Wednesday, October 17, 2012

கலைமகளா? கலவி மகளா?


மனந்திறந்த மடல்


கலைமகளா? கலவி மகளா?
கலைமகள்,
மே பிரம்மன், தேவலோகம்,
என்னுயிர்த் தோழி,
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணம் போல அழகியல் நுணுக்கங்கள் உடைய அழகியாய் பிறந்தவள்நான் அறிவாய்
நீ.
காமக் கண்ணனுக்கு என்ன தெரியும்? செல்வியைத் தெரியுமா? இல்லை அந்த நாயைத் தான் தெரியுமா?
என்னைப் படைத்தவனே ஒரு நாள் என்னை  படுக்கைக்கு அழைத்தான்.
மறுத்தேன், வழக்காடினேன், அவன் மனம் இளகவில்லை.
பொன் மகளும், ஆருயிர் உருக்கொண்டு ஓடிப் பார்த்தேன்.
திசைக்கொரு ஆறாக தலையைக் கொண்டு திசை தோறும் என்னைத் தேடி வந்தான் என் தந்தை.
ஆறாகி ஓடியும் அந்த நாயிடமிருந்து நான் தப்ப முடியவில்லை.
கலைமகளா? கலவி மகளா?
பிடித்தென்னை மறுபடியும் பெண்ணாக்கி பதம் பார்த்து விட்டான் அந்தப் பதர்!
தன் மாமியாராகிய பார்வதியைப் பெண்டாளப் போன போதே அவனின் ஐந்து தலையில் ஒரு தலையைக் கிள்ளி எறிந்த சிவன்  அப்போதே
அவனைக் கொன்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
தோழி,
என்னைப் பெற்ற பிரம்மனோ வன்புணர்ச்சி யாளனாய் மாறி என்னிடத்தில் இன்பத்தைப் பெற்றான்.
அவனிடமிருந்து நான் என்ன பெற்றேன்? அவனோடு ஒரு நூறு தேவ வருடங்கள் ஓடி விட்டன.
வாழ்க்கையின் எச்சமாய் பேர் சொல்ல ஓர் பிள்ளை இல்லாமல் போனதே மிச்சம்!
விருப்பம் போல என்னைப் பயன்படுத்திக் கொண்ட அவனை இறுதியில் என் தம்பி சுயாம்பு விற்கே என்னை மணஞ் செய்வித்துவிட்டான் அந்த மாபாவி!
இனிய தோழியே!
ஈரோட்டுப் பெரியார் காலத்தில் நான் பிறந் திருந்தாலாவது உன்னைப்போல பெண் விடுதலை பெற்றவளாய் இருந்திருப்பேன்.
கலைமகளா? கலவி மகளா?
என்ன செய்வது.. வேதகாலத்தில் அல்லவா நான் பிறந்து தொலைத்து விட்டேன்.
ஏடீ என்னைப் போய்க் கலைமகள் கல்வித் தேவதை என்று கொண்டாடலாமா உன் தோழி யர்கள்?
கலைமகளா நான்? கலவி மகளாய்? அல்லவா ஆக்கி விட்டான் அந்தக் கழிசடைப் பிரம்மன் என்னை!
அன்பிற்கினிய தோழி,
என் கண்ணீர்க் கதையை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்.
என்னை யாரும் வணங்க வேண்டாமென என் சார்பில்  அவர்களைக் கேட்டுக் கொள்!
அதுவே நீ எனக்குச் செய்யும் அன்பான பேருதவி!
உனக்கு என் புரட்சி வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
கலைமகள்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...