சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க.
ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி
விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!
அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர்
நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க
மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை
வெளியிட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?
சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?
சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே!
இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ்
அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால்
வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?
கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல்
அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில்
கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!
உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும்
பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ
சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை
இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா
முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ
இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய
பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது
என்று எழுதுகிறது அதிமுக ஏடு?
இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது?
தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால்
உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?
உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு
தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு?
இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?
இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி
திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி
அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?
இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா
திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின்
கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப்
பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற
சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?
தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட
மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத்
தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி
உங்களுக்குக் கிடையாதாம்.
இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!
No comments:
Post a Comment