Friday, June 14, 2013

ஆர்.எஸ்.எஸ். என்ற சத்திய கீர்த்திகளைப் புரிந்துகொள்வீர்!

- ஊசி மிளகாய்
பா.ஜ.க. என்ற பாரதீய ஜனதா கட்சிக்கு வயது 33. ஆம்; பழைய பாரதீய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முக்கர்ஜி - தீனதயாள் உபாத்தியாயா போன்ற வர்களால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு முடிந்து, புதிய அரசியல் கட்சியாக அவதரித்தது பா.ஜ.க. 1980 இல்!
இந்தக் கட்சி 13 நாள் ஆட்சியை ஒரு கட்சி துணையோடு வாஜ்பேயி அவர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து, அதன் ஆயுள் அற்பாயுளாக முடிந்தவுடன், அவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தனர்.
இனி கூட்டணிதான்; வருகின்ற கட்சிகளையெல்லாம் இழுத்துப் போட்டு கூட்டணி அமைத்தால், மாநிலக் கட்சி களின்மூலம் வெற்றிபெற டில்லிக்கு வருபவர்களை நாம் கூட்டணிமூலம் சுவீகரித்துக்கொள்ளலாம்; அப்போது ஆட்சி நீடிக்கும் என்று முடிவு எடுத்து அதன்படி நாட்டின் பல முக்கிய மாநிலக் கட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (சூனுஹ) என்று உருவாக்கி ஒரு பத்தாண்டு காலம் ஆட்சி செய்தனர்.
அப்போதும் சரி, இப்போதும் சரி, ஏன் எப்போதும்கூட, தங்களை பா.ஜ.க. ஒரு வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்வதுண்டு. அதற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா?
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரே ஒருவர்தான் தலைவர் என்று இருப்பார்; ஆனால், பா.ஜ.க.வோ அப்படி அல்ல; இதற்கு வெளிப்பார்வை தலைவர்; உள்ளே இருந்து ஆட்டிப் படைத்து அரசியல் நடத்திடுவது ஆர்.எஸ்.எஸ். என்ற ராஷ்டிர சுயம் சேவக் அமைப்புதான்!
அதுதான் இந்த அரசியல் கட்சியின் மூக்கணாங்கயிறு! அது என்னென்ன கட்டளை இடுகிறதோ அதன்படிதான் காய்கள் நகர்த்தப்படும்.
ஆட்சியை பா.ஜ.க. பிடித்தால், அதில் யார்? யார்? அமைச்சர்களாக இருக்க வேண்டும்; எந்தெந்த இலாகாக்கள் யார் யாருக்கு அளிக்கப்படல் வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைதான்!
இவ்வளவும் செய்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தன்னுடையது ஒரு அரசியல் கட்சி அல்ல; கலாச்சார அமைப்பு என்று கூசாமல் பொய் கூறும்.
பா.ஜ.க.விற்கு வேலை செய்வதே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தால் தான் அமைச்சரவையில் பதவியேற்பதற்கு முக்கிய தகுதி - யோக்கியதாம்சம் என்பதெல்லாம் உண்டு.
என்றாலும், தங்களுக்கும், அரசி யலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கூறிடுவர்!
அத்வானியை, அவர் பாகிஸ்தான் சென்று திரும்பிய நிலையில், முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்தார் என்பதற்காக, அவரது பொறுப்புகளிலிருந்து விலகும் அழுத்தத்தைத் கொடுத்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தானே!
உலகறிந்த உண்மையல்லவா அது?
பா.ஜ.க.வின் தலைமையில் யார் இருப்பது என்பதுகூட ஆர்.எஸ். தலைமைப்பீடம்தானே நிர்ணயிக்கிறது?
அது நிதின் கட்காரியாக இருந் தாலும், ராஜ்நாத்சிங்காக இருந்தாலும், மெயின் சுவிட்ச் ஆர்.எஸ்.எஸ். மூலம்தான் தலைவர்களின் செயல்பாடு உள்ளது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?
இரண்டு நாள்களுக்குமுன் அத் வானி கொளுத்திப் போட்ட அதிர் வெடியை, புஸ்வாணம் ஆக்கியது ஆர்.எஸ்.எஸ். அல்லவா?
அத்வானிகளால் ஆர்.எஸ்.எசை மீற முடியாதே!
இப்படி ஒரு அரசியல் கூத்து. இவர்களை நம்பினால் பொய் ராஜ்ஜியம்தானே உருவாகும்?
ஒப்பனையே உன் பெயர்தான் அரசியலா?


 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...