயஸ்தர் கேட்கிறார்!
மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு கட்சி வளர்ப்பதே காவிக்கும்பல் தானே! குண்டு வீசுவது, வன்முறை செய்வது யாராயினும் அதைக் கண்டிக்க திராவிட இயக்கங்களோ, முற்போக்கு எழுத்தாளர்களோ என்றும் தவறியதில்லை! அப்படியி ருக்க சாத்தான் வேதம் ஓதுவது போல் இந்தக் கட்டுரையாளர் கருத்துகூறுவது, உள்நோக்க உந்துதல் எது என்பது உலகுக்குப் புரியும்!
மக்கள் எல்லோரும் விழிப் போடுதான் இருக்கிறார்கள். அதுவும் வேகத்தோடு இருக்கிறார்கள்! அதிகம் ஆடினால் அதற்கு பதிலடியை கட் டாயம் கொடுப்பார்கள்! எச்சரிக்கை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...