- கவிஞர் கலி. பூங்குன்றன்
(திருச்சி உறையூரைச் சேர்ந்த தோழர் எம்.கோவிந்தன் அவர்கள் கேட்டுள்ள வினாக் களுக்கு இங்கே விடை அளிக் கப்படுகின்றன)
கேள்வி 1: நாடு விட்டு நாடு செல்வது தவறு; இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை அரசியல்வாதிகள் ஏன் கண்டிக்கவில்லை?
நமது பதில்: இலங்கை எல்லைக் குள் என்ற பிரயோகமே முதலில் தவறு. கச்சத்தீவு என்பது தமி ழ்நாட்டுக்குரியது என்பதற்கு ஏராள ஆதாரங்கள் உண்டு. (திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்துள்ளது)
1974இல் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இலங்கை அரசுக்குக் கச்சத் தீவைத் தாரை வார்த்தது; அப்பொழுது போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத் தீவுப் பகுதியில் பாரம்பரியம் பாரம்பரியமாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
1976இல் இந்திய வெளியுறவுச் செய லாளர் இலங்கை வெளியுறவுத் துறை செயலாளருக்கு எழுதிய ஒரு கடிதத் தின் மூலம் இந்திய மீனவர்கள் அவர் களது படகுகளும் இரு நாட்டுக்கிடை யில் உள்ள சரித்திரம் வாய்ந்த கடல் பகுதியிலும், இலங்கைக் கடல் பகுதியிலும் சென்று இலங்கை அரசின் அனுமதியில்லாமல் மீன் பிடிக்கக் கூடாது என்று இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் போன்றவை கிடையாது. அப்படியானால் இலங்கை அரசின் அனுமதியோடு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று ஆகிறது.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவை தாரை வார்த்து விட்டு, நமது மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவதும், உதைக்கப்படுவதும் நியாயம்தானா? பட்டுப் புடவையை இரவல் கொடுத்து விட்டு அந்தப் பெண் போகும் இட மெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதையாக அல்லவா இருக்கிறது.
கடலில் எல்லைக் கோடுகளைப் போட முடியாது; காற்றடித்த திசையில் படகுகள் இழுத்துச் செல்லப்படும் நிலைதான்.
சட்டங்கள் எப்படி இருந்தாலும் உலகில் பல நாடுகளிலும் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த தற்காக சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை உண்டா?
தமிழக எல்லைப் பகுதிக்குள்ளும் வந்து நமது மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்கி இருக்கிறதே!
நமக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தவர்கள் நாம் என்கிற முறையில், இலங்கை அர சுடன் பேசி, தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரலாமே!
கேள்வி 2: தமிழ்நாட்டில் முதி யோர்கள் அவர்களது வாரிசுகளால் பராமரிக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின் றார்களே - இங்குள்ள அரசியல்வாதிகள் முதியோர்களை இங்கு ஏன் கண்டு கொள்ளவில்லை?
நமது பதில்: முதியோர்களுக்கு ஆதரவு காட்டுவது அவசியம் -_ அது தான் தலை சிறந்த மனிதாபிமானம் கூட! புதிய பொருளாதாரக் கொள்கை பொருள்களின்மீது ஈர்ப்பை அதி கரிக்கச் செய்த மனிதத்துவத்தைக் கை விட்ட நிலை வளருவது நல்லதல்ல. இந்த நிலை குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் தவறாது வலியுறுத்தியும் வருகிறார். உங்கள் பெற்றோர்களைப் பராமரியுங்கள் நன்றி காட்டுங்கள் என்று கூறியும் வருகிறார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கைவல்யம் முதியோர் இல்லத்தில் மூப்படைந்தவர் களைப் பராமரிக்கும் மனிதாபிமானப் பணியும் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டுதான் உள்ளது.
உள்நாட்டில் கலவரம் மூளும் நிலையிலோ அந்நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு அன்பு முகம் காட்டி தேவையான உதவி களைச் செய்வது தலை சிறந்த மனிதாபிமானம்.
அந்த வகையில் நமது தொப்புட் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்களை நம் நாட்டில் தங்க வைத்து உபசரிப்பது சரியானதுதானே!
அந்த வகையில் நமது தொப்புட் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்களை நம் நாட்டில் தங்க வைத்து உபசரிப்பது சரியானதுதானே!
