தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்குவார்கள். கோரிக்கை கள் நிறைவேறும்வரை கோடிக் கைகளை உயர்த்துவார்கள். நீதிமன்றமும் செல் வதுண்டு. அவைதான் சரியான வழி முறையும்கூட.
புதுச்சேரியில் என்ன நடந்திருக்கிறது? முதலியார்பேட்டையில் ஏ.எஃப்.பி. (ரோடியர் மில்) துணி நெய்யும் தொழிற்சாலை.
நலிந்த தொழிற்சாலையாகி இழுத்து மூடப்பட்டது (3.2.2013). தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது. 13 மாத சம்பளப் பாக்கியும் நிலுவையில் உள்ளது - என்னே கொடுமை!
அதைவிட இன்னொரு கொடுமை - தொழிலாளர்கள் தரப்பில்,
ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணி. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்த் தோழர் கள் தொழிற்சாலை முன் கூடினர்.
குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார் சிலை போன்ற கட்-அவுட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த அய்யனாருக்கு எலு மிச்சை மாலை, பூ மாலைகளைச் சூட்டினர். அய்யனாருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கதைக்கிறார்களே - சேவல், சாராயம் (அதுவும் புதுச்சேரி - கேட்கவேண்டுமா?) போன்றவற்றை களேபரமாகப் படைத்தனர். பிறகு உருமி அடித்தனர்.
10 மணி... அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத் திற்குள் அமைந்திருக்கும் கலிதீர்த்த அய்ய னார் கோவிலை வந்தடைந்தது ஊர்வலம்.
உருமி அடிக்கப்பட்டது - சிலர் சாமி வந்து(?) ஆடினார்களாம்.
அய்யனாருக்கு விசேடமாகப் பூஜைகள் செய்யப்பட்டனவாம் - கோரிக்கைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டினை குதிரைமீது வீற்றிருந்த அய்யனார் பொம்மைக் கையில் உள்ள கத்தியில் வைத்தனராம்.
வேடிக்கை பார்க்க மக்கள் கூடினார் களாம் - எப்படி இருக்கிறது? விவரம் தெரியாதவர்களா இந்தத் தொழிலாளர்கள்? விவரம் தெரியாதவர்களா இவர்களை வழிநடத்தும் தொழிலாளர்த் தலைவர்கள்?
அய்யனாருக்கு அவ்வளவு பெரிய சக்தி இருந்தால், தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்? அப் பொழுது அய்யனார் நினைவு வர வில்லையா?
தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் புகாவிடின், அதன் விளைவு இப்படிக் கீழ்த்தரத்தில்தான் சென்று முடியும்.
தந்தை பெரியார் கூறுகிறார்:
இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்கிற ஸ்தாப னங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோவில் குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவெல்லாம் சொல்லுகிறார்கள். அந்தப்படி இருப்ப தனால் தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோவில், குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் பலியாவானே தவிர, சேர்த்த பொருளை மீட்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ வாழ்க்கைத் தரத்தை சரிக் கட்டிக் கொள்ளவோ முடி யாதவனாக ஆகிவிடு கிறான் (விடுதலை, 22.3.1952) என்று தந்தை பெரியார் சொன் னதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை வெளிச்சமாய்த் தெரியும்.
கான்பூரிலே செருப்புத் தொழிற் சாலைகளில் ஒருமுறை வேலை நிறுத்தம்; வன்முறைகள் தலைதூக்கின - தீ வைப்பு முதற் கொண்டு அரங்கேறின. காவல் துறையாலும் அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிற்சாலை முதலாளி ஒரு தந்திரம் செய்தார். தம் குடும்பப் புரோகி தனைக் களத்தில் இறக்கிவிட்டார்.
அவன் கையிலே ஒரு தட்டு, அதில் கொஞ்சம் கோவில் பிரசாதம்!
இந்தச் சகிதமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தான் புரோகிதன்! அவ்வளவுதான்! ஆர்ப்பரித்த வாய்கள் அடங்கின. பொங்கி எழுந்த தோள்களும் அழுந்தின!
புரோகிதப் பார்ப்பானிடமிருந்து பிரசாதம் பெற தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
தொழிலாளியின் எரிமலைக் குழம்பை ஒரு திருநீறும், குங்குமமும் அணைத்து விட்டதே!
எந்தப் பிரச்சினைக்கும் பெரியார் மருந்து - மூலிகை தேவைப்படுகிறது!
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment