Tuesday, December 18, 2012

பார்ப்பனமயமாகிப் போனது கிரிக்கெட் வாரியம்!


இளவழகி, ரேவதி, பாபு இராதா கிருட்டிணன் இவர்கள் மூவரும் யார்? சென்னையில் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த - சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்; விளையாட்டு வீரர்கள்.
இவர்கள் தங்களது கடுமையான உழைப்பால் மூவரும் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் 2010 செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்றனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இளவழகி முதலிடம் பெற்று இரண் டாவது முறையாக உலக வாகையர் (சாம்பியன்) பட்டம் வென்றார். ரேவதி என்ற வீராங்கனை மூன்றாவது இடத் தையும், ஆண்கள் பிரிவில் பாபு இராதா கிருட்டிணன் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
இப்போட்டியில் கலந்து கொள் வதற்கான கட்டணங்கள், போக்கு வரத்து செலவுத் தொகைகளை மூவரும் தங்களுடைய சொந்த முயற்சியில் திரட்டி விளையாடப் போனார்கள். இதற்கு தமிழக அரசோ விளையாட்டு ஆணையங்களோ எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் உலகக்கோப்பை கேரம் போட்டியில் மூவரும் மேற்கண்ட வெற்றியைப் பெற்றார்கள். என்றதுமே தமிழக அரசும் - விளையாட்டு ஆணை யமும் அவர்கள் வெற்றியில் உரிமை கொண்டாடி மகிழ்ந்தன. விளையாட் டில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மூன்று தமிழர்களுக்கும் இன்று வரை பரிசுத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது தமிழக அரசு. தமிழர்களை விளையாட்டுத் துறையில் ஓரங்கட்டி விட்டு - கிரிக்கெட் டென் னிஸ் விளையாட்டுப் பார்ப்பனர்களை மட்டும் உயர்த்திப் பிடித்து பெருமைப் படுத்துகின்றன மத்திய மாநில அரசுகள்.
வெளிநாட்டில் பகட்டாக வாழ்ந்து வரும் உலக சதுரங்க வாகையர் (சாம் பியன்) ஆன பார்ப்பன விசுவநாதன் ஆனந்துக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அரசாங்கத்தால் உடனடியாக அள்ளிக் கொடுக்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் ஏகலை வர்களாக தானே முயன்று யார் உதவியும் -_ வாய்ப்பும் _ வசதியும் இல் லாமல் தமிழன் வீட்டுப் பிள்ளைகள் ஏராளம் பேர் முயன்று உயர்ந்து வரு கிறார்கள். இவர்களை கைதூக்கிவிட மத்திய, மாநில அரசுகள் மௌனம் சாதிக்கின்றன.
ஆனால், இந்திய மட்டைப் பந்து அணி முழுவதும் பார்ப்பனமயமாகி வருகிறது!  ஙி.சி.சி.மி என்பதன் விளக்கம் (ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ சிஷீஸீக்ஷீஷீறீ யீஷீக்ஷீ சிக்ஷீவீநீளீமீ வீஸீ மிஸீபீவீணீ) இதில் முதல் சொல்லான ஙிஷீணீக்ஷீபீ என்பதற்குப் பதிலாக (ஙிக்ஷீணீலீனீவீஸீ ஷீயீ சிஷீஸீக்ஷீஷீறீ யீஷீக்ஷீ சிக்ஷீவீநீளீமீ வீஸீ மிஸீபீவீணீ) என்பதன் சுருக்கம்தான் (ஙி.சி.சி.மி) என்று பொருள் விளங்கும் நிலைக்கு இந்திய மட்டைப் பந்தாட்ட வாரியம் ஙிக்ஷீணீலீனீவீஸீ மிஸீபீவீணீஸீ சிக்ஷீவீநீளீமீக்ஷீ இந்திய பார்ப்பன மட்டைப் பந்தாட்ட வாரியமாகிவருகிறது.
இந்திய மட்டைப் பந்தாட்ட வாரியத்தின் வாயிலாக களமிறங்கி விளையாடும் பார்ப்பன இளைஞர்கள் பட்டியல் இதோ!
1. சுனில் கவாஸ்கர், 2. ரவி சாஸ்திரி, 3. அனில் கும்ளே, 4. சச்சின் டெண்டுல்கர், 6. இராகுல் டிராவிட், 7. சவுரவ் கங்குலி, 8. வினுமங்காட், 9. அஜித் வடேகர், 10. ஜி.ஆர். விஸ்வநாத், 11. இ.ஏ.எஸ். பிரசன்னா, 12. இஷாந்த் சர்மா, 13. யாஷ்பால் சர்மா, 14. சேத்தன் சர்மா, 15. மனோஜ் பிரபாகர், 16, பி. சந்திரசேகர், 17. கே. ஸ்ரீகாந்த், 18. எம். சிவராமகிருஷ்ணன், 19. திலீப் டோஷி. 20. சுனில் ஜோஷி, 21. ரோகித் சர்மா, 22. வெங்கடேஷ் பிரசாத், 23. அசோக் மல்கோத்ரா, 24. வி.வி.எஸ். லக்ஷ்மன், 25. முரளி கார்த்திக், 26. ஸ்ரீ சாந்த், 27. திலீப் சர்தேசாய், 28. சஞ்சய் மஞ்சுரேக்கர், 29. எம்.எஸ். ஜெய்சிம்ஹா, 30. சுதாகர் ராவ், 31. டி.ஏ. ஷேகர், 32. அஸ்வின், 33. முரளி விஜய், 34. சட கோபன் ரமேஷ், 35. அனிருத்சாஸ்திரி, 36. சுப்ரமணியம் பதிரிநாத், 37. இரவிச்சந்திரன் அஸ்வின், 38. தினேஷ் கார்த்திக், 39. முரளிகார்த்திக், 40. லட்சுமி ஸ்ரீ பாலாஜி, 41. லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், ஹேமங்பதானி, அபினவ் முகுந்த், கிருஷ்ணமாச்சாரி +காந்த், டபிள்யு வி. ராமன், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஸ்ரீநிவாச ராகவன், வி.பி. சந்திரசேகர், டி.இ. ஸ்ரீநிவாசன், டி.ஏ. சேகர், எம்.ஜே. கோபாலன்.
இத்தனை பேரும் அக்மார்க் பார்ப் பனர்களே! எங்கே பணம் கொழிக் குமோ அங்கே உள்ளே புகுந்திருக் கிறார்கள் பார்ப்பனர்கள்! இந்த மட்டைப் பந்து பார்ப்பனர்களைத் தான் தொழிலதிபர்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்து விளையாட வைக்கிறார்கள். தொலைக் காட்சி ஊடகங்களும் இவர்களுக்குப் பெரிய விளம்பரங் களைக் கொடுக்கிறது. இந்திய அரசும் - மாநில அரசுகளும் மட்டைப் பந்து பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்கின்றன. இந்திய ஒற்றுமையை வளர்க்கிறேன் என்ற போர்வையில் இந்த பெருச்சாளிகளை வளர்க்கிறார்கள்.
தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் - கபடி - உலக அரங்கில் வளர்த்து எடுக்க நாதியில்லாமல் தவிக்கின்றன.
4.11.2012 இல் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் கூறிய அற்புத மான நவமணியான கருத்துக்களுள் ஒன்று இளைஞர்களைப் பிடித்து ஆட்டும் கிரிக்கெட் (மட்டைப் பந்து) போதையை முதலாவதாகத் தெளிய வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரியதொரு பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்!
உண்மையிலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் பார்ப்பனப் பேய்கள் இளைஞர்கள் என்ற போர்வையில் உள்ளே புகுந்து நாட்டு முன்னேற்றத் தையே கெடுத்துக் கொண்டிருக் கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் படிப்புக் கெட்டு - வேலைக்குப் போக வேண்டியவர்கள் வேலைக்கும் போகாமல் கிரிக்கெட் போதையில் நாடு குட்டிச் சுவராகி வருகிறது. கழகத் தலைவர் சொன்னதை அருள்கூர்ந்து சிந்திப்போம். செயல்படுவோம்!


.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...