கேள்வி 3: காமன்வெல்த் கூட்டத் திற்குச் சென்றால்தானே நல்லது, கெட்டது பேசி முடிவெடுக்க முடியும்? இதில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்பது தவறு இல்லையா?
நமது பதில்: இலங்கையைப் பொறுத்தவரை தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது; எதிர்காலத்தில் சிங்கள இனம் மற்றொன்று சிங்களக் கலப்பினம் மட்டுமே! இலங்கையில் இருக்க முடியும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே பச்சையாகப் பாசிசத்தின் மறு வடிவமாகவே கொக்கரிக்கிறாரே!
ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத் தில் கண்டுள்ள வடக்கு -_ கிழக்கு மாகாண இணைப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே.
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்து வரும் உதவியைப் பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் திருப்பாமல், குற்றம் புரியும் சிங்களவர்கள் பக்கமே திருப்பப்படுகிறதே!
பல கட்டங்களிலும் இலங்கை பக்கம் தான் இந்தியா சார்ந்து இருந்து வந்துள்ளது. அப்படி இருந்தாலும் இந்தியா பக்கம் தன் ஆதரவை இலங்கை காட்டியது இல்லை. அப்படி இருக்கும் போது இலங்கை அரசுக் காக நாம் ஏன் நம் விரலைச் சுட்டுக் கொள்ள வேண்டும்?
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.
போர்க் குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வரும் இந்தக் கால கட்டத்தில், காமன்வெல்த்துக்கு அடுத்த ஈராண்டுகள் தலைவராக ராஜபக்சே வரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதற்கு போய் நாம் சாட்சியாக இருக்க வேண்டுமா? இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கடந்த கால மனித விரோத குற்றச் செயல்களுக்கும் பச்சைக் கொடி காட்டிய குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிவிட மாட்டோமா?
இதற்கு முன்புகூட போர்க் குற்றம் செய்தவர்களை நிறவெறி, இனவெறிக் கண்ணோட்டத்தில் உள்ள நாடுகளை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கி வைத்தது உண்டே!
அவை எல்லாவற்றையும்விட ராஜபக்சே செய்த இனப்படுகொலை பல மடங்கு பெரிதாயிற்றே.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லையானால் நாடே குற்றவாளி களின் கூடாரமாக மாறி விடாதா?
இந்தியா முற்றிலுமாக காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்திருந்தால் மிகப் பெரிய நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டு இருக்கும் _- அதன் பலன் தமிழர்களுக்குக் கிட்டியிருக்குமே.
கேள்வி 4: பெரியார் என்பது நல்ல அடைமொழிதானே; தந்தை பெரியார் என்பது சரியா? ஒருவர் எல்லோரையும் தாய் என்று சொல்லலாம். தந்தையைத் தவிர வேறு யாரையும் தந்தை என்று சொன்னால் தாயின் கற்பிற்குக் களங்கம் இல்லையா?
நமது பதில்: காந்தியாரை திணீலீமீக்ஷீ ஷீயீ லீமீ ழிணீவீஷீஸீ என்று சொல்லுவ தில்லையா?
நமது பதில்: காந்தியாரை திணீலீமீக்ஷீ ஷீயீ லீமீ ழிணீவீஷீஸீ என்று சொல்லுவ தில்லையா?
நாட்டு மக்களுக்காக நற்றொண்டு செய்பவர்களை அவ்வாறு அழைப் பதில் தவறு இல்லை. அந்தச் சொல்லுக்கு நேரிடையான பொருள் பார்க்கக் கூடாது; தன் பிள்ளைகளை ஒரு தந்தை பராமரிப்பதுபோல ஒரு நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுபவர் களையும் தந்தை என்று அழைப்பது எப்படி தவறாகும்?
நீங்கள் பார்க்கும் கோணத்தில் ஒருவரைத் தாய் என்று அழைப்பது கூடக் குற்றமாகி விடுமே. தன்னுடைய தந்தையின் மனைவிதானே தாய். சொந்த தாயைத் தவிர, மற்ற பெண்களைத் தாய் என்று அழைத்தால் தமது தந்தையின் மனைவி அவர் என்று பொருள் ஏற்பட்டு விடாதா?
கேள்வி 5: திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்களை தமிழர் தலைவர் என்று அழைக்கலாமா? உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 10 கோடி தமிழர்களுக்குத் தலைவரா?
நமது பதில்: தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி அவருக்கு உண்டு என்பதாலும் கடந்த காலங் களில் அவர் ஆற்றிவரும் தொண்டின் அருமையாலும் தமிழர் தலைவர் என்று தாராளமாகவே அழைக்கலாம். தமிழ்நாட்டின் மூத்த தலைவரான மானமிகு கலைஞர் அவர்களே தமிழர் தலைவர் என்று தானே விளிக்கிறார்.
பார்ப்பனரை உறுப்பினராக சேர்க்காத இயக்கத்தைத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லுபவர்தான் தமிழர் தலைவர் என்னும் மதிப்புக்கு உரியவர் ஆவார்.
எந்தவித அரசியல் நோக்கும் சபலமும் இல்லாமல் தமிழின மக்களுக்கு இடர் வரும் போதெல்லாம் தோள் தூக்கிக் களம் இறங்கிப் போராடும் அவரைத் தமிழர் தலைவர் என்று அழைப்பதுதானே சரி!
கேள்வி 6: பெரியாரின் நினைவாக 95 ஆயிரம் மரக் கன்றுகள் நடலாம்; 95 அடி உயரத்தில் சிலை தேவையா?
நமது பதில்: திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் மரக்கன்றுகள் நடுவதை அன்றாடப் பணியாகவே கொண்டு செயல்பட்டு வந்து கொண்டு இருக்கிறது - அது ஒரு பக்கம்.
95 அடி உயரத்தில் தந்தை பெரி யார் சிலை வைக்கப்படுவது என்பது, அவர்தம் கொள்கைப் பரப்புதல் என்பதில் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
95 அடி உயரத்தில் நிற்கும் இந்த மனிதர் யார்? எதற்காக அவருக்கு இவ்வளவு உயரத்தில் சிலை? அவரின் கொள்கைகள் என்ன? என்று விவாதங்கள் நடைபெற இது பெருந் துணையாக இருக்கும்.
உலகில் ஒரு சிலையை நிறுவி அதன் பீடத்தின் கீழ் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்களை துணி வாகப் பொறிக்க முடிகிறது என்றால் அது தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தில் மட்டும்தான்!
வெறும் சிலை மட்டுமன்று, ஒலி, ஒளி காட்சிகள், நூலகம், புத்தக நிலை யம், சிறுவர் பூங்கா உட்பட பல்வேறு அம்சங்கள் அந்த வளாகத்தில் உருவாக்கப்பட்டு பெரியார் உலகம் என்று அதற்குப் பெயர் சூட்டப்படு கிறது. உலகில் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் வந்து பார்த்தே தீர வேண்டிய சுற்றுலா மய்யமாக ஒளி விட வாய்ப்பு உண்டே!
பெரியார் கொள்கைப் பரப்புதலில் இது ஒரு தொலைநோக்கு யுக்தியாகும். அதில் உங்கள் பங்கும் இருக்கட்டும்.
கேள்வி 7: மோடியும், அத்வானி யும் மதவாத சக்திகளாக உருவெடுத்து வருகிறார்களே! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்?
நமது பதில்: 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியைப் பல்லாயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டி இடித்து முடித்தவர் எல்.கே. அத்வானி.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லீம்களை (குழந்தைகள், கருவுற்ற பெண்கள் உட்பட) கொன்று குவிக்கப் பட்டதற்குத் தலைமை தாங்கிய இட்லர் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி.
இப்படிப்பட்டவர்கள் அதிகாரத் திற்கு வந்தால் என்னவாகும் என்ப தற்கு இவற்றைவிட எடுத்துக்காட்டு தேவைப்படாது.
கேள்வி 8: அரசியல்வாதிகள் தேர் தலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர் என இனாம் அறிவித்து வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு வழங்குவதால் யாருக்கு அதிக இலாபம்? மேற்கண்ட கம்பெனிக்காரர்கள் அரசியல்வாதி களுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கொடுப்பதாக கூறப்படுவதுபற்றி ஊடகங் களின்மூலம் மக்களுக்குத் தெரிவித்து இனாம் பொருள்கள் வாங்க வேண்டாம் என்று கூறலாமே?
நமது பதில்: மக்களிடையே வாங்கும் சக்தி பெருகுவதற்கான பொருளாதாரத்தை வளர்த்து விட வேண்டுமே தவிர இனாம் பொருள் களைக் கை நீட்டி வாங்கக் கூடிய அவலம் ஆரோக்கியமானதல்ல.
ஒரு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்க வலையைக் கொடு என்பது சீனப் பழமொழி.
No comments:
Post a Comment