மாட்டிறைச்சியில் இரும்புசத்து நிறைந்துள்ளது என்று கூறிய
அரசு வெளியீடு - பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்
ஆவணப் படத்திற்கும் தடை
அரசு வெளியீடு - பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்
ஆவணப் படத்திற்கும் தடை
சண்டிகர், அக்.30_ மாட்டிறைச்சியில் இரும்பு சத்துள்ளது என்று அரியானா அர சின் கல்வித்துறையால் வெளியிடப்பட்ட பகுதி பள்ளி பாடத்தில் இடம் பெற்றதற்காக அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஷிக்ஷா சாரதி எனும் இதழ் அரியானா அரசின் கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டு வருவ தாகும். மாணவர்களுக்கு அன்றாட அறிவியல் தக வல்களை, செயல்பாடு களை விளக்கும்வகையில் அவ்வேடு வெளி வந்து கொண்டிருக்கிறது.
இதழின் தலைமை புரவலராக அரியானா மாநில முதல்வர் மனேகர் லால் கட்டாரும், புரவல ராக கல்வித்துறை அமைச் சர் ராம் பிலாஸ் ஷர்மா உள்ளனர். நாட்டிலேயே பசுக்கொலைக்கு தண் டனையாக 10 ஆண்டு களை விதித்து சட்டம் இயற்றியுள்ள மாநிலம் அரியானா மட்டுமே.
இந்தியாவில் உள்ள முசுலீம்ககள் மாட்டுக் கறியை உண்ணுவதை நிறுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டு, பின்னர் மறுத்தார். எனினும், அவரு டனான நேர்காணல் ஒலிப்பதிவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக் கிறது.
சிக்ஷா சாரதி எனும் அவ்விதழ் கல்வித்துறை யின் சார்பில் பதிப்பிக்கப் பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந் தைகள், உணவு மற்றும் சத்து, கல்வி கற்பிக்கும் முறை, பல்வேறு தகவல் கள், ஊக்கமூட்டக்கூடிய கதைகள், தொடர்ச்சியான செயல்பாடுகள்குறித்த தகவல்கள், பல்வேறு பள்ளிகளின் சாதனைகள். அரியானா மாநிலக் கல் வித்துறை அளித்துள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் 14,500 அர சுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் அவ்விதழ் சென்றடைகிறது.
பல்வேறு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகவல்களை இதழுக்கு அனுப்புவதில் முக்கியப் பங்காற்றிவருகின்றனர். மாட்டுக்கறிகுறித்த தகவல் இடம் பெற்றிருந்த தால், கல்வித்துறையின் தகவலின்படி, கடந்த செப் டம்பர் மாத இதழ்களைத் திரும்ப பெற்றுக் கொண் டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறைக் கான இயக்குநரும், அவ் விதழின் ஆசிரியர் குழு வின் உறுப்பினருமாகிய எம்.எல்.கவுசிக் மாட்டுக் கறி கட்டுரை தொடர்பாக கருத்து கூற மறுத்து விட்டார்.
பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு பசுக் கொலைக்கு 5 ஆண்டுகளாக இருந்த தண்டனையை இரட்டிப் பாக்கி 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்டத்தை திருத்தியது.
அவ்வேட்டில் மாட்டுக் கறி சாப்பிடும்போது, அதுவும் இளம் கன்றின் கறியைச் சாப்பிடும்போது நேரிடையாக உடலுக்கு இரும்புச் சத்து சேர்கிறது என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. அக்கட்டுரை இரும்புச்சத்தின் இன்றி யமையாமையை விளக் குவதாக இருந்தது. அன்றாட வாழ்வில் இரும்புச் சத்து பற்றாக்குறையைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுமுறை குறித்து விரிவாக விளக்கி உள்ளது. இரும்புச்சத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் இரும்பு சத்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

அரியானா மாநிலத் தில் பஞ்ச்குளாவில் உள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்திலி ருந்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவரக் கூடிய இதழ் சிக்ஷா சாரதி. பள்ளிக் கல்விக் கான இயக்குநரே சிக்ஷா லோக் சொசைட்டியின் தலைவரும் ஆவார்.
இதழாசிரியராக இருப்பவர் இதுகுறித்து குறிப்பிடும்போது, அக்கட்டுரை அறிவியல் அறிக்கையின்படி எடுத்து வெளியிடப்பட்டதாகும் என்றார்.
மாட்டுக்கறி, இளம் கன்றின் கறி, இளம் செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி மற்றும் இதர விலங்குகளின் இறைச்சி யிலிருந்து பெறப்படுகின்ற சத்துகுறித்து அக்கட்டு ரையில் விவரிக்கப்பட் டுள்ளது.
அக்கட்டுரை அவ் விதழில் வெளியானதை அடுத்து, பாஜக ஆளும் அரியானாவின் கல்வி அமைச்சராக உள்ள ராம் பிலாஸ் சர்மா கூறுகை யில், அரியானாவில் அவ் விதழில் அக்கட்டுரையை வெளியிட்டிருக்கக் கூடாது. இதழாசிரியரை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை களை எடுத்திட உள் ளோம் என்றார்.

52 பக்கங்கள் கொண்ட இணையப்பக்கத்தில் இதழாக தொடக்கக் கல்வித்துறைக்கான இணையதளத்தில் வெளி யிடப்பட்ட நிலையில், தற்போது இணையத்தி லிருந்தும் செப்டம்பர் மாதத்துக்கான இதழ் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி குறித்த ஆவணப் படத்திற்கும் தடை ஜீவிகா ஆசியா வாழ்வியல்முறை ஆவணப்பட விழா_2015 ஆவணப்பட விழாவில் மும்பையில் உணவுப் பழக்கம்குறித்த ஆவணப் படமாக உணவுப் பட்டியலில் ஜாதி எனும் ஆவணப்படம் நாளை (31.10.2015) புதுடில்லியில் திரையிடப்பட இருந்தது. ஆனால், விழா அமைப் பாளர்களுக்கு, ஆவணப் படத்தை திரையிடுவதற்கு முன்பாக தணிக்கை சான்று பெற்றிட வேண் டும் என்று அறிவிக் கையை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இதுகுறித்து விழாக் குழுவைச் சேர்ந்தவரான அதுல் ஆனந்த் கூறுகை யில், பொதுமக்கள் காணும் வண்ணம் ஆவணப்படங் களைத் திரையிடுவதற்கு தனியே சான்று பெற வேண்டி உள்ளது. 35 படங்களை சான்றளிக்கக் கோரி அனுப்பி இருந் தோம். ஆனால் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இந்த ஆவ ணப்படத்துக்கு சான்ற ளிக்க மறுத்துவிட்டது.
ஆவணப்படத்தக்கு சான்றளிக்க மறுத்து விட் டது குறித்து அலுவலகத் தரப்பில் ஒருவர் கூறும் போது, அரசியல் மற்றும் மத ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும்வகையில் இப்படம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
திரைப்பட விழாவின் அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்னிக்தா வெர்மா கூறுகையில், மக்களின் வாழ்வியல் முறைகுறித்தே இப்படத் தின்மூலமாக வெளிப் படுத்த விரும்பினோம் என்றார்.
அதுல் ஆனந்த் கூறு கையில், மாட்டுக்கறி என்றதுமே அமைச்சகம் குறிப்பாக அனுமதி மறுத் துள்ளது என்றார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சென்னை பெரியார் திடலுக்கு ஜெர்மன் பகுத்தறிவாளர்கள் வருகை
- இப்போதுள்ள மத்திய பி.ஜே.பி. அரசுபோல பலவீனமான அரசை இந்தியா இதுவரை கண்டதில்லை
- எல்லை தாண்டுவதாகக் கூறி எல்லை தாண்டுகிறது இலங்கை அரசு - கி.வீர்மணி
- அடுத்து தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்!
- ஜாதியப் பாகுபாடுகளைக் கண்டித்து பவுத்தத்தைத் தழுவிய 90 தாழ்த்தப்பட்டவர்கள்
No comments:
Post a Comment